செம கெத்து... இந்தியாவிற்கு பெருமை தேடி கொடுத்த மஹிந்திரா கார்... என்னனு தெரியுமா?

மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்பு ஒன்று இந்தியாவிற்கு பெருமை தேடி கொடுத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

செம கெத்து... இந்தியாவிற்கு பெருமை தேடி கொடுத்த மஹிந்திரா கார்... என்னனு தெரியுமா?

இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா குழுமத்தின் ஒரு அங்கமாக மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் (Mahindra & Mahindra) செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் வர்த்தக தலைநகரும், மஹாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகருமான மும்பையை தலைமையிடமாக கொண்டு மஹிந்திரா நிறுவனம் செயல்பட்டு கொண்டுள்ளது.

செம கெத்து... இந்தியாவிற்கு பெருமை தேடி கொடுத்த மஹிந்திரா கார்... என்னனு தெரியுமா?

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் கடந்த 1945ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. அப்போது அதன் பெயர் முகமத் & மஹிந்திரா (Muhammad & Mahindra) என்றுதான் இருந்தது. பின்னர் மஹிந்திரா & மஹிந்திரா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. உற்பத்தி எண்ணிக்கை அடிப்படையில், இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றாக மஹிந்திரா திகழ்ந்து வருகிறது.

செம கெத்து... இந்தியாவிற்கு பெருமை தேடி கொடுத்த மஹிந்திரா கார்... என்னனு தெரியுமா?

அதே சமயம் டிராக்டர்களின் உற்பத்தியில், உலக அளவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக மஹிந்திரா வெற்றிக்கொடி நாட்டியுள்ளது. டிராக்டர்கள் மட்டுமல்லாது, கார்கள் மற்றும் டூவீலர்கள் என பல்வேறு வகையான வாகனங்களை மஹிந்திரா நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. கார் விற்பனையை பொறுத்தவரை டாடா, மாருதி சுஸுகி ஆகியவை இதன் முக்கிய போட்டியாளர்களாக உள்ளன.

செம கெத்து... இந்தியாவிற்கு பெருமை தேடி கொடுத்த மஹிந்திரா கார்... என்னனு தெரியுமா?

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தலைமையில், மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் உலக அளவில் வெற்றிக்கொடி நாட்டி வருகிறது. அத்துடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்நிறுவனத்தின் வாகனங்கள் இந்தியாவிற்கும் பெருமை தேடி தந்துள்ளன. இந்த வகையில் மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்பு ஒன்று தற்போது இந்தியாவிற்கு மற்றொரு பெருமையை தேடி தந்துள்ளது.

செம கெத்து... இந்தியாவிற்கு பெருமை தேடி கொடுத்த மஹிந்திரா கார்... என்னனு தெரியுமா?

தேர்தலை முன்னிட்டு, தைவான் ஜனாதிபதியின் பிரச்சாரத்தில், மஹிந்திரா ஸ்கார்பியோ பிக்அப் டிரக் (Mahindra Scorpio Pickup Truck) பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்திய தயாரிப்பு ஒன்று தைவான் ஜனாதிபதியின் பிரச்சாரத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பது நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய விஷயமாகும்.

செம கெத்து... இந்தியாவிற்கு பெருமை தேடி கொடுத்த மஹிந்திரா கார்... என்னனு தெரியுமா?

தனது நிறுவனத்தின் ஸ்கார்பியோ பிக்அப் டிரக், தைவான் ஜனாதிபதியின் பிரச்சார கான்வாயில் சேர்க்கப்பட்டிருக்கும் விஷயம் தெரிந்ததும் ஆனந்த் மஹிந்திரா டிவிட்டரில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். ஆனந்த் மஹிந்திரா டிவிட்டரில் மிகவும் ஆக்டிவ் ஆக இருக்க கூடியவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

செம கெத்து... இந்தியாவிற்கு பெருமை தேடி கொடுத்த மஹிந்திரா கார்... என்னனு தெரியுமா?

இது பெருமை கொள்ள வேண்டிய தருணம் என ஆனந்த் மஹிந்திரா டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த செய்தியை தனக்கு தெரியப்படுத்தியதற்காக இன்வெஸ்ட் இந்தியா - தைவானுக்கும் (Invest India -Taiwan) அவர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளது பின்வருமாறு:

செம கெத்து... இந்தியாவிற்கு பெருமை தேடி கொடுத்த மஹிந்திரா கார்... என்னனு தெரியுமா?

உண்மையில் பெருமை கொள்ள வேண்டிய தருணம். இந்த செய்தியை இன்வெஸ்ட் இந்தியா - தைவான்தான் எனக்கு முதன் முதலில் தெரிவித்தது. இவ்வாறு ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளார். இது தொடர்பாக இன்வெஸ்ட் இந்தியா கடந்த ஜனவரி 10ம் தேதி ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. மஹிந்திரா நிறுவனத்தின் பிக்அப் டிரக் மஹிந்திரா ஸ்கார்பியோ கேட்அவே என்ற பெயரில் விற்பனையாகிறது.

செம கெத்து... இந்தியாவிற்கு பெருமை தேடி கொடுத்த மஹிந்திரா கார்... என்னனு தெரியுமா?

மஹிந்திரா ஸ்கார்பியோ கேட்அவே (Mahindra Scorpio Getaway) பிக்அப் டிரக்கில், 2,609 சிசி, நான்கு சிலிண்டர் மற்றும் டைரக்ட் இன்ஜெக்ஸன் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதில், 80 லிட்டர் கொள்ளவு கொண்ட எரிபொருள் டேங்க் இருக்கிறது. 2WD மற்றும் 4WD ஆப்ஷன்களுடன் மஹிந்திரா ஸ்கார்பியோ கேட்அவே பிக்அப் டிரக் கிடைக்கிறது.

செம கெத்து... இந்தியாவிற்கு பெருமை தேடி கொடுத்த மஹிந்திரா கார்... என்னனு தெரியுமா?

மஹிந்திரா நிறுவனம் எஸ்யூவி கார்களை உற்பத்தி செய்வதில் மிகவும் பிரபலமாக உள்ளது. அந்த வகையில் மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவி கார் இந்திய வாடிக்கையாளர் அதிகம் விரும்பும் தயாரிப்புகளில் ஒன்றாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பல ஆண்டுகளாக மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவியின் விற்பனை சிறப்பாக இருந்து வருகிறது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra Scorpio Pickup Car Used In Taiwan President's Campaign. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X