Just In
- 1 hr ago
சீனாவில் தீப்பற்றி எரிந்த டெஸ்லா மாடல் 3... இந்தியாவிற்கு வரவுள்ள எலெக்ட்ரிக் கார் என்பதால் கடும் அதிர்ச்சி...
- 1 hr ago
முண்டாசு கட்டிய பிஎம்டபிள்யூ... இந்தியாவில் 25 புதிய மாடல்களுடன் தெறிக்கவிட திட்டம்!
- 2 hrs ago
சுசுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் விலை உயர்ந்தன... எவ்வளவு உயர்ந்திருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!!
- 3 hrs ago
ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு வருகிறது... உறுதி செய்த எஃப்சிஏ தலைவர்...
Don't Miss!
- Movies
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- Finance
சென்செக்ஸ் 1000 முதல் 50,000 வரை.. 30 வருட பயணம்.. இதோ ஒரு பார்வை..!
- News
கடுங்குளிரில் இறக்கிவிடப்பட்ட தாய்.. விஸ்வரூபம் எடுத்த மக்கள் போராட்டம்.. மங்கோலிய பிரதமர் ராஜினாமா
- Sports
பிவி சிந்து அசத்தல் வெற்றி.. தாய்லாந்து ஓபன் தொடரில் காலிறுதிக்கு முன்னேற்றம்!
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
செம்ம... தொடங்கியது மஹிந்திரா தார் எஸ்யூவி டெலிவரி... ரூ. 1.1 கோடியை கொட்டியவருக்கே முதல் டெலிவரி...
நீண்ட நாட்கள் எதிர்பார்ப்பில் இருந்து மஹிந்திரா தார் எஸ்யூவி காரின் டெலிவரி பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

மஹிந்திரா நிறுவனத்தின் புதுமுக வாகனமாக தார் எஸ்யூவியின் டெலிவரி பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மிக பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 2ம் தலைமுறை தார் எஸ்யூவி காரை மஹிந்திரா நிறுவனம் கடந்த அக்டோபர் 2ம் தேதி அன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

இந்நிலையிலையே, இக்காரின் முதல் தயாரிப்பின் மூலம் நிதி திரட்டும் திட்டத்தை அது (மஹிந்திரா நிறுவனம்) போட்டது. இதனடிப்படையில் ஏலத்தையும் தொடங்கியது. ஏலம் தொடங்கப்பட்ட வெகு சில நாட்களிலேயே யாரும் எதிர்பார்த்திரா தொகையில் நம்பர் 1 மஹிந்திரா தாருக்கான ஏலம் கோரப்பட்டது. அதாவது, ஏலத்திற்கு அறிவிக்கப்பட்ட ஒரு சில தினத்திலேயே ரூ. 80 லட்சம் வரை ஏலம் கோரப்பட்டது.

மேலும், சில நாட்களில் கோடி ரூபாயை ஏலத் தொகை எட்டியது. இதில், தலைநகர் டெல்லியைச் சேர்ந்த ஆகாஷ் மிண்டல் என்ற நபரே வெற்றிப் பெற்றார். ரூ. 1.11 கோடி அளவில் மஹிந்திரா தார் இரண்டாம் தலைமுறையின் முதல் தயாரிப்பை தன் வசப்படுத்தினார். இவருக்கே மஹிந்திரா தார் கார் தற்போது டெலிவரி கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல் மற்றும் புகைப்படங்களே தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதைத்தொடர்ந்து, மஹிந்திரா தார் எஸ்யூவி காரைப் புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கும் அக்காரினை டெலிவரி செய்யும் பணி தொடங்கப்பட இருப்பதாக மஹிந்திரா நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தகவலை மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவும் சமூக வலைதள பக்கத்தின் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளார்.

நம்பர் 1 மஹிந்திரா தார் ஈட்டிய 1.1 கோடி ரூபாய் ஸ்வேட்ஸ் பவுண்டேஷன் எனும் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டுள்ளது. நம்பர் 1 மஹிந்திரா தார் காரை வாங்கிய ஆகாஷ் மிண்டா அவர் தேர்வு செய்ததன் அடிப்படையில் இந்த மிகப்பெரிய தொகை அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ. 2.2 கோடி ரூபாயாக மஹிந்திரா நிறுவனம் தொண்டு நிறுவனத்திற்கு தற்போது வழங்கியுள்ளது.

ஏலத் தொகையைப் போலவே தனக்கு தேவையான சிறப்பு வசதிகளை நிறுவிக்கொள்ளும் வாய்ப்பும் ஆகாஷ் மிண்டாவிற்கு மஹிந்திரா வழங்கியது. இதனடிப்படையில், சாக்லேட் நிறம் கொண்ட மஹிந்திரா தார் கார் பல்வேறு சிறப்பு வசதிகளுடன் அவருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. ஆகாஷ் மிண்டா டீலரிடத்தில் இருந்து தார் எஸ்யூவி காரைப் பெறும் புகைப்படத்தைக் கீழே காணலாம்.

அந்த கார் நம்பர் 1 என்கிற பேட்ஜ்களுடன் பிரகாசமாக காட்சியளிப்பதை நம்மால் காண முடிகின்று. ஆனால், இது என்ன வேரியண்ட் என்ற தகவல் தெரியவரவில்லை. இருப்பினும், அவர் தாரின் உயர் ரக வேரியண்டையேத் தேர்வு செய்திருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. ஏஎக்ஸ் மற்றும் எல்எக்ஸ் எனும் சீரிஸ்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதில், ஏஎக்ஸ் பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் தார் ஆஃப் ரோடு பயணத்திற்கு ஏற்ப வசதிகளையும், எல்எக்ஸ் பிரிவில் இருக்கும் தார் வழக்கமான மற்றும் தினசரி பயண பிரியர்களைக் கவரும் அம்சங்களுடன் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், இதன் ஆரம்ப நிலை மாடலுக்கு ரூ. 9.80 லட்சங்கள் என்ற விலையும், உயர்நிலை தேர்விற்கு 13.75 லட்ச ரூபாய்கள் என்ற விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறைவான விலை மற்றும் அனைத்து பயண பிரியர்களையும் கவரக்கூடிய வசதிகள் என அனைத்துமே மஹிந்திரா தார் மீது தனித்துவமான டிமாணட்டை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. அதாவது, இதுவரை மஹிந்திரா நிறுவனம் சந்தித்திராத வகையிலான வரவேற்பை தார் எஸ்யூவி பெற்றுக் கொடுத்துள்ளது. இதனால், மஹிந்திரா நிறுவனம் புதிய உற்சாகத்தைப் பெற்றிருக்கின்றது.

இக்காரை 2.0 லிட்டர் டி-ஜிடிஐ எம்ஸ்டால்லியன் பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் எஞ்ஜின் ஆகிய இரு விதமான எந்திர தேர்வுகளில் விற்பனைக்கு வழங்குகின்றது மஹிந்திரா. இதில், பெட்ரோல் எஞ்ஜின் 150 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தக்கூடியது. இதேபோன்று, டீசல் 130 பிஎச்பி மற்றும் 300 என்எம் டார்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது.

மேலும் அனைத்து வீல்களும் இயங்கும் திறனைக் கொண்டவையாக மஹிந்திரா தார் காட்சியளிக்கின்றது. இத்துடன், கவர்ச்சியான உருவ அமைப்பு, ஏராளமான சொகுசு வசதிகள் மற்றும் எக்கசக்க தொழில்நுட்ப வசதிகளுடன் இது விற்பனைக்கு வந்துள்ளது. எனவேதான், இந்தியர்கள் 'ஈ' போல் மஹிந்திரா தார் காரை மொய்த்து வருகின்றனர்.