டியூவி300 எஸ்யூவி காரின் பெயரை இணையத்தள பக்கத்தில் இருந்து அதிரடியாக நீக்கியது மஹிந்திரா...

மஹிந்திரா நிறுவனம் டியூவி300 மாடலின் பெயரை அதன் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

டியூவி300 எஸ்யூவி காரின் பெயரை இணையத்தள பக்கத்தில் இருந்து அதிரடியாக நீக்கியது மஹிந்திரா...

இணையத்தள பக்கத்தில் இருந்து டியூவி300 மாடலின் பெயர் நீக்கப்பட்டிருப்பது இந்த காரின் விற்பனை விரைவில் இந்திய சந்தையில் நிறுத்தப்படவுள்ளதை குறிக்கிறது. மற்றப்படி இந்த எஸ்யூவி மாடல் பிஎஸ்6 அப்டேட்க்கு உள்ளாக்கப்பட்டுள்ளதா என்பது குறித்த எந்த தகவலும் இல்லை.

டியூவி300 எஸ்யூவி காரின் பெயரை இணையத்தள பக்கத்தில் இருந்து அதிரடியாக நீக்கியது மஹிந்திரா...

மஹிந்திரா நிறுவனம் டியூவி300 மாடலை முதன்முதலாக இந்தியாவில் கடந்த 2015ல் அறிமுகப்படுத்தியது. காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் டேங்க்-பில்ட் எஸ்யூவியாக நிலைநிறுத்தப்பட்ட இந்த மாடலை கடைசியாக தயாரிப்பு நிறுவனம் சில காஸ்மெட்டிக் அப்டேட்கள் மற்றும் புதிய தொழிற்நுட்பங்களுடன் கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தி இருந்தது.

டியூவி300 எஸ்யூவி காரின் பெயரை இணையத்தள பக்கத்தில் இருந்து அதிரடியாக நீக்கியது மஹிந்திரா...

ஆனால் அதன்பின் இந்த காரில் பிஎஸ்6 அப்டேட்டை மஹிந்திரா நிறுவனம் இதுவரை கொண்டு வரவில்லை. இந்நிறுவனம் ஏற்கனவே நுவோஸ்போர்ட் எஸ்யூவி மாடலின் விற்பனையை இந்தியாவில் நிறுத்தி இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது டியூவி300 மற்றும் டியூவி300 ப்ளஸ் மாடல்களின் பெயர்கள் இணையத்தள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

டியூவி300 எஸ்யூவி காரின் பெயரை இணையத்தள பக்கத்தில் இருந்து அதிரடியாக நீக்கியது மஹிந்திரா...

இதனால் டியூவி300 நிலைநிறுத்தப்பட்டு இருந்த பிரிவில் தற்சமயம் மஜிந்திரா நிறுவனத்தில் இருந்து எக்ஸ்யூவி300 மாடல் மட்டும் தான் உள்ளது. கடந்த மே மாதத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரானது மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் ஹூண்டாய் வென்யூ மாடல்களை காட்டிலும் அதிகமான விற்பனை எண்ணிக்கையை சந்தையில் பதிவு செய்தது.

டியூவி300 எஸ்யூவி காரின் பெயரை இணையத்தள பக்கத்தில் இருந்து அதிரடியாக நீக்கியது மஹிந்திரா...

இதுதான் எக்ஸ்யூவி300 மீது நிறுவனம் தொடர்ந்து நம்பிக்கை வைத்திருப்பதற்கு ஒரே காரணமாகும், சரி மீண்டும் டியூவி300 காருக்கு வருவோம், மஹிந்திரா நிறுவனம் இந்த எஸ்யூவி மாடலுக்கு ஒரே ஒரு 1.5 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வை மட்டும் தான் வழங்கி வருகிறது.

டியூவி300 எஸ்யூவி காரின் பெயரை இணையத்தள பக்கத்தில் இருந்து அதிரடியாக நீக்கியது மஹிந்திரா...

அதிகப்பட்சமாக 3,750 ஆர்பிஎம்-ல் 100 பிஎச்பி பவரையும், 1,600 ஆர்பிஎம்-ல் 240 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடிய இந்த டீசல் என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

டியூவி300 எஸ்யூவி காரின் பெயரை இணையத்தள பக்கத்தில் இருந்து அதிரடியாக நீக்கியது மஹிந்திரா...

மற்ற நிறுவனங்களை போல் மஹிந்திராவும் கொரோனா வைரஸினால் நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக அமலில் இருந்த ஊரடங்கினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலி தான் இந்நிறுவனத்தின் புதிய அறிமுகங்களான எக்ஸ்யூவி500 மற்றும் ஸ்கார்பியோ மாடல்களின் புதிய தலைமுறைகள் தள்ளிப்போனது, தற்போது டியூவி300 மாடலின் பெயர் நீக்கப்பட்டிருப்பது எல்லாமே.

டியூவி300 எஸ்யூவி காரின் பெயரை இணையத்தள பக்கத்தில் இருந்து அதிரடியாக நீக்கியது மஹிந்திரா...

அதிலும் பாக்ஸ் வடிவிலான தோற்றத்தை கொண்ட டியூவி300 வாடிக்கையாளர்கள் பெரிய அளவில் கவரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பெயர் நீக்கப்பட்டிருப்பதால் நிரத்தரமாக இந்த எஸ்யூவி கார் இந்திய சந்தையை விட்டு வெளியேறவுள்ளதா அல்லது மஹிந்திரா நிறுவனம் பிஎஸ்6 அப்டேட் உடன் இதற்கு உயிர் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra TUV300 Removed From Official Website
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X