ஆச்சரியம், ஆனால் உண்மை... நவீன யுக காராக புதிய அவதாரம் எடுத்த மாருதி 800... நம்பவே முடியலையா?

இந்தியர்களின் மனம் கவர்ந்த கார்களில் ஒன்றான மாருதி 800 நவீன யுகத்திற்கே மாடிஃபிகேஷனைப் பெற்றுள்ளது. இதுகுறித்த கூடுதல் சுவாரஷ்ய தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

ஆச்சரியம், ஆனால் உண்மை... நவீன யுக காராக புதிய அவதாரம் எடுத்த மாருதி 800... நம்பவே முடியலையா?

மாருதி 800 காரில் பயணிக்காதவர்களே இருக்க முடியாது என்று கூறுமளவிற்கு இந்தியச் சாலைகளில் குவிந்திருந்த வாகனங்களில் இதுவும் ஒன்று. ஏன், நம் நாட்டவர்களின் பலருடைய முதல் வாகனமாகவும் இதுவே இருக்கின்றது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் சச்சின், நடிகர் சோனு சூத் உள்ளிட்ட பலருடைய முதல் வாகனமாக இதுவே இருக்கின்றது.

ஆச்சரியம், ஆனால் உண்மை... நவீன யுக காராக புதிய அவதாரம் எடுத்த மாருதி 800... நம்பவே முடியலையா?

அதேசமயம், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முன் வீல் இயக்கம் கொண்ட முதல் காரும் மாருதி சுசுகி 800 மாடலே ஆகும். இந்தியர்களின் பார்வையை மாற்றியமைத்த வாகனமாகவும் இது இருக்கின்றது.

அதாவது, ஆரம்பத்தில் பின் சக்கர இயக்கம் கொண்ட வாகனங்களுக்கு மட்டுமே இந்தியர்கள் அதிகம் வரவேற்பு கொடுத்து வந்திருந்த நிலையில், முன் சக்கர இயக்கம் கொண்ட வாகனங்களும் மிகச் சிறந்ததுதான் என நிரூபித்து காட்டியது.

MOST READ: இந்த நேரத்திலும் சம்பள உயர்வு... பிரபல நிறுவனம் அசத்தல்... காரணம் தெரிஞ்சா இன்னும் ஆச்சரியப்படுவீங்க

ஆச்சரியம், ஆனால் உண்மை... நவீன யுக காராக புதிய அவதாரம் எடுத்த மாருதி 800... நம்பவே முடியலையா?

அத்துடன், பல கோடி மக்களின் மனதையும் அது கவர்ந்தது. ஆனால், குறிப்பிட்ட சில காரணங்களால் இந்த காரின் உற்பத்தியை மாருதி சுசுகி நிறுவனம் நிறுத்தியது. இருப்பினும், ஒரு சிலர் தற்போதும் இந்த காரைப் பயன்படுத்தி வருகின்றனர். பலர் இது தங்களின் முதல் வாகனம் என்ற செண்டிமென்டாலும், ஒரு சிலர் இக்கார் குறைந்த பராமரிப்பை வழங்குகின்றது என்ற காரணத்தாலும் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆச்சரியம், ஆனால் உண்மை... நவீன யுக காராக புதிய அவதாரம் எடுத்த மாருதி 800... நம்பவே முடியலையா?

அந்தவகையில், குறிப்பிட்ட சிலர் மிகவும் வித்தியாசமாக மாருதி 800 காரை முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் மாற்றியமைத்து பயன்படுத்தி வருகின்றனர்.

அவ்வாறு, பட்ஜெட் கார்களில் ஒன்றான மாருதி 800, சூப்பர் ஸ்போர்ட்ஸ் காராக மாறியதைப் பற்றிய தகவலைதான் இந்த பதிவில் காணவிருக்கின்றோம்.

MOST READ: கொரோனா தடுப்பு கவசங்கள் விற்பனையில் இறங்கிய மாருதி!

ஆச்சரியம், ஆனால் உண்மை... நவீன யுக காராக புதிய அவதாரம் எடுத்த மாருதி 800... நம்பவே முடியலையா?

கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களே மாருதி 800 காருக்கு மாறுபட்ட ஸ்போர்ட்ஸ் தோற்றத்தினை வழங்கியிருக்கின்றனர். இதனால் மிகவும் சாந்தமான மாருதி 800 தற்போது ஆக்ரோஷமான பாவனைகளைக் கொண்ட காராக மாறியிருக்கின்றது. இதற்காக பல இழப்புகள் மற்றும் புதுப்பித்தல்களை அது சந்தித்திருக்கின்றது.

ஆச்சரியம், ஆனால் உண்மை... நவீன யுக காராக புதிய அவதாரம் எடுத்த மாருதி 800... நம்பவே முடியலையா?

கடந்த காலங்களில் இக்கார் இதைவிட மிக கொடூரமான தோற்றத்திலெல்லாம் மாற்றி அமைக்கப்பட்டிருக்கின்றது. மூன்று சக்கர வாகனம், டிராக்டர் டயர்களுடன் ராட்சத தோற்றம் என பல அவதாரங்களை மாருதி 800 பெற்றிருக்கின்றது. ஆனால், தற்போது வழங்கப்பட்டிருக்கும் உருமாற்றம் மாருதி 800 காரை மேலும் ரசிக்க செய்யும் வகையில் உள்ளது.

MOST READ: இளையராஜா இசை ஒலிக்க டிராக்டரில் கெத்தாக வந்திறங்கிய தல தோனி... அரிய வீடியோவை வெளியிட்ட சிஎஸ்கே!

ஆச்சரியம், ஆனால் உண்மை... நவீன யுக காராக புதிய அவதாரம் எடுத்த மாருதி 800... நம்பவே முடியலையா?

இதற்காக குறிப்பிட்ட மாடர்ன் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. அதாவது, நவீன தொழில்நுட்ப காலத்திற்கேற்ற புரஜொக்டர் ஹெட்லேம்ப், க்ரில், பம்பர் உள்ளிட்டவை பொருத்தப்பட்டிருக்கின்றன. இத்துடன், வட்டவடிவிலான எல்இடி டிஆர்எல்களும் நிறுவப்பட்டிருக்கின்றன.

ஆச்சரியம், ஆனால் உண்மை... நவீன யுக காராக புதிய அவதாரம் எடுத்த மாருதி 800... நம்பவே முடியலையா?

மேலும், காரின் ஸ்போர்ட்டி லுக்கை தூக்கி காட்டுவதற்காக பானட்டின் மேற்பரப்பில் லிட்டுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இதனால் மாருதி 800 காரின் தோற்றம் வேற லெவல் ஸ்போர்ட்டி லுக்கிற்கு அப்கிரேட் ஆகியிருக்கின்றது. இதனை கூடுதல் முரட்டுத் தனமானதாக மாற்ற ஆஃப் மற்றும் ஆன் ரோடுகளில் பயன்படக்கூடிய டயர்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன.

MOST READ: ஹீரோ எலெக்ட்ரிக் மீது பகிரங்க குற்றச்சாட்டு... ஹோண்டாவின் புகாரால் வாயடைத்த இந்திய டூ-வீலர் சந்தை!

ஆச்சரியம், ஆனால் உண்மை... நவீன யுக காராக புதிய அவதாரம் எடுத்த மாருதி 800... நம்பவே முடியலையா?

இவை காரின் உடற்கூடை விட்டு வெளியே தெரியும்படி பொருத்தப்பட்டிருக்கின்றன. இதனால், சற்றே அரக்கத்தனம் கொண்டதாக உள்ளது மாருதி 800 காரின் தோற்றம். இதற்காக ஃபிளார்டு வீல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இத்துடன், கணிசமான மாற்றத்தை காரின் பின்பக்கத்திலும் அவர்கள் மேற்கொண்டிருக்கின்றனர். சைக்கிள் ரேக், ஸ்போர்ட்ஸ் லுக்கிலான டெயில் மின் விளக்கு உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன.

ஆச்சரியம், ஆனால் உண்மை... நவீன யுக காராக புதிய அவதாரம் எடுத்த மாருதி 800... நம்பவே முடியலையா?

இதைத்தொடர்ந்து, யாரும் எதிர்பாராத ஓர் மாற்றமாக காரின் மேற்கூரையில் சன் ரூஃப் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்திய வாகன பிரியர்கள் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி வரும் பிரிமியம் அம்சங்களில் இதுவும் ஒன்றாகும். இதனை மாருதி 800 பெற்றிருப்பது மிகச் சிறந்த ஒன்றாக உள்ளது.

ஆச்சரியம், ஆனால் உண்மை... நவீன யுக காராக புதிய அவதாரம் எடுத்த மாருதி 800... நம்பவே முடியலையா?

இவற்றுடன் மிகப்பெரிய மாற்றமாக மாருதி 800 காரின் இன்டீரியர் இருக்கின்றது. காரின் இருக்கை மற்றும் டூரல் பேனல்கள் சிவப்பு நிறத்திற்கு அப்கிரேட் செய்யப்பட்டிருக்கின்றது. இது காரின் உட்புறத்திற்கு ஸ்போர்ட்டி லுக்கை வழங்க ஏதுவாக இருக்கின்றது. இதற்காக ரேஸ் கார்களில் இடம்பெறும் பக்கெட் இருக்கைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து, கியர்ஷிப்டரை லிவரையும் ஸ்பேர்கோ தரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

மேலும், காரில் பயணிக்கும்போது குத்து பாடல்களை ரசிக்கின்ற வகையில் அதி நவீன பீட் மற்றும் பேஸ்களை எடுத்தொலிக்கும் ஸ்பீக்கர்கள் புகுத்தப்பட்டிருந்தன. ஆகையால், இந்த மாருதி 800 காரில் பயணிக்கும்போது நிச்சயம் அது ஓர் மாருதி 800 என்ற உணர்வையே வழங்காது என தெரிகின்றது. அந்த அளவிற்கு மிகவும் ஆக்ரோஷமாக அது மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்த வீடியோவை டஜிஸ் பி என்ற யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது.

Most Read Articles
 
English summary
Maruti 800 Converted Into Sporty Car. Read In Tamil.
Story first published: Thursday, June 4, 2020, 20:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X