மேப் மை இந்தியா செயலியில் புகார் தெரிவிக்கும் வசதி அறிமுகம்!

கொரோனா வைரஸ் பிரச்னையால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு புகார் தெரிவிக்கும் புதிய வசதியை மேப்மைஇந்தியா அறிமுகம் செய்துள்ளது.

மேப் மை இந்தியா செயலியில் புகார் தெரிவிக்கும் வசதி அறிமுகம்!

கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதையடுத்து, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. பொது இடங்களில் அதிக மக்கள் கூடுவதால், இந்த கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறிவிடும் அபாயம் இருப்பதால், இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கின்றனர்.

மேப் மை இந்தியா செயலியில் புகார் தெரிவிக்கும் வசதி அறிமுகம்!

இந்த நிலையில், வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் மக்கள் பல்வேறு நடைமுறை பிரச்னைகளை சந்திக்க துவங்கி இருக்கின்றனர். பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கூட வெளியே வர முடியாத நிலை இருக்கிறது.

மேப் மை இந்தியா செயலியில் புகார் தெரிவிக்கும் வசதி அறிமுகம்!

வெளியில் வந்தால் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற அச்சத்தில் பலர் வீடுகளில் உள்ளனர். இந்த நிலையில், பிரச்னைகள் மற்றும் இதர விஷயங்கள் குறித்து அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு புகார் தெரிவிக்கும் விதத்தில், மேப் மை இந்தியா வரைபட செயலியில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

உள்ளூர் அதிகாரி முதல் பிரதமர் அலுவலகம் வரை உடனடியாக புகார் தெரிவிக்கும் வகையில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும், பிரச்னை குறித்தும், இருக்கும் இடம் குறித்தும் துல்லியமாக இந்த செயலியில் குறிப்பிட முடியும்.

மேப் மை இந்தியா செயலியில் புகார் தெரிவிக்கும் வசதி அறிமுகம்!

மேப்மை இந்தியா செயலியில் Report an Issue என்ற பகுதியை தேர்வு செய்து, புகாரை பதிவு செய்து அரசு அதிகாரிகளை டேக் செய்து புகார் தெரிவிக்கலாம்.

மேப் மை இந்தியா செயலியில் புகார் தெரிவிக்கும் வசதி அறிமுகம்!

மேலும், கொரோனா வைரஸ் குறித்த அண்மைத் தகவல்களையும் இந்த மேப் மை இந்தியா வரைபட செயலி மூலமாக தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்பட்டு இருக்கிறது.

மேப் மை இந்தியா செயலியில் புகார் தெரிவிக்கும் வசதி அறிமுகம்!

மேப் மை இந்தியா செயலியில் கொரோனா பாதிப்பு அச்சம் உள்ளவர்கள் அருகிலுள்ள பரிசோதனை மையம் மற்றும் தனிமைப்படுத்தும் இடங்கள் குறித்த தகவலும், வழிகாட்டு வசதியும் கூட சேர்க்கப்பட்டுள்ளது. இது மேப் மை இந்தியா செயலி பயன்படுத்துவோருக்கு வரப்பிரசாதமாக அமையும்.

Most Read Articles
English summary
மேப் மை இந்தியா செயலி, மேப் மை இந்தியா செயலியில் புதிய வசதி அறிமுகம்
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X