வாங்கியது ஒரு கார்... பில் வந்ததோ 28 கார்களுக்கு... அடுத்து என்ன நடந்தது என்பதுதான் டுவிஸ்டே!

இணையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஒரே ஒரு காரை புக் செய்தவரின் பெயரில் 28 யூனிட்டுகளுக்கான புக்கிங் கிடைத்த சம்பவம் தற்போது வைரலாகி வருகின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

வாங்கியது ஒரு கார்... பில் வந்ததோ 28 கார்களுக்கு... அடுத்து என்ன நடந்தது என்பதுதான் டுவிஸ்டே!

களமிறங்கிய சில ஆண்டுகளிலேயே உலக தரம் வாய்ந்த நிறுவனமாக உருவெடுத்தது டெஸ்லா. அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை மையமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம், மின்சார கார்களை மட்டுமே குறிக்கோளாக வைத்து இயங்கிக்கொண்டிருக்கின்றது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலக நாடுகள் பலவற்றில் அமோகமான வரவேற்பு கிடைத்து வருகின்றது.

வாங்கியது ஒரு கார்... பில் வந்ததோ 28 கார்களுக்கு... அடுத்து என்ன நடந்தது என்பதுதான் டுவிஸ்டே!

இந்நிறுவனம், மின்சார வாகனமாக அதன் தயாரிப்புகளை களமிறக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. மின்சார கார் என்பதுடன், அதன் தயாரிப்புகளில் ஆட்டோபைலட் எனும் தானியங்கி தொழில்நுட்பத்தையும் வழங்கி வருகின்றது. இந்த தொழில்நுட்பம் விபத்து போன்ற அவசர காலங்களில் தானாக செயல்பட்டு அதையும், அதன் உரிமையாளரையும் காக்க உதவும்.

வாங்கியது ஒரு கார்... பில் வந்ததோ 28 கார்களுக்கு... அடுத்து என்ன நடந்தது என்பதுதான் டுவிஸ்டே!

எனவேதான், இந்நிறுவனத்தின் கார்கள் விற்பனையில் உச்சத்தைத் தொட்டு வருகினின்றன. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் அதிகம் விற்பனையாகும் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் சொகுசு கார்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் ஏகபோகமான விற்பனை எண்ணிக்கையைப் பெற்று வருகின்றது. இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால், அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகும் கார்களாக இருந்த பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் தயாரிப்புகளையே பின்னுக்கு தள்ளி டெஸ்லா முதல் இடம் பிடித்திருக்கின்றது.

வாங்கியது ஒரு கார்... பில் வந்ததோ 28 கார்களுக்கு... அடுத்து என்ன நடந்தது என்பதுதான் டுவிஸ்டே!

இந்நிறுவனம், ஆஃப்-லைன் (ஷோரூம்) வாயிலாக மட்டுமின்றி ஆன்-லைன் வாயிலாகவும் அதன் வர்த்தகத்தை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில்தான் மிகவும் விநோதமான சம்பவம் ஒன்று டெஸ்லா நிறுவனத்திற்கு அரங்கேறியிருக்கின்றது. ஆம், நாம் தலைப்பில் பார்த்தவாறு ஒரு காரை மட்டுமே வாங்க வந்தவருக்கு 28 யூனிட்டுகளுக்கான ஆர்டர்கள் கிடைத்துள்ளன.

வாங்கியது ஒரு கார்... பில் வந்ததோ 28 கார்களுக்கு... அடுத்து என்ன நடந்தது என்பதுதான் டுவிஸ்டே!

ஒட்டுமொத்த ஆர்டரின் மதிப்பு 1.4 மில்லியன் யூரோக்கள் ஆகும். அதாவது, இந்திய மதிப்பில் ரூ. 11.9 கோடி ஆகும். இது தோராயமாக வழங்கப்பட்ட மதிப்பாகும்.

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர் பேல்லன் மேன். ரெட்டிட் எனும் வலைதளம் வாயிலாக இப்பெயர் கண்டறியப்பட்டுள்ளது. இந்த இளைஞர்தான் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்.

வாங்கியது ஒரு கார்... பில் வந்ததோ 28 கார்களுக்கு... அடுத்து என்ன நடந்தது என்பதுதான் டுவிஸ்டே!

அண்மையில் இவரும், இவரது தந்தையும் இணைந்து ஆட்டோபைலர் திறன் கொண்ட டெஸ்லா மாடல் 3 காரை (ஒரு யூனிட்) வாங்குவதற்காக அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளம் வாயிலாக புக் செய்துள்ளனர். அனைத்து தகவல் பரிமாற்றமும் முடிவடைந்துவிட்ட நிலையில் கடைசியாக பண பரிமாற்றமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாங்கியது ஒரு கார்... பில் வந்ததோ 28 கார்களுக்கு... அடுத்து என்ன நடந்தது என்பதுதான் டுவிஸ்டே!

ஆனால், கடைசியாக கன்ஃபார்ம் செய்யும்போது ஏதோ கோளாறு ஏற்பட்டுள்ளது. அதாவது, ஆர்டர் உறுதிச் செய்யப்படவில்லை என தகவல் தோன்ற ஆரம்பித்துள்ளது. இதனால், அடுத்தடுத்ததாக தொடர்ச்சியாக அவர் பல முறை முயற்சியுள்ளார். அத்தனை முறையுமே புக்கிங்கில் கோளாறு இருப்பதாக தகவல் வந்த வண்ணம் இருந்துள்ளது.

வாங்கியது ஒரு கார்... பில் வந்ததோ 28 கார்களுக்கு... அடுத்து என்ன நடந்தது என்பதுதான் டுவிஸ்டே!

இதனால், அந்த முதியவர் இரண்டு மணி நேரங்கள் கழித்து மீண்டும் முயற்சி செய்துள்ளார். அப்போதும் புக்கிங் கன்ஃபார்ம் ஆகாமல் ஏதே பிழை இருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளது.

இவ்வாறு 28 முறைக்கும் மேலாக தந்தை-மகன் இருவரும் முயற்சி செய்ய கார் மட்டும் புக்காகவே இல்லை. இவ்வாறே அவர்களுக்கு செய்தி கிடைத்துள்ளது.

வாங்கியது ஒரு கார்... பில் வந்ததோ 28 கார்களுக்கு... அடுத்து என்ன நடந்தது என்பதுதான் டுவிஸ்டே!

ஆனால், இவர்கள் செய்த புக்கிங் ஒவ்வொன்றும் ஆர்டர்களாக டெஸ்லா நிறுவனத்திற்கு கிடைக்கத் தொடங்கியுள்ளது. இதன்படி, ஒரே ஒரு யூனிட் டெஸ்லா மாடல் 3 காரை புக் செய்தவர்களின் பெயரில் 28 யூனிட்டுகளுக்கான புக்கிங் பெறப்பட்டுள்ளது.

வாங்கியது ஒரு கார்... பில் வந்ததோ 28 கார்களுக்கு... அடுத்து என்ன நடந்தது என்பதுதான் டுவிஸ்டே!

இதைக் கண்டு அதிர்ந்துபோன தந்தை-மகன் இருவரும் டெஸ்லா நிறுவனத்தை அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டனர். இணையத்தில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக ஒரு காருக்கு பதிலாக 28 கார்களுக்கான புக்கிங் வழங்கப்பட்டதாக நடைபெற்றதை மிக தெளிவாக எடுத்துரைத்தனர்.

வாங்கியது ஒரு கார்... பில் வந்ததோ 28 கார்களுக்கு... அடுத்து என்ன நடந்தது என்பதுதான் டுவிஸ்டே!

இதனை ஏற்றுக் கொண்ட டெஸ்லா டெஸ்லா நிறுவனம் அனைத்து ஆர்டர்களையும் ரத்து செய்யுமாறு அறிவுறுத்தியது. டெஸ்லா நிறுவனத்தின் கூற்றின்படி ஒரு காரை புக் செய்துவிட்டு கேன்சல் செய்தால் அதற்கான கட்டணமாக 100 யூரோக்கள் செலுத்த வேண்டும். இதன்படி பார்த்தால், புக்கிங் ரத்து செய்ததற்கான கட்டணம் மட்டுமே 2,800 யூரோக்களாக கணக்கிடப்பட்டது.

வாங்கியது ஒரு கார்... பில் வந்ததோ 28 கார்களுக்கு... அடுத்து என்ன நடந்தது என்பதுதான் டுவிஸ்டே!

ஆனால், இந்த அபராதக் கட்டணத்தை டெஸ்லா வசூலிக்கவில்லை என கூறப்படுகின்றது. தங்களுடைய அதிகாரப்பூர்வ வலைதளப்பக்கத்தில் ஏற்பட்ட கோளாறே இதற்கு காரணம் என்பதை உணர்ந்த டெஸ்லா, இவ்வாறு நடந்துக் கொண்டது. பொதுவாக இணையத்தில் கோளாறுகள் ஏற்படுவது வழக்கம்தான், ஆனால், இந்த கோளாறு பலரை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் வகையில் உள்ளது.

வாங்கியது ஒரு கார்... பில் வந்ததோ 28 கார்களுக்கு... அடுத்து என்ன நடந்தது என்பதுதான் டுவிஸ்டே!

அதேசமயம், ஒரே நேரத்தில் 1.4 மில்லியன் யூரோக்களுக்கு ஆர்டர் கிடைத்ததாக குஷியில் இருந்த டெஸ்லாவிற்கு தற்போது ஏமாற்றமே மிஞ்சியது.

டெஸ்லா நிறுவனத்தின் மாடல் 3 காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 530 கிமீ தூரம் வரை செல்ல முடியும். இதை அதிகம் டிராஃபிக் இல்லாத பாதையில் பயன்படுத்தும் இதைக்காட்டிலும் கூடுதல் மைலேஜை அது வழங்கும் என கூறப்படுகின்றது.

வாங்கியது ஒரு கார்... பில் வந்ததோ 28 கார்களுக்கு... அடுத்து என்ன நடந்தது என்பதுதான் டுவிஸ்டே!

அதேசமயம், இதனை சூப்பர்சார்ஜிங் முறையில் வைத்து சார்ஜ் செய்யும் போது வெறும் 30 நிமிடங்களில் 270 கிமீ தூரம் வரை பயணிப்பதற்கான சார்ஜை ஏற்றிக்கொள்ளும் தொழில்நுட்பம் மடால்3 காரில் இடம்பெற்றிருக்கின்றது.

வாங்கியது ஒரு கார்... பில் வந்ததோ 28 கார்களுக்கு... அடுத்து என்ன நடந்தது என்பதுதான் டுவிஸ்டே!

இவ்வாறு, இந்நிறுவனத்தின் அனைத்து மாடல்களும் அதிக திறன் கொண்டவைகளாக இருக்கின்றன. ஆனால், இதன் ஒரு மாடல்கூட இன்னும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #டெஸ்லா #tesla
English summary
Man Accidently Purchases 28 Tesla Cars In Germany For 1.4 Million Euros Details. Read In Tamil.
Story first published: Monday, June 29, 2020, 17:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X