ஈஸியா மஹிந்திரா கார் வாங்குவதற்கு புதிய கடன் திட்டங்கள் அறிமுகம்

புதிய மஹிந்திரா கார்களை வாங்குவதற்கு எளிமையான கடன் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஈஸியா மஹிந்திரா கார் வாங்குவதற்கு புதிய கடன் திட்டங்கள் அறிமுகம்

கொரோனா பாதிப்பால் கார் விற்பனையில் மிகப்பெரிய அடி விழுந்துள்ளது. இதில் இருந்து எழுந்து வருவதற்கு கார் நிறுவனங்கள் அதிக பிரத்யேனப்பட வேண்டி இருக்கிறது. மேலும், கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் உள்ள டீலர்களை திறந்து வைத்தாலும், தேசிய ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய பணிகள தவிர்த்து மக்கள் வீடுகளில் இன்னமும் முடங்கி இருக்க வேண்டிய சூழல் உள்ளது.

ஈஸியா மஹிந்திரா கார் வாங்குவதற்கு புதிய கடன் திட்டங்கள் அறிமுகம்

இந்த சூழலில், கார் விற்பனையை மீட்டெடுக்கும் விதமாக வாடிக்கையாளர்களை கவர்வதற்கு தயாரிப்பாளர்கள் பல சிறப்புச் சலுகைகளை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில், மஹிந்திரா நிறுவனமும் புதிய கார் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில், புதிய கார் வாங்கும் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு கடன் திட்டங்களை அறிவித்துள்ளது.

ஈஸியா மஹிந்திரா கார் வாங்குவதற்கு புதிய கடன் திட்டங்கள் அறிமுகம்

புதிய மஹிந்திரா கார் வாங்கு வாடிக்கையாளர்கள் தற்போதைய சூழலில் மாதத் தவணையை கட்டக்கூடிய நிலைமை இல்லாமல் இருந்தால், அடுத்த ஆண்டு முதல் கட்டும் வாய்ப்பை வழங்கும் கடன் திட்டம் வழங்கப்படுகிறது. இதனால், முதல் சில மாதங்களுக்கு மாதத் தவணை பிரச்னை இல்லாமல் புதிய மஹிந்திரா காரை வாங்கி விட முடியும்.

ஈஸியா மஹிந்திரா கார் வாங்குவதற்கு புதிய கடன் திட்டங்கள் அறிமுகம்

அதேபோன்று, புதிய மஹிந்திரா கார் வாங்கிய முதல் 90 நாட்களுக்கு மாதத் தவணை இல்லாத கடன் திட்டமும் உள்ளது. இந்த திட்டங்கள் மூலமாக தற்போதைய நிலையில் இருந்து எளிதாக அவர்கள் வெளியில் வந்த பின்னர் மாதத் தவணையை கட்டுவதற்கான வாய்ப்பு உள்ளது.

ஈஸியா மஹிந்திரா கார் வாங்குவதற்கு புதிய கடன் திட்டங்கள் அறிமுகம்

அதேபோன்று, பலூன் மற்றும் ஸ்டெப் அப் என்ற மாதத் தவணைத் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்களின்படி, கடன் திட்ட காலத்தில் ஆண்டுக்கு மூன்று மாதங்களுக்கு மாதத் தவணையில் 50 சதவீதத்தை மட்டுமே செலுத்துவதற்கான வசதி அளிக்கப்படுகிறது.

ஈஸியா மஹிந்திரா கார் வாங்குவதற்கு புதிய கடன் திட்டங்கள் அறிமுகம்

இதில், 25 சதவீத கடன் தொகையை கடைசியாக செலுத்தினால் போதுமானது. இந்த திட்டத்தில் லட்சத்திற்கு ரூ.1,234 என்ற மாதத் தவணையாக கணக்கிடப்படும்.

ஈஸியா மஹிந்திரா கார் வாங்குவதற்கு புதிய கடன் திட்டங்கள் அறிமுகம்

இதுதவிர்த்து, ஆன்ரோடு விலையில் 100 சதவீத கடன் பெறும் வசதியையும், அதிகபட்சமாக 8 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசமும் அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 7.75 சதவீத வட்டி விகிதம் கணக்கிடப்படுவதுடன், முன்கூட்டியே செலுத்தும்போது கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என்று மஹிந்திரா தெரிவித்துள்ளது.

ஈஸியா மஹிந்திரா கார் வாங்குவதற்கு புதிய கடன் திட்டங்கள் அறிமுகம்

மேலும், பெண் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு கடன் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, வட்டி விகிதத்தில் 10 பிபிஎஸ் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று மஹிந்திரா தெரிவித்துள்ளது. வட்டி விகிதத்தில் 0.1 சதவீதம் தள்ளுபடி பெறும் வாய்ப்பாக இது அமையும்.

ஈஸியா மஹிந்திரா கார் வாங்குவதற்கு புதிய கடன் திட்டங்கள் அறிமுகம்

கொரோனா தடுப்புப் போரில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு பிராசஸிங் கட்டணத்தில் 50 சதவீதம் கழித்து வழங்கப்படும். அத்துடன், 90 நாட்களுக்கு மாதத் தவணையிலிருந்து விலக்கு பெறுவதற்கான வாய்ப்பும் வழங்கப்படும். காவல் துறையினருக்கும் அதிகபட்ச கடன் பெறும் திட்டமும் உள்ளது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra has announced special loan schemes on new cars to improve car sales amidst coronavirus pandemic.
Story first published: Tuesday, May 19, 2020, 17:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X