மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் பிஎஸ்6 மாடல் விரைவில் அறிமுகம்?

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் பிஎஸ்6 மாடல் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் பிஎஸ்6 மாடல் விரைவில் அறிமுகம்?

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மிகவும் தனித்துவமான தேர்வாக மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி இருந்து வந்தது. பீரங்கியை மனதில் வைத்து இந்த எஸ்யூவியை உருவாக்கியதாக மஹிந்திரா தெரிவித்தது. காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் இந்த எஸ்யூவிக்கு குறிப்பிடத்தக்க அளவு விற்பனையும் இருந்து வருகிறது.

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் பிஎஸ்6 மாடல் விரைவில் அறிமுகம்?

இந்த நிலையில், பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து, மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி அண்மையில் விற்பனையில் இருந்து விலக்கப்பட்டதுடன், மஹிந்திரா இணையதளத்தில் இருந்தும் நீக்கப்பட்டது. இந்த எஸ்யூவி மீண்டும் வருவதில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டு வந்தது.

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் பிஎஸ்6 மாடல் விரைவில் அறிமுகம்?

இந்த சந்தேகத்தை போக்கும் விதத்தில், மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி மீண்டும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக டீம் பிஎச்பி தள செய்தி தெரிவிக்கிறது. ஏற்கனவே பிஎஸ்6 மாடல் சாலை சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதன் ஸ்பை படங்கள் வந்தன. இந்த நிலையில், தற்போது வந்துள்ள செய்தி அதனை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் பிஎஸ்6 மாடல் விரைவில் அறிமுகம்?

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் பிஎஸ்4 மாடலில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருந்தது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 100 பிஎச்பி பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதே எஞ்சின் பிஎஸ்6 தரத்துடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் பிஎஸ்6 மாடல் விரைவில் அறிமுகம்?

அதேபோன்று, மஹிந்திரா டீசல் எஞ்சினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும் என்று தெரிகிறது.

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் பிஎஸ்6 மாடல் விரைவில் அறிமுகம்?

புதிய மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியில் எஞ்சின் தவிர்த்து, வடிவமைப்பில் சிறிய மாறுதல்களுடன் ஃபேஸ்லிஃப்ட் மாடலாக எதிர்பார்க்கப்படுகிறது. புதுப்பொலிவுடன் வருவதால் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு ஏதுவாக அமையும்.

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் பிஎஸ்6 மாடல் விரைவில் அறிமுகம்?

இந்த மாதமே புதிய மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு வந்துவிடும் என்று தெரிவிக்கப்படுகிறது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான் உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடும். ஆனால், இது தனித்துவமான தேர்வாக இருக்கும்.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra is planning to launch TUV300 with BS6 compliant diesel engine option in India very soon.
Story first published: Saturday, July 4, 2020, 14:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X