மஹிந்திராவை கௌரவப்படுத்திய எக்ஸ்யூவி300... தற்போதைக்கு சந்தையிலுள்ள பாதுகாப்பான கார் இதுதானாம்

இந்திய சாலைகளுக்கான கார்களின் பாதுகாப்பு மதிப்பெண்களை உலகளாவிய என்சிஏபி அமைப்பு வெளியிட்டு வருகிறது. இதில் கடந்த ஆறு ஆண்டுகளில் எந்த காரும் இல்லாத அளவிற்கு பாதுகாப்பான காராக மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி மாடல் விளங்கி வருவதாக அதற்கு முடி சூடப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மஹிந்திராவை கௌரவப்படுத்திய எக்ஸ்யூவி300... தற்போதைக்கு சந்தையிலுள்ள பாதுகாப்பான கார் இதுதானாம்

இந்திய சந்தையில் சப்-காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் ஹூண்டாய் வென்யூ மாடல்கள் வரவேற்பை பெற்று வந்த நேரத்தில் மஹிந்திராவின் எக்ஸ்யூவி மாடல் மெதுவாக வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாகி வந்தது.

மஹிந்திராவை கௌரவப்படுத்திய எக்ஸ்யூவி300... தற்போதைக்கு சந்தையிலுள்ள பாதுகாப்பான கார் இதுதானாம்

தற்போது காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் முதன்மையான மாடல்களுள் ஒன்றாக இருக்கும் இந்த மஹிந்திரா காரின் பிரபலத்திற்கு மிக முக்கிய காரணம் அதில் வழங்கப்பட்டுவரும் பாதுகாப்பு தொழிற்நுட்ப அம்சங்கள் தான்.

மஹிந்திராவை கௌரவப்படுத்திய எக்ஸ்யூவி300... தற்போதைக்கு சந்தையிலுள்ள பாதுகாப்பான கார் இதுதானாம்

கடந்த ஆறு வருடங்களில், அதாவது 2014-2020 வரையில் மொத்தம் 38 கார்கள் என்சிஏசி சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளன. இதில் மற்ற அனைத்து கார்களையும் முந்தி சிறப்பான மதிப்பெண்களை பெற்று பயணிகளின் பாதுகாப்பில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 முதலிடத்தை வகித்து வருகிறது.

மஹிந்திராவை கௌரவப்படுத்திய எக்ஸ்யூவி300... தற்போதைக்கு சந்தையிலுள்ள பாதுகாப்பான கார் இதுதானாம்

பெரியவர்கள் பாதுகாப்பில் ஐந்து நட்சத்திரங்களை பெற்றுவரும் எக்ஸ்யூவி300 காரின் குழந்தைகள் பாதுகாப்பிற்கான மதிப்பெண்கள் நான்கு நட்சத்திரங்கள் ஆகும். இதுகுறித்து மஹிந்திரா & மஹிந்திரா க்ரூப்பின் ஆட்டோமோட்டிவ் பிரிவின் சிஇஒ வீஜே நக்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

மஹிந்திராவை கௌரவப்படுத்திய எக்ஸ்யூவி300... தற்போதைக்கு சந்தையிலுள்ள பாதுகாப்பான கார் இதுதானாம்

அவர் கூறுகையில், இது மஹிந்திராவிற்கு பெருமை அளிக்கக்கூடிய விஷயமாகும். இந்த வருட துவக்கத்தில் எக்ஸ்யூவி300 உலகளாவிய என்சிஏபி அமைப்பால் இந்தியாவில் பாதுகாப்பான வாகனமாக மதிப்பிடப்படப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த கார் கடந்த ஆறு ஆண்டுகளில் பாதுகாப்பான வாகனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மஹிந்திராவை கௌரவப்படுத்திய எக்ஸ்யூவி300... தற்போதைக்கு சந்தையிலுள்ள பாதுகாப்பான கார் இதுதானாம்

இது வாகன பாதுகாப்பு விஷயத்தில் எங்களது வலுவான அர்பணிப்பையும், இந்திய ஆட்டோமோட்டிவ் துறையின் வளர்ச்சியையும் காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார். ரூ.8.3 லட்சம் என்ற ஆரம்ப விலையுடன் சந்தைப்படுத்தப்பட்டு வரும் எக்ஸ்யூவி300 மாடல் காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் முதல் காராக சில பாதுகாப்பு உபகரணங்களை கொண்டுள்ளது.

மஹிந்திராவை கௌரவப்படுத்திய எக்ஸ்யூவி300... தற்போதைக்கு சந்தையிலுள்ள பாதுகாப்பான கார் இதுதானாம்

இதில் இரட்டை முன்புற, பக்கவாட்டு மற்றும் திரை உள்பட முழங்காலுக்கும் காற்றுப்பை, அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக்குகள், முன்புற மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்ஸ் மற்றும் ஹீட்டட் ஒஆர்விஎம்கள் உள்ளிட்டவை அடங்குகின்றன.

மஹிந்திராவை கௌரவப்படுத்திய எக்ஸ்யூவி300... தற்போதைக்கு சந்தையிலுள்ள பாதுகாப்பான கார் இதுதானாம்

இவை மட்டுமின்றி தன்னிச்சையாக டிம் ஆகக்கூடிய ஐஆர்விஎம், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், நிலையாக ஏபிஎஸ் & இபிடி மற்றும் முன்புற மற்றும் பின்புற ஃபாக் விளக்குகள் போன்றவற்றையும் இந்த காம்பெக்ட் எஸ்யூவி காரில் மஹிந்திரா நிறுவனம் வழங்கியுள்ளது.

Most Read Articles
English summary
Mahindra XUV300 recognised by Global NCAP as the safest vehicle on Indian roads in the last 6 years
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X