முற்றிலும் மாறுப்பட்ட முன்பக்கத்துடன் வருகிறது புதிய மஹிந்திரா டியூவி300 ப்ளஸ்...

மஹிந்திராவின் புதிய அறிமுகமாக வெளிவரவுள்ள டியூவி300 ப்ளஸ் மாடலின் காப்புரிமை படங்கள் அறிமுகத்திற்கு முன்னதாக இணையத்தில் கசிந்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

முற்றிலும் மாறுப்பட்ட முன்பக்கத்துடன் வருகிறது புதிய மஹிந்திரா டியூவி300 ப்ளஸ்...

அடுத்த அக்டோபர் மாதத்தில் இருந்து சில அப்டேட் செய்யப்பட்ட மாடல்களை அறிமுகப்படுத்த மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்ட டியூவி300 ப்ளஸ் மாடலும் ஒன்றாக உள்ளது.

முற்றிலும் மாறுப்பட்ட முன்பக்கத்துடன் வருகிறது புதிய மஹிந்திரா டியூவி300 ப்ளஸ்...

இதற்கிடையில் தான் தற்போது இதன் காப்புரிமை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. காடிவாடி செய்திதளம் மூலம் வெளிவந்துள்ள இந்த படங்களின் மூலம் மஹிந்திராவின் முத்திரை பொருத்தப்பட்ட கம்பீரமான க்ரில் உடன் புதிய டிசைனில் முன்பகுதியை டியூவி300 ப்ளஸ் கார் ஏற்றிருப்பதை அறிய முடிகிறது.

முற்றிலும் மாறுப்பட்ட முன்பக்கத்துடன் வருகிறது புதிய மஹிந்திரா டியூவி300 ப்ளஸ்...

செங்குத்தான ஸ்லாட்களை கொண்ட இதன் க்ரில்லிற்கு கீழே தேன்கூடு வடிவிலான டிசைனில் அகலமாக காற்று உள்வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற டிசைன் மாற்றங்களாக ஒருங்கிணைக்கப்பட்ட டிஆர்எல்களுடன் புதிய ஹெட்லேம்ப்கள், திருத்தியமைக்கப்பட்ட பம்பர் மற்றும் ஃபாக் விளக்குகளுக்கான குழி உள்ளிட்டவை அடங்குகின்றன.

முற்றிலும் மாறுப்பட்ட முன்பக்கத்துடன் வருகிறது புதிய மஹிந்திரா டியூவி300 ப்ளஸ்...

அதேபோல் பிஎஸ்6 எஸ்யூவி காரின் டெயில்லேம்ப்கள், பின்பக்க பம்பர்கள் மற்றும் பூட் லிட்டிலும் சிறிய அளவிலான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புதிய இரட்டை நிறத்தில் அலாய் சக்கரங்களை இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் பெறவும் வாய்ப்புள்ளது.

முற்றிலும் மாறுப்பட்ட முன்பக்கத்துடன் வருகிறது புதிய மஹிந்திரா டியூவி300 ப்ளஸ்...

மற்றப்படி பாக்ஸ் வடிவிலான மொத்த தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. புதிய டியூவி300 ப்ளஸ் மாடலின் ப்ளாட்ஃபாரத்தில்தான் 2020 தார் மற்றும் புதிய தலைமுறை ஸ்கார்பியோ கார்களும் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

முற்றிலும் மாறுப்பட்ட முன்பக்கத்துடன் வருகிறது புதிய மஹிந்திரா டியூவி300 ப்ளஸ்...

உட்புறத்தில் டியூவி300 ப்ளஸ் ஃபேஸ்லிஃப்ட் கார், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கும் வசதி கொண்ட அப்டேட் செய்யப்பட்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்துடன் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டிருக்கலாம். இதனால் கூடுதல் புத்துணர்ச்சியாக இதன் கேபின் காட்சியளிக்கும் என்பது நிச்சயம்.

முற்றிலும் மாறுப்பட்ட முன்பக்கத்துடன் வருகிறது புதிய மஹிந்திரா டியூவி300 ப்ளஸ்...

புதிய டியூவி300 மாடலில் மிக பெரிய மாற்றமே அதன் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்டிருப்பது தான். இருப்பினும் இந்த என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய 120 பிஎச்பி மற்றும் 280 என்எம் டார்க் திறன் என்ற ஆற்றல் அளவுகளில் எந்த வித்தியாசமும் இருக்காது.

முற்றிலும் மாறுப்பட்ட முன்பக்கத்துடன் வருகிறது புதிய மஹிந்திரா டியூவி300 ப்ளஸ்...

இதனால் கூடுதலாக பெட்ரோல் என்ஜின் தேர்வையும் இந்த எஸ்யூவி காருக்கு மஹிந்திரா நிறுவனம் வழங்கும் என தெரிகிறது. காப்புரிமை படங்கள் தற்போது வெளியாகி இருப்பதன்மூலம் மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் மாடலின் தயாரிப்பு பணிகள் சூடுப்பிடித்திருப்பதை உணர முடிகிறது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
New Mahindra TUV300 Plus Patent Images Leaked Ahead Of Launch: Spy Pics & Other Details. Read in Telugu.
Story first published: Wednesday, September 16, 2020, 18:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X