செம கெத்து... சத்தமே இல்லாமல் மஹிந்திரா செய்த தரமான சம்பவம்... என்னவென்று தெரியுமா?

சத்தமே இல்லாமல் தரமான சம்பவம் ஒன்றை மஹிந்திரா செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

40 ஆயிரமா? விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது மஹிந்திரா எக்ஸ்யூவி300

இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களுக்கான டிமாண்ட் அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட் ரக கார்களை இந்திய வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புகின்றனர். இவற்றின் விலை வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் இருப்பதுதான் இதற்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

40 ஆயிரமா? விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது மஹிந்திரா எக்ஸ்யூவி300

இந்திய மார்க்கெட்டின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் ஹூண்டாய் வெனியூ உள்ளிட்ட கார்கள் வாடிக்கையாளர்களை அதிகம் கவர்ந்திருக்கின்றன. அத்துடன் மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரும் வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கும் மாடலாக உள்ளது.

40 ஆயிரமா? விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது மஹிந்திரா எக்ஸ்யூவி300

எஸ்யூவி கார்களை தயாரிப்பதில் புகழ்பெற்ற இந்தியாவின் மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து வெளிவரும் மாடல்தான் எக்ஸ்யூவி300. கடந்த 2019ம் ஆண்டு காதலர் தினத்தன்று (பிப்ரவரி 14), எக்ஸ்யூவி300 காம்பேக்ட் எஸ்யூவி காரை மஹிந்திரா நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த சூழலில், மஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனையில் தற்போது புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

40 ஆயிரமா? விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது மஹிந்திரா எக்ஸ்யூவி300

ஆம், இந்தியாவில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனை என்ற புதிய மைல்கல்லை மஹிந்திரா எக்ஸ்யூவி300 எட்டியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது முதல் 40,503 எக்ஸ்யூவி300 கார்களை விற்பனை செய்து மஹிந்திரா நிறுவனம் அசத்தியுள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரை வாடிக்கையாளர்கள் எவ்வளவு விரும்புகின்றனர் என்பதற்கு இந்த மைல்கல் ஒரு உதாரணம்.

40 ஆயிரமா? விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது மஹிந்திரா எக்ஸ்யூவி300

மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரை பொறுத்தவரை டீசல் வேரியண்ட்களைதான் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புகின்றனர். மொத்த விற்பனையில் 72 சதவீதம் டீசல் வேரியண்ட்களில் இருந்துதான் கிடைத்துள்ளது. அதே சமயம் மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் பெட்ரோல் வேரியண்ட்களை 28 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே தேர்வு செய்துள்ளனர்.

40 ஆயிரமா? விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது மஹிந்திரா எக்ஸ்யூவி300

மஹிந்திரா நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2,132 எக்ஸ்யூவி300 எஸ்யூவி கார்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் எக்ஸ்யூவி300 காரின் மொத்த விற்பனை 40,503 யூனிட்களாக அதிகரித்துள்ளது. சக்தி வாய்ந்த இன்ஜின்கள், அட்டகாசமான வசதிகள் மற்றும் சவாலான விலை நிர்ணயம் ஆகிய காரணங்களால்தான் மஹிந்திரா எக்ஸ்யூவி300 வெற்றிகரமான மாடலாக வலம் வருகிறது.

40 ஆயிரமா? விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது மஹிந்திரா எக்ஸ்யூவி300

அத்துடன் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் கவர்ச்சிகரமான டிசைனும் வாடிக்கையாளர்களை கவர ஒரு காரணமாக இருக்கிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரில், 17 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், சில்வர் ரூஃப் ரெயில்ஸ் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில், 7.0 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

40 ஆயிரமா? விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது மஹிந்திரா எக்ஸ்யூவி300

மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. இதில், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 110 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. அத்துடன் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரில் டீசல் இன்ஜின் தேர்வும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.

40 ஆயிரமா? விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது மஹிந்திரா எக்ஸ்யூவி300

இந்த 1.5 லிட்டர் டீசல் யூனிட் அதிகபட்சமாக 115 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. மஹிந்திரா எக்ஸ்யூவி300 காம்பேக்ட் எஸ்யூவி காரானது, 8.30 லட்ச ரூபாய் முதல் 12.69 லட்ச ரூபாய் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி300 காருக்கு மற்றொரு பெருமையும் உண்டு.

இன்ஸ்டாகிராமில் எங்களை பின்தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

40 ஆயிரமா? விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது மஹிந்திரா எக்ஸ்யூவி300

பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமாக வாடிக்கையாளர்களுக்கு கிடைத்த முதல் மஹிந்திரா வாகனம் என்ற பெருமை எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரைதான் சேரும். மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் பிஎஸ்-6 பெட்ரோல் மாடலானது, கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதியன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

40 ஆயிரமா? விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது மஹிந்திரா எக்ஸ்யூவி300

இந்தியாவில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளன. அதற்கு இன்னும் சுமார் 5 மாதங்கள் இருந்த நிலையிலேயே எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் பிஎஸ்-6 வெர்ஷனை மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

40 ஆயிரமா? விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது மஹிந்திரா எக்ஸ்யூவி300

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் கார்கள் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலம் அடைந்து வருகின்றன. எனவே அதற்கு ஏற்ப வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் எலெக்ட்ரிக் வெர்ஷனை மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra XUV300 Compact SUV Sales Cross 40,000 Units Since Launch. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X