மஹிந்திராவின் ஆட்டம் எலெக்ட்ரிக் வாகனம் குறித்த ஏமாற்றமான தகவல்!

மஹிந்திரா ஆட்டம் எலெக்ட்ரிக் குவாட்ரிசைக்கிள் வாகனம் பற்றி இந்தியர்களுக்கு ஏமாற்றத்தை தரும் செய்தி வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

மஹிந்திராவின் ஆட்டம் எலெக்ட்ரிக் வாகனம் குறித்த ஏமாற்றமான தகவல்!

நகர்ப்புறத்தில் வாகனங்களால் அதிகரித்து வரும் மாசு பிரச்னையை சமாளிக்க மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு தக்கவாறான மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை உருவாக்குவதில் வாகன நிறுவனங்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.

மஹிந்திராவின் ஆட்டம் எலெக்ட்ரிக் வாகனம் குறித்த ஏமாற்றமான தகவல்!

அந்த வகையில், மஹிந்திரா நிறுவனமும் மின்சார வாகனத் தயாரிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மேலும், கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் மஹிந்திரா நிறுவனம் ஆட்டம் (Atom) என்ற குவாட்ரிசைக்கிள் வாகனத்தை பார்வைக்கு வைத்திருந்தது.

மஹிந்திராவின் ஆட்டம் எலெக்ட்ரிக் வாகனம் குறித்த ஏமாற்றமான தகவல்!

நகர்ப்புற பயன்பாட்டில் ஆட்டோரிக்ஷாவிற்கு சரியான மாற்றாக இந்த வாகனத்தை நிலைநிறுத்த திட்டமிட்டு இருக்கிறது. அதாவது, பஜாஜ் க்யூட் வாகனத்திற்கு நேரடி போட்டியாக இருக்கும்.

மஹிந்திராவின் ஆட்டம் எலெக்ட்ரிக் வாகனம் குறித்த ஏமாற்றமான தகவல்!

இந்த நிலையில், கொரோனா பிரச்னை தலை தூக்கியதால், ஆட்டம் குவாட்ரிசைக்கிள் வாகனத்தின் அறிமுகத்தை மஹிந்திரா தள்ளிப் போட்டுள்ளது. கார் அண்ட் பைக் தளத்திடம் பேசிய மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைமை செயல் அதிகாரி வீஜே ராம் நக்ரா இதனை உறுதிப்படுத்தி உள்ளார்.

மஹிந்திராவின் ஆட்டம் எலெக்ட்ரிக் வாகனம் குறித்த ஏமாற்றமான தகவல்!

ஆட்டம் எலெக்ட்ரிக் வாகனத்தை இந்த ஆண்டு மூன்றாவது காலாண்டில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு மஹிந்திரா திட்டமிட்டு இருந்தது. வரும் அக்டோபரில் மாதத்தில் இந்த மின்சார வாகனம் சந்தைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மஹிந்திராவின் ஆட்டம் எலெக்ட்ரிக் வாகனம் குறித்த ஏமாற்றமான தகவல்!

ஆனால், இந்த வாகனத்திற்கான சோதனை ஓட்டம், உதிரிபாகங்கள் சப்ளை உள்ளிட்டவற்றில் பிரச்னை ஏற்பட்டுள்ளதால், இந்த வாகனத்தின் அறிமுகத்தை அடுத்த ஆண்டு தள்ளிப்போட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மஹிந்திராவின் ஆட்டம் எலெக்ட்ரிக் வாகனம் குறித்த ஏமாற்றமான தகவல்!

இந்த வாகனத்தில் மொபைல் சார்ஜர், ஏசி வென்ட்டுகள், மூன்று பயணிகள் செல்வதற்கான வசதி, தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பின் இருக்கை பயணிகளுக்கான டிவி திரை ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

மஹிந்திராவின் ஆட்டம் எலெக்ட்ரிக் வாகனம் குறித்த ஏமாற்றமான தகவல்!

இந்த எலெக்ட்ரிக் வாகனத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் விபரங்கள் வெளியிடப்படவில்லை. எனினும், இந்த வாகனத்தில் 15kW மின் மோட்டார் பயன்படுத்தப்படும். இதன் மின் மோட்டார் 20 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். மணிக்கு 70 கிமீ வேகம் வரை செல்லும்.

மஹிந்திராவின் ஆட்டம் எலெக்ட்ரிக் வாகனம் குறித்த ஏமாற்றமான தகவல்!

இந்த எலெக்ட்ரிக் குவாட்ரிசைக்கிள் வாகனத்தில் பேட்டரியை மாற்றும் வாய்ப்பு இடம்பெறுகிறது அதாவது, பேட்டரியில் சார்ஜ் தீர்ந்து போனால், உடனடியாக சார்ஜ் உள்ள பேட்டரியை போட்டு பயணத்தை தொடரலாம்.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra Atom electric-quadricycle launch has been delayed in the country due to the ongoing Covid-19 pandemic and the subsequent lockdown announced in India. Initially, the quadricycle was scheduled for launch this year.
Story first published: Monday, May 18, 2020, 16:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X