அடுத்தடுத்து அறிமுகமாக உள்ள மஹிந்திரா கார்கள்! லிஸ்டில் நமக்கான கார் ஏதாச்சும் இருக்கா? முழு விபரம்!

மஹிந்திரா நிறுவனம் விரைவில் விற்பனைக்கு களமிறக்க இருக்கும் கார்கள் எவை என்பது பற்றிய தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

அடுத்தடுத்து அறிமுகமாக உள்ள மஹிந்திரா கார்கள்... லிஸ்டில் நமக்கான கார் ஏதாச்சும் இருக்கா? வாங்க பாத்திடலாம்...

இந்தியர்களை மிகுந்த எதிர்பார்ப்பில் ஆழ்த்தி வந்த தார் எஸ்யூவி கார் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த காருக்கு தற்போது எதிர்பார்த்திராத அளவிலான டிமாண்ட் நாட்டில் நிலவி வருகின்றது. சில குறிப்பிட்ட மாடல்களின் புக்கிங்கை நிறுத்தி வைக்கின்ற அளவிற்கு அதன் புக்கிங் தீவிரமடைந்து காணப்படுகின்றது.

அடுத்தடுத்து அறிமுகமாக உள்ள மஹிந்திரா கார்கள்... லிஸ்டில் நமக்கான கார் ஏதாச்சும் இருக்கா? வாங்க பாத்திடலாம்...

இந்த நிலையில், தார் காரைப் போலவே இந்தியர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் மஹிந்திரா நிறுவனத்தின் பிற கார்கள் எப்போது அறிமுகமாகும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம். இதில், ஏதேனும் கார் மாடல் நமக்கு பொருந்தும் வகையில் இருக்கின்றதா என்ற தகவலை இப்பதிவில் காணலாம்.

அடுத்தடுத்து அறிமுகமாக உள்ள மஹிந்திரா கார்கள்... லிஸ்டில் நமக்கான கார் ஏதாச்சும் இருக்கா? வாங்க பாத்திடலாம்...

மஹிந்திரா நிறுவனம் அடுத்ததாக இந்தியாவிற்காக ஐந்து புத்தம் புதிய மாடல்களை தயார்நிலையில் வைத்திருக்கின்றது. இவற்றையே வரும் ஆண்டில் அடுத்தடுத்ததாக அது அறிமுகம் செய்ய இருக்கின்றது. ஆனால், அதிகாரப்பூர்வ தேதி உள்ளிட்ட விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், 2021ம் ஆண்டிற்குள்ளாகவே தற்போது நாம் பார்க்க இருக்கும் 5 கார்களும் அறிமுகமாகிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்தடுத்து அறிமுகமாக உள்ள மஹிந்திரா கார்கள்... லிஸ்டில் நமக்கான கார் ஏதாச்சும் இருக்கா? வாங்க பாத்திடலாம்...

இதில், இரண்டு மின்சார கார்கள் ஆகும். இதில், ஒன்றை பிப்ரவரி மாதம் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போவில் மஹிந்திரா நிறுவனம் காட்சிப்படுத்தியிருந்தது. இகேயூவி100 மின்சார காரே அது. இதுவே இந்தியர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் மின்சார காராக இருக்கின்றது. இது விலைக்குறைந்த மின்சார காராக விற்பனைக்கு வரவிருக்கின்றது.

அடுத்தடுத்து அறிமுகமாக உள்ள மஹிந்திரா கார்கள்... லிஸ்டில் நமக்கான கார் ஏதாச்சும் இருக்கா? வாங்க பாத்திடலாம்...

இதைத்தொடர்ந்து, எக்யூவி300 மாடலிலான எஸ்யூவி எலெக்ட்ரிக் காரும் விரைவில் அறிமுகமாக இருக்கும் மஹிந்திரா கார்களின் பட்டியலில் இருக்கின்றது. இகேயூவி 100 மின்சார கார் ரூ. 8.25 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்காரில் லிக்யூடு கூல்டு பேட்டரி பேக் எதிர்பார்க்கப்படுகின்றது.

அடுத்தடுத்து அறிமுகமாக உள்ள மஹிந்திரா கார்கள்... லிஸ்டில் நமக்கான கார் ஏதாச்சும் இருக்கா? வாங்க பாத்திடலாம்...

இத்துடன், வேகமான சார்ஜ் திறன், தானியங்கி வேகக்கட்டுப்பாடு மற்றும் ரிமோட் இணைப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இகேயூவி100 மின்சார காரில் எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போதைய கொரோனா வைரஸ் பரவல் பாதிப்பின் காரணமாக இக்காரின் அறிமுகம் அடுத்த ஆண்டிற்கு தள்ளிபோயுள்ளது.

அடுத்தடுத்து அறிமுகமாக உள்ள மஹிந்திரா கார்கள்... லிஸ்டில் நமக்கான கார் ஏதாச்சும் இருக்கா? வாங்க பாத்திடலாம்...

இகேயூவி100 மின்சார காரில் இடம்பெற்றிருப்பதைப் போலவே பன்முக சிறப்பு வசதிகளை எக்யூவி300 மின்சார காரும் பெற இருக்கின்றது. இது சப்-காம்பேக் எஸ்யூவி காராகும். இந்த ரக கார்களுக்கு இந்தியாவில் ஏகபோகமான வரவேற்பு நிலவி வருகின்றது.

அடுத்தடுத்து அறிமுகமாக உள்ள மஹிந்திரா கார்கள்... லிஸ்டில் நமக்கான கார் ஏதாச்சும் இருக்கா? வாங்க பாத்திடலாம்...

இத்துடன், மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எந்திர தொழில்நுட்பமான மெஸ்மா 350 மற்றும் 350 கிமீ ரேஞ்ஜ் உள்ளிட்டவை அக்காரில் எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது விற்பனையில் இருக்கும் எரிபொருளால் இயங்கும் எக்ஸ்யூவி300 மாடல் கார் இந்தியாவின் பாதுகாப்பான கார்களில் ஒன்று. எனவேதான் இந்த மாடலில் மின்சார வெர்ஷனில் வரவிருக்கும் காருக்கு இந்தியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு சற்று தூக்கலாகக் காணப்படுகின்றது.

அடுத்தடுத்து அறிமுகமாக உள்ள மஹிந்திரா கார்கள்... லிஸ்டில் நமக்கான கார் ஏதாச்சும் இருக்கா? வாங்க பாத்திடலாம்...

இதைத்தொடர்ந்து, புதுப்பித்தல் பணிகளைச் சந்தித்து வரும் ஸ்கார்பியோ, டியூவி300 மற்றும் எக்ஸ்யூவி 500 ஆகிய கார்களும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, ஸ்கார்பியோ மற்றும் எக்ஸ்யூவி500 கார்கள் மீதான வரவேற்பு சற்று அதிகமாகவே காணப்படுகின்றது. இந்த கார்களும் மஹிந்திரா நிறுவனத்தின் விரைவில் அறிமுகமாக இருக்கும் கார்களின் பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றன.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra's 5 Flagship Car Models Awaiting Launch. Read In Tamil.
Story first published: Monday, November 23, 2020, 12:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X