மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஸ்போர்ட்ஸ் மாடல் அறிமுகம்... பவர்ஃபுல் எஞ்சினுடன் வருகிறது!

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் சக்திவாய்ந்த புதிய பெட்ரோல் எஞ்சின் மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய மாடல் குறித்த விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஸ்போர்ட்ஸ் மாடல் அறிமுகம்

காம்பேக்ட் எஸ்யூவியில் மிகவும் பிரிமீயம் அம்சங்கள் கொண்ட மாடலாக மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி நிலைநிறுத்தப்பட்டுள்ளது. காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தில் மிகவும் சக்திவாய்ந்த எஞ்சின் தேர்வுகள் உள்ள மாடலாகவும் உள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஸ்போர்ட்ஸ் மாடல் அறிமுகம்

இந்த நிலையில், மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் மதிப்பை உயர்த்தும் விதத்தில், ஸ்போர்ட்ஸ் என்ற புதிய மாடல் வர இருக்கிறது. இந்த மாடலில் புத்தம் புதிய 1.2 லிட்டர் டி-ஜிடிஐ டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஸ்போர்ட்ஸ் மாடல் அறிமுகம்

இந்த புதிய பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 130 பிஎஸ் பவரையும், 230 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். தற்போது பயன்படுத்தப்படும் 1.2 லிட்டர் எம்பிஎஃப்ஐ டர்போ பெட்ரோல் எஞ்சினைவிட 20 பிஎஸ் அதிக பவரையும், 30 என்எம் கூடுதல் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஸ்போர்ட்ஸ் மாடல் அறிமுகம்

மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஸ்போர்ட்ஸ் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படும். ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வும் எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஸ்போர்ட்ஸ் மாடல் அறிமுகம்

இந்த புதிய எக்ஸ்யூவி300 மாடலில் சக்திவாய்ந்த புதிய எஞ்சின் இடம்பெற்றுள்ளதை வெளிக்காட்டும் விதத்தில், கூடுதல் அலங்கார வேலைப்பாடுகளுடன் இந்த ஸ்போர்ட்ஸ் மாடல் வர இருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஸ்போர்ட்ஸ் மாடல் அறிமுகம்

அதாவது, வெளிப்புறத்தில் ஸ்போர்ட்ஸ் பாடி டீக்கெல் ஸ்டிக்கர் மற்றும் அலங்கார ஸ்டிக்கர் மூலமாக சாதாரண மாடலிருந்து வேறுபடுத்தப்பட்டுள்ளது. உட்புறத்திலும், விசேஷ வண்ண பாகங்கள் மூலமாக அலங்காரம் செய்யப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஸ்போர்ட்ஸ் மாடல் அறிமுகம்

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஸ்போர்ட்ஸ் மாடலில் 7 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பார்க்கிங் சென்சார்கள், டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஸ்போர்ட்ஸ் மாடல் அறிமுகம்

இந்த புதிய மாடலில் பிஎஸ்-6 டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் இந்த ஆண்டு மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. சாதாரண பெட்ரோல் எஞ்சின் மாடலின் டாப் வேரியண்ட்டைவிட இந்த புதிய மாடல் ரூ.50,000 கூடுதல் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Mahindra has unveiled XUV300 Sportz Petrol model at auto expo.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X