மஹிந்திரா எக்ஸ்யூவி300 பிஎஸ்6 டீசல் விலை விபரம் கசிந்தது!

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் பிஎஸ்6 டீசல் மாடலின் விலை விபரம் கசிந்துள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 பிஎஸ்6 டீசல் விலை விபரம் கசிந்தது!

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தில் சிறந்த பிரிமீயம் தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், புதிய பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகளுக்கு ஏற்ப, இந்த எஸ்யூவியின் பிஎஸ்6 பெட்ரோல் மாடல் கடந்த டிசம்பர் மாதமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுவிட்டது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 பிஎஸ்6 டீசல் விலை விபரம் கசிந்தது!

ஆனால், பிஎஸ்6 டீசல் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை. இந்த நிலையில், பிஎஸ்6 எக்ஸ்யூவி300 டீசல் மாடலானது ஏப்ரலில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அதற்கு முன்னதாக, டீசல் மாடலின் விலை விபரம் கசிந்துள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 பிஎஸ்6 டீசல் விலை விபரம் கசிந்தது!

இந்த நிலையில், இந்த எஸ்யூவியின் விலை விபரம் ஆட்டோமொபைல் தளம் மூலமாக கசிந்துள்ளது. அதாவது, மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் பிஎஸ்6 மாடலானது ரூ.8.69 லட்சம் எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலையில் வர இருக்கிறது. அதாவது, பிஎஸ்4 மாடல் விற்பனை செய்யப்பட்ட அதே விலையில் புதிய பிஎஸ்6 மாடலானது வர இருக்கிறது. அதிகபட்சமாக ஒரு வேரியண்ட்டிற்கு மட்டும் ரூ.900 வரை கூடுதலாக இருக்கும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 பிஎஸ்6 டீசல் விலை விபரம் கசிந்தது!

மஹிந்திரா எக்ஸ்யூவி300 பிஎஸ்6 டீசல் எஸ்யூவியானது W4, W6, W6 AMT, W8, W8 (O) மற்றும் W8 (O) AMT ஆகிய வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதில், மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட W4 வேரியண்ட்டிற்கு ரூ.8.69 லட்சமும், W6 வேரியண்ட்டிற்கு ரூ.9.50 லட்சமும், W8 வேரியண்ட்டிற்கு ரூ.10.95 லட்சமும், W8 (O) வேரியண்ட்டிற்கு ரூ.12.14 லட்சமும் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட உள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 பிஎஸ்6 டீசல் விலை விபரம் கசிந்தது!

அதேபோன்று, ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு பொருத்தப்பட்ட W6 வேரியண்ட்டிற்கு ரூ.9.99 லட்சமும், W8 (O) வேரியணட்டிற்கு ரூ.12.69 லட்சமும் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட உள்ளது. அதாவது, பழைய விலையிலேயே வர இருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 பிஎஸ்6 டீசல் விலை விபரம் கசிந்தது!

மஹிந்திரா எக்ஸ்யூவி300 பிஎஸ்6 மாடலில் 1.5 லிட்டர் எம்ஹாக் 75 எஞ்சின் தக்க வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிஎஸ்4 மாடலில் இருந்த இந்த டீசல் எஞ்சின் 117 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் பெற்றிருந்தது. ஆனால், பிஎஸ்6 மாடலில் 115 எச்பி பவரை வெளிப்படுத்தும் வகையில் சற்றே குறைந்துள்ளது. அதேநேரத்தில், 300 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் தக்க வைக்கப்படும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 பிஎஸ்6 டீசல் விலை விபரம் கசிந்தது!

இந்த டீசல் எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும். இந்த எஞ்சின் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தில் சக்திவாய்ந்த எஞ்சின் தேர்வுகளில் ஒன்றாக முன்னிலைப்படுத்திக் கொள்ளும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 பிஎஸ்6 டீசல் விலை விபரம் கசிந்தது!

மஹிந்திரா எக்ஸ்யூவி300 பெட்ரோல் மாடலில் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு எஞ்சினுடன் கிடைக்கிறது. இந்த எஞ்சின் 110 எச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 பிஎஸ்6 டீசல் விலை விபரம் கசிந்தது!

இதனிடையே, கடந்த மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியில் புதிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அறிமுகம் செய்யப்பட்டது. எம்ஸ்டாலியன் என்ற பெயரில் மஹிந்திரா அறிமுகம் செய்த இந்த புதிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 130 எச்பி பவரையும், 230 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருந்தது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 பிஎஸ்6 டீசல் விலை விபரம் கசிந்தது!

இந்த புதிய எஞ்சின் மாடலானது எக்ஸ்யூவி300 ஸ்போர்ட்ஸ் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. அடுத்த சில மாதங்களில் இந்த புதிய பெட்ரோல் எஞ்சின் மாடலும் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்பு இருக்கிறது. இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டால், 4 மீட்டர் நீளத்திற்குள்ளான எஸ்யூவி மார்க்கெட்டில் மிகவும் சக்திவாய்ந்த மாடலாக எக்ஸ்யூவி300 எஸ்யூவி இருக்கும்.

Source: Team BHP

Most Read Articles
English summary
Mahindra XUV300 BS6 diesel engine prices leaked online ahead of its launch.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X