மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலக்ட்ரிக் கார் முதன்முறையாக இந்தியாவில் சோதனை ஓட்டம்..!

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து விரைவில் இந்திய சந்தைக்கு வரவுள்ள இ-கேயூவி300 என்ற எக்ஸ்யூவி300 மாடலின் எலக்ட்ரிக் வெர்சன் கார் முதன்முதலாக இந்திய சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலக்ட்ரிக் கார் முதன்முறையாக இந்தியாவில் சோதனை ஓட்டம்..!

பெங்களூருக்கு அருகே ஓசூர் சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் கார், ஆரம்ப கட்ட தயாரிப்பு பணிகளில் இருப்பதால் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் உள்ளது. இந்த சோதனை காரில் உள்ள எக்ஸாஸ்ட் அமைப்பு மற்றும் அமைதியான இயக்கத்தின் மூலமாக தான் இது வழக்கமான எஸ்யூவி300 மாடல் இல்லை என்பது நமக்கு தெரிய வருகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலக்ட்ரிக் கார் முதன்முறையாக இந்தியாவில் சோதனை ஓட்டம்..!

சோதனை ஓட்டத்தில், வாகனங்கள் எதுவும் சாலையில் தனக்கு முன்பு செல்லாதபோது ஓட்டுனர் ஆக்ஸலேரேட்டிங்கையும் ப்ரேக்கையும் பல முறை கொடுக்கிறார். ஒருவேளை இந்த செயல்முறை சோதனை நடவடிக்கைகளுள் ஒரு பகுதியாக இருக்கலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலக்ட்ரிக் கார் முதன்முறையாக இந்தியாவில் சோதனை ஓட்டம்..!

டெல்லியில் நடந்து முடிந்த 2020 ஆட்டோ எக்ஸ்போவில் மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து அசத்தலான தோற்றத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த கான்செப்ட் மாடலை அடிப்படையாக கொண்டு தான் இந்த எலக்ட்ரிக் கார் தயாரிக்கப்பட்டிருப்பதை உறுதியாக கூற முடியும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலக்ட்ரிக் கார் முதன்முறையாக இந்தியாவில் சோதனை ஓட்டம்..!

ஏனெனில் அந்த கான்செப்ட் வாகனத்தின் பின்புற பம்பர் உள்ளிட்ட சில பாகங்களின் டிசைனை கணக்கச்சிதமாக எக்ஸ்யூவி300 எலக்ட்ரிக் கார் கொண்டுள்ளது. இருப்பினும் தற்போதைய எரிபொருள் எக்ஸ்யூவி300 மாடலுடன் சிறிது ஒத்து காணப்படுவதால் தயாரிப்பு பணிகள் முழுவதும் நிறைவடைந்த இ-கேயூவி மாடலில் டாடா நெக்ஸானின் எலக்ட்ரிக் வெர்சனில் கொடுக்கப்பட்டிருந்த புதிய நீல நிற டிசைன்களை போன்று சில காஸ்மெட்டிக் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலக்ட்ரிக் கார் முதன்முறையாக இந்தியாவில் சோதனை ஓட்டம்..!

மஹிந்திரா நிறுவனத்தின் புதிய MESMA 350 ப்ளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டு வருகின்ற இந்த எலக்ட்ரிக் கார், இந்த புதிய ப்ளாட்ஃபாரத்தால் மஹிந்திரா நிறுவனத்தின் எலக்ட்ரிக் அளவீடுகளை அதிகமாக கொண்டுள்ளது. அதாவது, இ-கேயூவி300 மாடலில் வழங்கப்பட்டுள்ள 350 வோல்ட் எலக்ட்ரிக் மோட்டார் 60 கிலோவாட்ஸில் இருந்து 280 கிலோவாட்ஸ் வரையிலான ஆற்றலை காருக்கு வழங்கும் திறனை பெற்றுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலக்ட்ரிக் கார் முதன்முறையாக இந்தியாவில் சோதனை ஓட்டம்..!

இதனுடன் இந்த எலக்ட்ரிக் மோட்டாரில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியின் திறன் 80 kWh வரை அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திராவின் இந்த புதிய ப்ளாட்ஃபாரம் நிறுவனத்தின் மொத்த உள்கட்டமைப்பையும் உருவாக்கியுள்ளது. மேலும் இந்த கட்டமைப்பின் மூலம் இரட்டை மோட்டார் அமைப்பையும் வாகனங்களில் வழங்க முடியும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலக்ட்ரிக் கார் முதன்முறையாக இந்தியாவில் சோதனை ஓட்டம்..!

இத்தகைய கட்டமைப்பில் இ-எக்ஸ்யூவி300 மாடல் கார் தயாரிக்கப்பட்டுள்ளதால், டாடா நெக்ஸான் இவி வாகனத்திற்கு விற்பனையில் கடுமையான போட்டியினை கொடுக்கும் என்பது உறுதி. நெக்ஸான் எலக்ட்ரிக் காரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.13.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலக்ட்ரிக் கார் முதன்முறையாக இந்தியாவில் சோதனை ஓட்டம்..!

கேயூவி300 மாடலின் இந்த புதிய எலக்ட்ரிக் வெர்சன் சிங்கிள் சார்ஜில் 370கிமீ வரை இயங்கும் என்று மஹிந்திரா நிறுவனத்தின் சிஇஒ மகேஷ் பாபு உறுதியாக கூறுகிறார். இதனால் இந்த எலக்ட்ரிக் காருக்கான இந்திய எக்ஸ்ஷோரூம் விலை டாடா நெக்ஸானை விட அதிகமாக நிர்ணயிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

Source: TEAM-BHP

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
mahindra eXUV300 spied
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X