Just In
- 7 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 9 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 9 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 10 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- News
குடியரசு தின சம்பவத்தால்.. பட்ஜெட் நாளில் நாடாளுமன்றம் நோக்கி நடத்தவிருந்த விவசாயிகள் பேரணி ரத்து
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சாக்லேட்டை வீட்டுக்கு அனுப்பி வைக்கும் மஹிந்திரா... இதுக்கு பின்னாடி கசப்பான தகவல் ஒன்னு இருக்கு!!
மஹிந்திரா நிறுவனம் தார் காரை புக் செய்த வாடிக்கையாளர்களின் வீட்டுக்கு சாக்லேட் பாக்ஸை அனுப்பி வைத்து வருகின்றது. இதற்கான காரணத்தை இந்த பதிவில் காணலாம்.

எதிர்பார்த்திராத அளவிற்கு மஹிந்திரா தார் காரின் விற்பனை நடைபெற்று வருகின்றது. இக்காரை பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மஹிந்திரா நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் 2ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. முன்பெப்போதும் இல்லாத வகையில் பல்வேறு சிறப்பு வசதிகளுடன் இதனை அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

அதாவது, பழைய தலைமுறை தார் காரைக் காட்டிலும் தற்போதைய புதிய தலைமுறை தார் பெரிய உருவம், அதிக திறன் வாய்ந்தது மற்றும் கூடுதல் சொகுசு வசதிகளுடன் கட்டமைப்பட்டிருக்கின்றது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் இக்காருக்கு இந்தியாவில் அமோகமான வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியுள்ளது.

இதுமட்டுமின்றி நம்ப முடியாத குறைந்த விலையில் இக்கார் விற்பனைக்குக் களமிறக்கியதும் இந்த அமோகமான வரவேற்பு காரணமாக அமைந்திருக்கின்றது. குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் தற்போது தார் காருக்கு கிடைத்து வரவேற்பு மஹிந்திரா நிறுவனத்திற்கே நம்ப முடியாத வகையில் அமைந்திருக்கின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையால் இக்காருக்கான காத்திருப்பு காலம் நீடித்த வண்ணம் இருக்கின்றது.

குறிப்பிட்ட சில வேரியண்டுகளுக்கு எக்கசக்க புக்கிங் கிடைத்திருப்பதால் அவற்றிற்கான காத்திருப்பு காலம் 7 மாதங்களாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், மஹிந்திரா தார் காரை புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு மஹிந்திரா நிறுவனம் வலையுயர்ந்த ஃபெர்ரெரோ ரோச்சர் சாக்லெட்டுகளை அனுப்பி வைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Image Courtesy: Satish Bojan
இந்த சாக்லெட்டுகளுடன் கூடவே ஓர் கடிதத்தையும் மஹிந்திரா நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது. முதலில் சாக்லெட்டைக் கண்டு ஆச்சரிமுற்ற தார் உரிமையாளர்கள் (புக்கிங் செய்துவிட்டு காருக்காக காத்திருப்பவர்கள்) பின்னர் கடிதத்தைப் பார்த்ததும் ஷாக்காகிவிட்டனர். ஆமாங்க, காத்திருப்பு காலம் அதிகரித்திருப்பதை இந்த கடிதத்தின் வாயிலாகவே மஹிந்திரா தெரிவித்து வருகின்றது.

Image Courtesy: Adityendra Solan
இதைத்தொடர்ந்து, வாடிக்கையாளர்களைக் கூல் படுத்தும் விதமாக அந்த கடிதத்துடன் சாக்லெட்டையும் மஹிந்திரா அனுப்பி வைத்துள்ளது. ஷேன் உம்மர் எனும் நபருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் வாயிலாகவே மஹிந்திரா நிறுவனத்தின் தனித்துவமான முயற்சி பற்றிய தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

அந்த கடிதத்தில் காத்திருப்பு காலம் அதிகரித்ததற்கான காரணம் மற்றும் இதுவரை எவ்வளவு புக்கிங்கை தார் பெற்றிருக்கின்றது என்ற பல்வேறு தகவல்களை மஹிந்திரா வழங்கியுள்ளது. தொடர்ந்து பண்டிகைக் கால வாழ்த்து மற்றும் பாதுகாப்புடன் இருங்கள் எனவும் அது கூறியிருக்கின்றது. இந்த கடிதத்தின்படி, தற்போது வரை மஹிந்திரா தார் காருக்கு 21,000 முன் பதிவுகள் கிடைத்திருப்பது அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது.

மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே இக்காரின் டெலிவரி பணியைத் தொடங்கிவிட்டது குறிப்பிடத்தகுந்தது. அண்மையில் முதல் 500 யூனிட்டுகள் டெலிவரிக்காக வெளியேற்றப்பட்டது. ஆனால், இக்காரை புக்கிங் செய்தவர்கள் இன்னும் பலர் இருக்கின்றனர். இவர்களுக்கான காத்திருப்பு காலத்திற்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாகவே கடிதம் மற்றும் இனிப்புகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

அதேசமயம், புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு தார் காரை விரைவில் டெலிவரி கொடுக்க வேண்டும் என்பதற்காக உற்பத்தி திறனை அதிகரிக்கச் செய்யும் பணியில் மஹிந்திரா ஈடுபட்டு வருகின்றது. தற்போது இதன் உற்பத்தி திறன் மாதம் ஒன்றிற்கு 2,000 என கூறப்படுகின்றது. இதனை 3 ஆயிரமாக உயர்த்த மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. வருகின்ற ஜனவரி மாதத்திற்குள் இந்த உற்பத்தி திறனில் தார் தயாரிக்கப்படும் என தெரிகின்றது.