பிஸியான சென்னை சாலையில் உலா வந்த வினோத வாகனம்.. அநேகரின் கவனத்தை ஈர்த்த இது என்ன வாகனம் தெரியுமா..?

தமிழக தலைநகரான சென்னையின் பிஸியான சாலை ஒன்றில் விநோதமான கார் ஒன்று உலா வந்துள்ளது. இது பாதசாரிகள் முதல் வாகன ஓட்டிகள் வரை அனைவரின் கவனத்தையும் திருப்பும் வகையில் இருந்தது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

பிஸியான சென்னை சாலையில் உலா வந்த வினோத வாகனம்.. அநேகரின் கவனத்தை ஈர்த்த இது என்ன வாகனம் தெரியுமா..?

தமிழகத்தின் தலைநகரான சென்னையின் பிஸியான சாலையில் மிகவும் வித்தியாசான தோற்றம் கொண்ட ஓர் கார் மறைப்புகளுடன் உலா வந்துள்ளது. மிகவும் ஆச்சரியமளிக்கும் தோற்றத்தில் அந்த கார் இருந்ததால், சாலையில் சென்ற பலரின் கவனத்தை ஈர்த்தது.

மேலும், இது என்ன காராக இருக்கலாம் என்ற கேள்வியையும் அனேகரின் மத்தியில் அது தோற்றுவித்தது. அப்படி என்ன கார் சாலையில் தோன்றியது என்பதுகுறித்த தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

பிஸியான சென்னை சாலையில் உலா வந்த வினோத வாகனம்.. அநேகரின் கவனத்தை ஈர்த்த இது என்ன வாகனம் தெரியுமா..?

விரைவில் மஹிந்திரா நிறுவனத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட உள்ள எலெக்ட்ரி கார்தான் தற்போது ஸ்பை செய்யப்பட்டுள்ளது. இதற்கு அந்நிறுவனம் அடாம் என்ற பெயரை வைத்துள்ளது. இது, காரின் தோற்றத்தைப் பெற்றிருக்கும் குவாட்ரி சைக்கிள் ரக வாகனம் ஆகும்.

பிஸியான சென்னை சாலையில் உலா வந்த வினோத வாகனம்.. அநேகரின் கவனத்தை ஈர்த்த இது என்ன வாகனம் தெரியுமா..?

அதாவது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பஜாஜ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த க்யூட் குவாட்ரி சைக்கிள் மாடலைப் போன்றதாகும் இந்த மஹிந்திரா அடாம். தற்போது, பஜாஜ் நிறுவனமும் இந்த க்யூட் குவாட்ரி சைக்கிளை மின்சார தரத்திற்கு இணையாக தயாரித்து வருவது குறிப்பிடத்தகுந்தது.

பிஸியான சென்னை சாலையில் உலா வந்த வினோத வாகனம்.. அநேகரின் கவனத்தை ஈர்த்த இது என்ன வாகனம் தெரியுமா..?

மஹிந்திரா நிறுவனம் இந்த சிறப்பு (அடாம் குவாட்ரிசைக்கிள்) மாடல்குறித்த டீசர் வீடியோவை சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, இதனை இம்மாதம் நடைபெறவிருக்கின்ற ஆட்டோ எக்ஸ்போவிலும் அது அறிமுகம் செய்யவிருக்கின்றது.

இந்நிலையிலேயே இந்த குவாட்ரி சைக்கிள் டைப்பிலான மின்சார வாகனத்தை அவ்வப்போது சாலையில் வைத்து பல பரீட்சையை அந்நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது. இந்த தீவிர நடவடிக்கையை வைத்து பார்க்கையில் இந்த கார் மிக விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிஸியான சென்னை சாலையில் உலா வந்த வினோத வாகனம்.. அநேகரின் கவனத்தை ஈர்த்த இது என்ன வாகனம் தெரியுமா..?

அதன்படி, நடப்பாண்டின் மூன்றாம் காலாண்டில் இந்த குவாட்ரி சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகின்றது. மஹிந்திரா நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற வாகன கண்காட்சியிலேயே இந்த வாகனத்தை அறிமுகம் செய்துவிட்டது.

பிஸியான சென்னை சாலையில் உலா வந்த வினோத வாகனம்.. அநேகரின் கவனத்தை ஈர்த்த இது என்ன வாகனம் தெரியுமா..?

அப்போது முன்மாதிரி மாடலாகவே அது காட்சிப்படுத்தப்பட்டது. இதையடுத்து தற்போது அடுத்தகட்ட இலக்கிற்கு இந்த மின்சார வாகனம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனையே இந்த பரிசோதனை நடவடிக்கை எடுத்துரைக்கின்றது.

அந்தவகையில், ஏற்கனவே இந்த வாகனம் பல பரீட்சையில் ஈடுபடுத்தப்பட்டபோது ஸ்பை செய்யப்பட்டது. தொடர்ந்து, தற்போது மீண்டுமொருமுறை ஸ்பை செய்யப்பட்டுள்ளது.

பிஸியான சென்னை சாலையில் உலா வந்த வினோத வாகனம்.. அநேகரின் கவனத்தை ஈர்த்த இது என்ன வாகனம் தெரியுமா..?

இந்த ஸ்பை படங்கள் காரின் ஒரு சில சிறப்பு தகவலை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றன. குறிப்பாக தோற்றம், இருக்கை அமைப்பு போன்ற சில குறிப்பிட்ட வசதிகளின் தகவலை மட்டும் நமக்கு வழங்குகின்றது. அவ்வாறு, இதன் தோற்றத்தை வைத்து பார்க்கையில் 3-ல் இருந்து 4 இருக்கைகளைக் கொண்ட மாடலாக இது இருக்கலாம் என கூறப்படுகின்றது.

இந்த குவாட்ரி சைக்கிளில் ஸ்வாப்பபில் எனப்படும் கழட்டி மாட்டும் வசதிக்கொண்ட பேட்டரிகள் இடம்பெற்றலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேபோன்று, சில அதிகாரப்பூர்வமற்ற தகவல்களும் தற்போது வைரலாக தொடங்கியுள்ளது. குறிப்பாக இந்த வாகனத்தில் 48kW மின் மோட்டார் பொருதத்தப்பட்டிருப்பதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 20 எச்பி திறன் மற்றும் டாப் ஸ்பீட் 70 கிமீ என்பவையாகும்.

பிஸியான சென்னை சாலையில் உலா வந்த வினோத வாகனம்.. அநேகரின் கவனத்தை ஈர்த்த இது என்ன வாகனம் தெரியுமா..?

மஹிந்திரா நிறுவனம் இந்த அடாம் மின்சார வாகனத்தின் உற்பத்தியை பெங்களூருவில் உள்ள உற்பத்தியாலையில் வைத்து மேற்கொள்ளவிருக்கின்றது. இங்குதான் இந்த குவாட்ரிசைக்கிளின் மூதாதையர்களான இ2ஓ மற்றும் இ2ஓ ப்ளஸ் மின்வாகனங்கள் தயாரிக்கப்பட்டன.

தற்போது ஸ்பை செய்யப்பட்டிருக்கும் இந்த மின்சார வாகனத்தின் கூடுதல் சிறப்பு தகவல்கள் அதன் வெளியீடு நாளான வருகின்ற 5ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

பிஸியான சென்னை சாலையில் உலா வந்த வினோத வாகனம்.. அநேகரின் கவனத்தை ஈர்த்த இது என்ன வாகனம் தெரியுமா..?

மஹிந்திரா நிறுவனம் இந்த அடாம் வாகனத்தை மட்டுமின்றி கேயூவி 100 மற்றும் எக்ஸ்யூவி 300 ஆகிய கார்களின் எலெக்டரிக் மாடல்களையும் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இத்துடன், எக்ஸ்யூவி500 எலெக்ட்ரிக் காரின் கான்செப்டும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஆகையால், நடப்பாண்டின் ஆட்டோ எக்ஸ்போ சற்றே ஸ்பெஷலானதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிஸியான சென்னை சாலையில் உலா வந்த வினோத வாகனம்.. அநேகரின் கவனத்தை ஈர்த்த இது என்ன வாகனம் தெரியுமா..?

இதுமட்டுமின்றி, நாட்டின் மேலும்சில முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களும் தங்களின் பிரத்யேக மாடல்களை விரைவில் நடபெறவிருக்கும் வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்ய இருக்கின்றது.

Most Read Articles
English summary
Mahindra Atom QuadriCycle EV Spied Near Chennai. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X