ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாக தயாராகும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலக்ட்ரிக் கார்...

மஹிந்திரா& மஹிந்திரா தனது தயாரிப்பு கார்களில் ஏதேனும் ஒன்றை எலக்ட்ரிக் வெர்சனுக்கு மாற்றி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த நீண்ட காலமாக திட்டமிட்டு வந்தது. அதன் வெளிப்பாடாகவே எக்ஸ்யூவி300 மாடல் எலக்ட்ரிக் வெர்சனில் விரைவில் நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகவுள்ளதாக தற்போது இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாக தயாராகும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலக்ட்ரிக் கார்...

எக்ஸ்யூவி300 மாடலின் இந்த எலக்ட்ரிக் வெர்சன் எஸ்210 என்ற குறியீட்டால் குறிக்கப்படுகிறது. மேலும் இந்த எலக்ட்ரிக் கார், ஸ்டாண்டர்ட் மற்றும் லாங்-ரேஞ்ச் என இரு விதமான வேரியண்ட்களில் அறிமுகமாகவுள்ளது. இதில் ஸ்டாண்டர்ட் வெர்சன் சிங்கிள் சார்ஜில் 200கிமீ வரையில் இயங்கும் திறனையும், லாங்-ரேஞ்ச் வெர்சன் 350- 400 கிமீ வரை இயக்கும் திறனையும் பெறவுள்ளன.

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாக தயாராகும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலக்ட்ரிக் கார்...

இயந்திர பாகங்களை பொறுத்தவரை, எக்ஸ்யூவி300 மாடலின் இந்த எலக்ட்ரிக் வெர்சன் கார் புதிய எலக்ட்ரிக் மோட்டாருடன் அறிமுகமாகவுள்ளது. இதன் எலக்ட்ரிக் மோட்டாரில் எல்ஜி கெமிக்கல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட லித்தியம்-இரும்பு பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாக தயாராகும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலக்ட்ரிக் கார்...

எல்ஜி கெமிக்கல் நிறுவனம் யூனிக் செல்களை இந்தியாவில் விற்பனை செய்யும் பணியிலும் ஈடுப்பட்டுப்பட்டு வருகிறது. லித்தியம்-இரும்பு பேட்டரியின் தயாரிப்பு முறையை அடிப்படையாக கொண்டு, அதிக ஆற்றல் அடர்த்தி கொண்ட நிக்கல்-மாங்கனீசு-கோபால்ட் என்ற கெமிக்கல் கலவையின் மூலம் யூனிக் செல்கள் உருவாக்கப்படுகின்றன.

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாக தயாராகும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலக்ட்ரிக் கார்...

தற்போதைய எக்ஸ்யூவி300 எஸ்யூவி மாடலின் டிசைனை தான் இதன் புதிய எலக்ட்ரிக் வெர்சன் காரும் பெறவுள்ளது. இருப்பினும் காரின் முன்புறம் மற்றும் க்ரில் பகுதிகளில் சிறிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம். இதேபோல் புதிய எலக்ட்ரிக் காரின் உட்புறத்திலும் அப்டேட்கள் ஏற்படுத்தப்படும் என தெரிகிறது. இல்லையேல், எக்ஸ்யூவி300 மாடலின் விலையுயர்ந்த வேரியண்ட்டின் உட்புறம் அப்படியே கொடுக்கப்படவும் வாய்ப்புள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாக தயாராகும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலக்ட்ரிக் கார்...

தற்சமயம் விற்பனை செய்யப்பட்டு வரும் எக்ஸ்யூவி300 மாடல், நேர்த்தியான முன்புற க்ரில் உடன் கூர்மையான டிசைன் அமைப்பு, எல்இடி டிஆர்எல்கள் உடன் ஹெட்லைட்ஸ் மற்றும் ஃபாக் விளக்குகளை தனது இருபுறத்திலும் கொண்டுள்ள பெரிய ஏர்-டேம் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாக தயாராகும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலக்ட்ரிக் கார்...

எக்ஸ்யூவி300 மாடலில் இரு என்ஜின் தேர்வுகளை மஹிந்திரா நிறுவனம் வழங்கியுள்ளது. இதில் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் யூனிட் அதிகப்பட்சமாக 110 பிஎச்பி பவரையும் 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக உள்ளது. மற்றொரு 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 115 பிஎச்பி பவர் மற்றும் 300 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக காருக்கு வழங்குகிறது. இவற்றுடன் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாக தயாராகும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலக்ட்ரிக் கார்...

மேலும் எக்ஸ்யூவி300 மாடலானது மஹிந்திரா நிறுவனத்தின் முதல் பிஎஸ்6 மாடலாகவும் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மாடலின் பிஎஸ்6-க்கு மாற்றப்பட்ட பெட்ரோல் வேரியண்ட் கார் கடந்த டிசம்பர் மாதம் 3ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது.

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாக தயாராகும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலக்ட்ரிக் கார்...

பிஎஸ்6 எக்ஸ்யூவி300 காரின் விலை இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.8.30 லட்சத்தில் இருந்து ரூ.11.84 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பிஎஸ்6 கார் குறித்து மேலும் தெரிந்துகொள்ள கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாக தயாராகும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலக்ட்ரிக் கார்...

இந்திய சந்தையில் எலக்ட்ரிக் வாகனங்களின் வருகை நாளுக்கு பெருகி கொண்டே தான் போகிறது. அதிலும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 போன்ற மார்க்கெட்டில் சிறந்த முறையில் விற்பனையாகி வரும் மாடல்கள் பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்படவுள்ளது எலக்ட்ரிக் கார்களை வேகமாக வாடிக்கையாளர்களிடம் சென்றடைய செய்யும் என்பது உறுதி.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra XUV300 Electric Production-Spec Unveil At 2020 Auto Expo: Here Are All The Details
Story first published: Wednesday, January 8, 2020, 19:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X