வாகன தயாரிப்பில் 70 ஆண்டுகள் நிறைவு... பழையது அனைத்தையும் நினைத்தும் பார்க்கும் மஹிந்திரா...

மஹிந்திரா க்ரூப் நிறுவனத்தின் வாகன பாரம்பரியத்தை நினைவுகூரும் வகையில் புதிய பிராண்ட் தொடர்பு பிரச்சாரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

வாகன தயாரிப்பில் 70 ஆண்டுகள் நிறைவு... பழையது அனைத்தையும் நினைத்தும் பார்க்கும் மஹிந்திரா...

மஹிந்திரா க்ரூப் கடந்த எழுபது ஆண்டுகளில் அந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ள தனித்துவமான எஸ்யூவிகளை கௌரவப்படுத்தும் வகையில் புதிய டீசர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

வாகன தயாரிப்பில் 70 ஆண்டுகள் நிறைவு... பழையது அனைத்தையும் நினைத்தும் பார்க்கும் மஹிந்திரா...

முதன்முதலாக 1949 வெளிவந்த வில்லிஸ் ஜீப் மாடலில் இருந்து ஆரம்பிக்கும் இந்த வீடியோவில் கிளாசிக் 4x4, மஹிந்திரா மேஜர் என தற்போதைய தலைமுறை மஹிந்திரா தார் மாடல் வரையில் அனைத்தும் காட்டப்படுகின்றன.

வாகன தயாரிப்பில் 70 ஆண்டுகள் நிறைவு... பழையது அனைத்தையும் நினைத்தும் பார்க்கும் மஹிந்திரா...

இந்த பிரச்சாரம் குறித்து மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் பிரிவு-சிஇஒ, வீஜய் நக்ரா கருத்து தெரிவிக்கையில், இந்த மஹிந்திரா கிளாசிக் பிரச்சாரம் ஆனது மஹிந்திராவின் பணக்காரர்களின் வாகன பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வாகன தயாரிப்பில் 70 ஆண்டுகள் நிறைவு... பழையது அனைத்தையும் நினைத்தும் பார்க்கும் மஹிந்திரா...

இந்த பிரச்சாரம் நிச்சயம் வாடிக்கையாளர்கள் மஹிந்திரா ப்ராண்ட் உடனான நினைவுகளை மீண்டும் அசைப்போட உதவும். மேலும் இது எங்கு நாங்கள் ஆரம்பித்தோம், தற்போது எந்த நிலையில் உள்ளோம் என்பதையும் ஒரு பார்வையாக அவர்களுக்கு வழங்கும்.

வாகன தயாரிப்பில் 70 ஆண்டுகள் நிறைவு... பழையது அனைத்தையும் நினைத்தும் பார்க்கும் மஹிந்திரா...

அதேநேரம் மஹிந்திராவின் எஸ்யூவி மாடல்களை பயன்படுத்தி வருபவர்களும், பயன்படுத்தியவர்களும் வாகனத்துடனான தங்களது அனுபவங்களை விவரிக்க வேண்டும் என விரும்புகிறோம் என தெரிவித்தார். 1949ல் வில்லிஸ் ஜீப் மூலமாக ஆரம்பித்த மஹிந்திராவின் தயாரிப்பு பணிகளில், சிறிது காலத்தில் அதாவது 1950களில் குறிப்பிட்ட பயன்பாட்டிற்கான இராணுவ வாகனங்களும் இணைந்து கொண்டன.

வாகன தயாரிப்பில் 70 ஆண்டுகள் நிறைவு... பழையது அனைத்தையும் நினைத்தும் பார்க்கும் மஹிந்திரா...

பொதுமக்களுக்கு மஹிந்திரா ப்ராண்ட்டில் 1970களில் இருந்து தான் எஸ்யூவிகள் விற்பனை செய்வது துவங்கப்பட்டது. ஆனால் மிக விரைவாகவே அவை அவர்களது வாழ்வின் ஒரு அங்கமாக மாறவே, எம்எம்440, கிளாசிக் 4X4, மேஜர் மற்றும் தார் போன்ற மாடல்கள் சந்தையில் நுழைந்தன. இதில் தார் மாடலின் புதிய தலைமுறை கார் வருகிற அக்டோபர் மாதத்தில் அறிமுகமாகவுள்ளது.

இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மஹிந்திரா எஸ்யூவி மாடல்களின் உரிமையாளர்களின் அனுபவங்களை வெளியிட மஹிந்திரா க்ரூப் திட்டமிட்டுள்ளது. இந்த வகையில் தனது வாடிக்கையாளர்களை சந்திக்கவுள்ள இந்த நிறுவனம் வினாடி வினாக்கள் மற்றும் மற்ற டிஜிட்டல் செயல்பாடுகள் மூலம் அவர்களுடன் நேரத்தை செலவிடவுள்ளது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
The Mahindra Classics Creating new roads since 1949
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X