மஹிந்திரா பிஎஸ்-6 வர்த்தக வாகனங்களுக்கான கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம்

மஹிந்திரா பிஎஸ்-6 வர்த்தக வாகனங்களுக்கான கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மஹிந்திரா வர்த்தக வாகன ஓட்டுனர்களுக்கும், உரிமையாளர்களுக்கும் வரப்பிரசாதமாக அமைய இருக்கும் இந்த தொழில்நுட்பம் குறித்த முழுமையானத் தகவல்களை இந்த செய்தியில் தொடர்ந்து காணலாம்.

மஹிந்திரா பிஎஸ்-6 வர்த்தக வாகனங்களுக்கான கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம்

கார்களை போன்று இன்டர்நெட் வசதியுடன் கூடிய கனெக்ட்டிவிட்டி சாதனத்தை வர்த்தக வாகனங்களில் அறிமுகம் செய்வதில் கனரக வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. அண்மையில் ஐஷர் நிறுவனம் தனது பிஎஸ்-6 வாகனங்களுக்கான கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்ப வசதியை அறிவித்தது.

மஹிந்திரா பிஎஸ்-6 வர்த்தக வாகனங்களுக்கான கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம்

இதைத்தொடர்ந்து, தற்போது மஹிந்திரா நிறுவனமும் தனது அனைத்து வர்த்தக வாகனங்களிலும் இன்டர்நெட் வசதி மூலமாக செயல்படும் கனெக்ட்டிவிட்டி வசதியை அறிமுகம் செய்ய இருக்கிறது.

மஹிந்திரா பிஎஸ்-6 வர்த்தக வாகனங்களுக்கான கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம்

மஹிந்திராவின் பிளேஸோ எக்ஸ் ரேஞ்ச் கனரக வாகனங்கள், ஃப்யூரியோ ரேஞ்ச் மற்றும் சிறிய ரக வர்த்தக வாகனங்களிலும் இந்த கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம் வழங்கப்பட உள்ளது. பிஎஸ்-6 எஞ்சினுடன் வரும் மஹிந்திராவின் அனைத்து வர்த்தக வாகனங்களிலும் இந்த தொழில்நுட்ப வசதி இடம்பெறும்.

மஹிந்திரா பிஎஸ்-6 வர்த்தக வாகனங்களுக்கான கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம்

மஹிந்திராவின் கனெகெட்டிவிட்டி தொழில்நுட்பமானது iMAXX என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. டியூவல் கேன் கன்ட்ரோலர் ஏரியா நெட்வொர்க் தொழில்நுட்பம், 4ஜி இணைய வசதி, செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட கம்ப்யூட்டர் உள்ளிட்டவற்றை ஒருங்கிணைந்த அமைப்பாக ஐமேக்ஸ் செயல்படும்.

மஹிந்திரா பிஎஸ்-6 வர்த்தக வாகனங்களுக்கான கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம்

வாகனத்தின் இயக்கம், பழுது ஏற்படும் வாய்ப்பு, வாகனத்தின் இருப்பிடத் தகவல்களை நிக்ழ்நேர முறையில் கண்டறிந்து கொள்ள முடியும். வாகனத்தின் எஞ்சின் கூலிங் சிஸ்டத்தில் ஏற்பட இருக்கும் பழுது தொடர்பான விஷயங்களை 33 மணிநேரத்திற்கு முன்னரே தெரிந்து கொள்ளும் வாய்ப்பை வழங்கும். இதன்மூலமாக, பெரிய அளவிலான பழுது ஏற்பட்டு நடுவழியில் நிற்பதை தவிர்ப்பதற்கான வாய்ப்பை ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் பெற முடியும்.

மஹிந்திரா பிஎஸ்-6 வர்த்தக வாகனங்களுக்கான கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம்

இந்த புதிய சாதனம் தரும் தரவுகளின் அடிப்படையில், மஹிந்திரா பிஎஸ்4 வர்த்தக வாகனங்களின் எரிபொருள் சிக்கனம் 10 சதவீதம் கூடி இருக்கிறது. எனவே, தற்போது இதனைவிட அதிக எரிபொருள் சிக்கனத்தை பெறும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா பிஎஸ்-6 வர்த்தக வாகனங்களுக்கான கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம்

இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலமாக உரிமையாளர்கள் எளிதாக தங்களது வாகனத்தை கண்காணிக்கவும், பழுது வாய்ப்புகளை கண்டறிய வாய்ப்பு ஏற்படும். அதேபோன்று, ஓட்டுனர்களும் பழுது வாய்ப்புகளை முன்கூட்டியே தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பை இந்த தொழில்நுட்பம் வழங்கும்.

Most Read Articles
English summary
Mahindra has launched iMAXX telematics system for its BS6 commercial vehicles range in India.
Story first published: Monday, August 24, 2020, 17:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X