பார் வசதிதான் ஹைலைட்! உல்லாச கப்பலாக மாற்றப்பட்ட மஹிந்திரா ஸ்கார்பியோ கார்... பாக்கவே ஆசையா இருக்கு

மஹிந்திரா ஸ்கார்பியோ கார் ஒன்று உல்லாச கப்பலாக மாற்றப்பட்டுள்ளது. இதில் இருக்கும் சொகுசு வசதிகள் பிரம்மிப்பை ஏற்படுத்துகின்றன.

பார் வசதிதான் ஹைலைட்! உல்லாச கப்பலாக மாற்றப்பட்ட மஹிந்திரா ஸ்கார்பியோ கார்... பாக்கவே ஆசையா இருக்கு

இந்தியாவில் வாகனங்களை மாடிபிகேஷன் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சாலைகளில், மாடிபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்கள் ஓடி கொண்டுதான் உள்ளன. இந்திய கார்களில் ஏராளமான மாடிபிகேஷன்கள் செய்யப்பட்டாலும் கூட, அவற்றை லிமோசைன் காராக மாற்றுவதற்கு யாரும் முயல்வதில்லை.

பார் வசதிதான் ஹைலைட்! உல்லாச கப்பலாக மாற்றப்பட்ட மஹிந்திரா ஸ்கார்பியோ கார்... பாக்கவே ஆசையா இருக்கு

இந்திய கார்களை லிமோசைன் கார்களாக மாற்றும் மாடிபிகேஷன்களை காண்பது அரிதான ஒரு விஷயம். அப்படி ஒரு அரிதான மாடிபிகேஷன் தற்போது செய்யப்பட்டுள்ளது. ஆம், மஹிந்திரா ஸ்கார்பியோ கார் ஒன்று, லிமோசைன் காராக மாடிபிகேஷன் செய்யப்பட்டுள்ளது. மஹிந்திரா ஸ்கார்பியோ இந்திய மார்க்கெட்டில் மிகவும் பிரபலமாக இருக்கும் எஸ்யூவி கார்களில் ஒன்று.

பார் வசதிதான் ஹைலைட்! உல்லாச கப்பலாக மாற்றப்பட்ட மஹிந்திரா ஸ்கார்பியோ கார்... பாக்கவே ஆசையா இருக்கு

அந்த காரைதான் லிமோசைன் காராக மாடிபிகேஷன் செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ MAGNETO 11 என்ற யூ-டியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. லிமோசைன் கார்களுக்கே உரிய பாணியில், இந்த கார் மிக நீளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் சுமார் 32 அடி. வழக்கமான ஸ்கார்பியோ காரின் நீளத்தை விட இதன் நீளம் 2 மடங்கு அதிகரிக்கப்பட்டிருப்பதை போல் தெரிகிறது.

பார் வசதிதான் ஹைலைட்! உல்லாச கப்பலாக மாற்றப்பட்ட மஹிந்திரா ஸ்கார்பியோ கார்... பாக்கவே ஆசையா இருக்கு

ஆனால் வழக்கமான மஹிந்திரா ஸ்கார்பியோ காரை போன்று, ஐந்து டோர் செட் அப்பில்தான் இந்த காரும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த காரின் முன் மற்றும் பின் பகுதிகள் பார்ப்பதற்கு வழக்கமான மஹிந்திரா ஸ்கார்பியோ போன்றுதான் உள்ளன. ஆனால் புதிய 17 இன்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பார் வசதிதான் ஹைலைட்! உல்லாச கப்பலாக மாற்றப்பட்ட மஹிந்திரா ஸ்கார்பியோ கார்... பாக்கவே ஆசையா இருக்கு

அதே சமயம் இந்த காரின் கேபின் முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளது. பார் போன்று செயல்படக்கூடிய நீளமாக டேபிளையும் இந்த கார் பெற்றுள்ளது. சோபா, திரைச்சீலை மற்றும் பெரிய விண்டோ என இந்த வாகனத்தின் கேபின் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. சாலையில் செல்லும் உல்லாச கப்பல் போல இந்த கார் காட்சியளிக்கிறது.

பார் வசதிதான் ஹைலைட்! உல்லாச கப்பலாக மாற்றப்பட்ட மஹிந்திரா ஸ்கார்பியோ கார்... பாக்கவே ஆசையா இருக்கு

மேலும் டிவிடி ப்ளேயர் உடன் 32 இன்ச் எல்சிடி திரையும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது. பயணத்தின்போது பொழுதுபோக்கிற்கு இதனை பயன்படுத்தி கொள்ளலாம். ஆம்பியன்ட் லைட் சிஸ்டத்தை இந்த வாகனம் பெற்றுள்ளது. இது வாகனத்தின் லுக்கை அப்படியே மாற்றுகிறது. இதன் கேபின், நாம் காருக்குள்தான் இருக்கிறோமா? என்ற சந்தேகத்தை வரவழைப்பது போல் உள்ளது.

பார் வசதிதான் ஹைலைட்! உல்லாச கப்பலாக மாற்றப்பட்ட மஹிந்திரா ஸ்கார்பியோ கார்... பாக்கவே ஆசையா இருக்கு

இந்த காரில் டிரைவர் கேபினும், மெயின் கேபினும் தனித்தனியாக உள்ளன. எனினும் இன்டர்காம் மூலமாக தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. லிமோசைன் காராக மாற்றம் செய்யப்பட்ட மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

ஆனால் இந்தியாவை பொறுத்தவரை வாகனங்களை மாடிபிகேஷன் செய்வது சட்ட விரோதமானது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஏனெனில் வாகனங்களை மாடிபிகேஷன் செய்வதால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. மாடிபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்களை கடந்த காலங்களில் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Image Courtesy: MAGNETO 11/YouTube

Most Read Articles

English summary
Mahindra Scorpio Modified Into Limousine - Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X