22-இன்ச் அலாய் சக்கரங்களுடன் மாடிஃபை செய்யப்பட்ட மூன்று 2020 மஹிந்திரா தார்கள்!! உங்களுக்கு எது பிடிச்சிருக்கு?

22 இன்ச் அலாய் சக்கரங்களுடன் சில புதிய தலைமுறை மஹிந்திரா தார் வாகனங்கள் மாடிஃபை செய்யப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் இனி பார்ப்போம்.

22-இன்ச் அலாய் சக்கரங்களுடன் மாடிஃபை செய்யப்பட்ட மூன்று 2020 மஹிந்திரா தார்கள்!! உங்களுக்கு எது பிடிச்சிருக்கு?

மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2020 தார் சில மாதங்களுக்கு முன்பு இந்திய சந்தையில் அறிமுகமானது. வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுவரும் இந்த வாகனத்திற்கு முன்பதிவுகள் 2021 மே மாதம் வரையில் முடிந்துவிட்டன.

22-இன்ச் அலாய் சக்கரங்களுடன் மாடிஃபை செய்யப்பட்ட மூன்று 2020 மஹிந்திரா தார்கள்!! உங்களுக்கு எது பிடிச்சிருக்கு?

இதில் இருந்து இந்த மஹிந்திரா தயாரிப்பு எத்தனை பேரை கவர்ந்துள்ளது என்பதை பார்த்து கொள்ளுங்கள். இருப்பினும் சில வாடிக்கையாளர்களுக்கு இத்தகைய கம்பீரமான தோற்றமும் போதவில்லை. இதனால் அத்தகையவர்கள் தங்களது தார்களை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாடிஃபை செய்து வருகின்றனர்.

22-இன்ச் அலாய் சக்கரங்களுடன் மாடிஃபை செய்யப்பட்ட மூன்று 2020 மஹிந்திரா தார்கள்!! உங்களுக்கு எது பிடிச்சிருக்கு?

இந்த வகையில் மிக பெரியதான 22 இன்ச் அலாய் சக்கரங்களுடன் மாடிஃபை செய்யப்பட்ட சில மஹிந்திரா தார்களை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம். வெலோசிட்டி டயர்கள் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகியுள்ள இதுகுறித்த படங்களில் தார் வாகனங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான டிசைனில் அலாய் சக்கரங்களை பெற்றுள்ளன.

22-இன்ச் அலாய் சக்கரங்களுடன் மாடிஃபை செய்யப்பட்ட மூன்று 2020 மஹிந்திரா தார்கள்!! உங்களுக்கு எது பிடிச்சிருக்கு?

அனைத்து தார்களின் சக்கரங்களும் 22 இன்ச்சில் தான் உள்ளன. இருந்தாலும், சிவப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்ட தாரில் 5-ஸ்போக் டிசைனில் அலாய் சக்கரங்கள், சிவப்பு நிற ப்ரேக் பேட்களுடன் பொருத்தப்பட்டுள்ளன. இது தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட ஹார்ட்டாப் உடன் இருக்கும் தார் எஸ்யூவிக்கு ஸ்போர்டியான தோற்றத்தை வழங்குகிறது.

22-இன்ச் அலாய் சக்கரங்களுடன் மாடிஃபை செய்யப்பட்ட மூன்று 2020 மஹிந்திரா தார்கள்!! உங்களுக்கு எது பிடிச்சிருக்கு?

இந்த படங்களில் கருப்பு நிற 2020 தார் ஹார்ட் டாப் மற்றும் சாஃப்ட் டாப் என்ற இரு விதமான மேற்கூரைகளில் காட்சியளிக்கிறது. இதில் சாஃப்ட் டாப் வெர்சனில் 22 இன்ச் அலாய் சக்கரங்கள் 10-ஸ்போக் டிசைனில் பொருத்தப்பட்டுள்ளன. சில சுருக்கங்களுடன் இருக்கும் மேற்கூரைக்கு இந்த அலாய் சக்கரங்கள் மிகவும் எடுப்பாக உள்ளன.

22-இன்ச் அலாய் சக்கரங்களுடன் மாடிஃபை செய்யப்பட்ட மூன்று 2020 மஹிந்திரா தார்கள்!! உங்களுக்கு எது பிடிச்சிருக்கு?

ஹார்ட் டாப் மேற்கூரை உடன் உள்ள கருப்பு நிற தாரில் 5-ஸ்போக்டு அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவையும் 22 இன்ச்சில்தான் உள்ளன. ஆனால் அலுமினியத்தால் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளன. இத்தகைய மாடிஃபை பணிகளை இந்த 2020 தார்களில் வெலோசிட்டி டயர்கள் என்ற கஸ்டமைஸ்ட் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

22-இன்ச் அலாய் சக்கரங்களுடன் மாடிஃபை செய்யப்பட்ட மூன்று 2020 மஹிந்திரா தார்கள்!! உங்களுக்கு எது பிடிச்சிருக்கு?

இவ்வாறான சந்தைக்கு பிறகான பாகங்களுடன் மேற்கொள்ளப்படும் மாடிஃபை மாற்றங்களால் மஹிந்திரா இந்த வாகனத்திற்கு வழங்கும் தொழிற்சாலை உத்தரவாதங்களை இழக்க நேரிடும். ஏனெனில் இத்தகைய அளவில் பெரிய சக்கரங்களினால் வாகனத்தின் சஸ்பென்ஷன் அமைப்பு விரைவாக பழுதடைய வாய்ப்புண்டு. ஏனெனில் தாரில் சஸ்பென்ஷன் அமைப்பை மஹிந்திரா நிறுவனம் 16 அல்லது 18 இன்ச் சக்கரங்களுக்கு ஏற்ற விதத்திலேயே பொருத்துகிறது.

Most Read Articles

English summary
New Mahindra Thars with 22 inch alloy wheels look SICK
Story first published: Wednesday, December 2, 2020, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X