மஹிந்திரா-டிவிஎஸ் கூட்டணி... தரமான சம்பவம்... ஆடிப்போய் நிற்கும் யூஸ்டு கார் விற்பனையாளர்கள்...

இந்தியாவின் நான்கு சக்கர வாகன உலகின் ஜாம்பவானான மஹிந்திராவும், இருசக்கர வாகன உலகின் ஜாம்பவானான டிவிஎஸ் நிறுவனமும் கூட்டணி சேர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மஹிந்திரா-டிவிஎஸ் கூட்டணி... தரமான சம்பவம்... ஆடிப்போய் நிற்கும் யூஸ்டு கார் விற்பனையாளர்கள்...

இந்தியாவின் நான்கு சக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திராவும், இந்திய இருசக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனமும் கூட்டு சேர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கூட்டணி எதற்காக என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

மஹிந்திரா-டிவிஎஸ் கூட்டணி... தரமான சம்பவம்... ஆடிப்போய் நிற்கும் யூஸ்டு கார் விற்பனையாளர்கள்...

மஹிந்திரா புதிய கார்களை மட்டுமின்றி தன்னுடைய நிறுவனத்தின் பயன்படுத்தப்பட்ட கார்களை (யூஸ்டு கார்களை) 'மஹிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ்' எனும் கிளை பிரிவின்கீழ் விற்பனைச் செய்து வருகின்றது. இதன் விரிவாக்கம் செய்யும் வகையிலேயே மஹிந்திரா, டிவிஎஸ் நிறுவனத்துடன் கூட்டணியைத் தொடங்கியுள்ளது.

மஹிந்திரா-டிவிஎஸ் கூட்டணி... தரமான சம்பவம்... ஆடிப்போய் நிற்கும் யூஸ்டு கார் விற்பனையாளர்கள்...

இந்த இணைவின் மூலம் இரு நிறுவனங்களும் சேர்ந்து பன்முக பிராண்டுகளின் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை சுதந்திரமாக சந்தையில் விற்பனைச் செய்ய இருக்கின்றன. இதற்காகவே இந்த கூட்டணி தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இரு நிறுவனங்களும் தங்களின் படர்ந்து காணப்படும் யூஸ்டு வாகன விற்பனை நிலையங்களை மாறி மாறி பயன்படுத்திக் கொள்ள இருக்கின்றன.

மஹிந்திரா-டிவிஎஸ் கூட்டணி... தரமான சம்பவம்... ஆடிப்போய் நிற்கும் யூஸ்டு கார் விற்பனையாளர்கள்...

மேலும், இந்த இணைவின் மூலம் டிவிஎஸ் ஆட்டோமொபைல் சர்வீசஸால், மஹிந்திரா நிறுவனத்தின் ஃபர்ஸ்ட் சாய்ஸ் நிறுவனத்தை முழு அனுமதியுடன் கட்டுப்படுத்த முடியும். ஆகையால், தற்போது ஆங்காங்கே காணப்படும் இதன் நிலையங்கள் தற்போது ஒருங்கிணைய இருக்கின்றன.

மஹிந்திரா-டிவிஎஸ் கூட்டணி... தரமான சம்பவம்... ஆடிப்போய் நிற்கும் யூஸ்டு கார் விற்பனையாளர்கள்...

மஹிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ் நிறுவனத்தின்கீழ், நாட்டின் 25 மாநிலங்களில் உள்ள 350 நகரங்களில் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களில் 475 க்கும் மேற்பட்ட உரிமைதாரர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் உள்ளனர். இத்தகைய மிகப்பெரிய நெட்வொர்க்கையே டிவிஎஸ் ஆட்டோமொபைல் சர்வீசஸ் வழிநடத்த இருக்கின்றது.

மஹிந்திரா-டிவிஎஸ் கூட்டணி... தரமான சம்பவம்... ஆடிப்போய் நிற்கும் யூஸ்டு கார் விற்பனையாளர்கள்...

இந்த இணைவுகுறித்து டிவிஎஸ் ஆட்டோமொபைல் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் ஆர்.தினேஷ் கூறியதாவது, "மிகப்பெரிய நெட்வொர்க்குகளுடன் இரு நிறுவனங்களும் நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. எனவே இந்த ஒப்பந்தத்தில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்தியாவில் 10 பில்லியன் டாலர் மதிப்பிலான சந்தைக்குப்பிறகான வர்த்தகம் துண்டு துண்டாக உள்ளது. இதனை இரு நிறுவனங்களின் இணைவு இணைக்கும்" என்றார்.

மஹிந்திரா-டிவிஎஸ் கூட்டணி... தரமான சம்பவம்... ஆடிப்போய் நிற்கும் யூஸ்டு கார் விற்பனையாளர்கள்...

இந்தியாவில் புதுமுக வாகனங்களுக்கு இருப்பதைப் போலவே பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கான சந்தையும் நல்ல பரந்தளவில் காணப்படுகின்றது. எனவேதான், சில முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள்கூட பயன்படுத்தப்பட்ட வாகனங்களை விற்பனைச் செய்யும் ஈடுபட்டு வருகின்றன.

Most Read Articles

English summary
Mahindra First Choice Services Now A Subsidiary Of TVS Automobile Solutions. Read In Tamil.
Story first published: Friday, November 27, 2020, 13:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X