என்ஜினிற்கு பதிலாக எலக்ட்ரிக் மோட்டார் உடன் மாருதி 800... இதுவும் நல்லாதான் இருக்கு...

ஒரு காலத்தில் இந்திய சந்தையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த மாருதி 800 மாடலின் மாதிரி கார் ஒன்று இவி வெர்சனுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதாவது எரிபொருள் என்ஜினிற்கு மாற்றாக எலக்ட்ரிக் மோட்டாரை பெற்றுள்ள இந்த காரை பற்றிய கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

என்ஜினிற்கு பதிலாக எலக்ட்ரிக் மோட்டார் உடன் மாருதி 800... இதுவும் நல்லாதான் இருக்கு...

1983ல் மாருதி நிறுவனத்தால் 800 பெயர்பலகை சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின் 2014 வரையில் விற்பனையில் தனது ஆதிக்கத்தை செலுத்திவந்த 800 மாடல் தற்போதுவரை அதிக வாடிக்கையாளர்களை பெற்ற இரண்டாவது மாடலாக விளங்குகிறது.

என்ஜினிற்கு பதிலாக எலக்ட்ரிக் மோட்டார் உடன் மாருதி 800... இதுவும் நல்லாதான் இருக்கு...

கிட்டத்தட்ட 2.7 மில்லியன் வரையில் விற்பனையான 800 மாடல் புதியதாக எலக்ட்ரிக் மோட்டார் உடன் அதே பட்ஜெட் விலையில் மீண்டும் விற்பனைக்கு வரவுள்ளதாக முன்பு தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் இதுவரை இதுகுறித்த கூடுதல் விபரங்களும் எதுவும் வெளிவரவில்லை.

இந்த நிலையில் நார்த்வே மோட்டார்ஸ்போர்ட் நிறுவனத்தை சேர்ந்த ஹேமங்க் டெபாட் என்பவரால் மாருதி 800 கார் ஒன்று இவி வெர்சனுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் காரில் முக்கிய அம்சமாக வழங்கப்பட்டுள்ள ஹில் ஹோல்ட் அசிஸ்ட் செயல்பாடு ஆனது சறுக்கலான பாதைகளில் காரின் ட்ராக்‌ஷனுக்கு உதவியாக இருக்கும்.

என்ஜினிற்கு பதிலாக எலக்ட்ரிக் மோட்டார் உடன் மாருதி 800... இதுவும் நல்லாதான் இருக்கு...

ஸ்டாக் 800 மாடலை போல் அல்லாமல் இந்த எலக்ட்ரிக் வாகனத்தில் இரு இருக்கைகள் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்த இருக்கைகளுக்கு அடியில் பொருட்களை வைப்பதற்கு ஏதுவாக வடிவமைத்துள்ளனர். இயக்க ஆற்றலை வழங்குவதற்கு எரிபொருள் என்ஜினிற்கு மாற்றாக 16 பேட்டரி செல்கள் வழக்கம்போல் காரின் முன்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளன.

என்ஜினிற்கு பதிலாக எலக்ட்ரிக் மோட்டார் உடன் மாருதி 800... இதுவும் நல்லாதான் இருக்கு...

48 வோல்ட் சிஸ்டத்துடன் உள்ள 13.2 கிலோவாட்ஸ் செட்அப் ஆனது 19 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் உடன் இணைந்து செயல்படும். இதன் டார்க் திறன் அதிகப்பட்சமாக 70 என்எம் வரையில் சென்றாலும், இது சில வினாடிகளுக்கு மட்டுமே. பிறகு நிலையாக 54 என்எம்-க்கு வந்துவிடும்.

என்ஜினிற்கு பதிலாக எலக்ட்ரிக் மோட்டார் உடன் மாருதி 800... இதுவும் நல்லாதான் இருக்கு...

இதனுடன் இணைக்கப்பட்டுள்ள 7:1 ஸ்டெப்-டவுன் ட்ரான்ஸ்மிஷன் சக்கரங்களுக்கு 378 என்எம்-ஐ உறுதியளிக்கிறது. அதிகப்பட்சமாக 85 kmph வேகத்தில் இயங்கக்கூடிய இந்த எலக்ட்ரிக் 800 கார் முழு சார்ஜில் 120 கிமீ வரையில் இயங்கும்.

என்ஜினிற்கு பதிலாக எலக்ட்ரிக் மோட்டார் உடன் மாருதி 800... இதுவும் நல்லாதான் இருக்கு...

வேகத்தை சரியான விகித்தத்தில் குறைக்க ரீ-ஜெனரேட்டிவ் ப்ரேக்கிங் சிஸ்டத்தை கொண்டுள்ள இந்த மாருதி 800 இவி காரில் டெஸ்லா தயாரிப்புகளுக்கு இணையான தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சிஸ்டத்தின் மூலம் ட்ரைவ், நியூட்ரல் மற்றும் ரிவர்ஸ் உள்ளிட்ட ட்ரைவிங் மோட் செயல்பாடுகளை பெற முடியும்.

என்ஜினிற்கு பதிலாக எலக்ட்ரிக் மோட்டார் உடன் மாருதி 800... இதுவும் நல்லாதான் இருக்கு...

மேலும், பேட்டரியின் சார்ஜ் நிலை, ரேஞ்ச் இண்டிகேஷன், அப்போதைக்கு இருக்கும் பயன்பாடு, வெப்பநிலை அளவு உள்ளிட்ட தகவல்களை காட்டும் விதத்திலான மென்பொருளையும் இதன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் பெற்றுள்ளது. முன்னதாகவே இதே நார்த்வே மோட்டார்ஸ்போர்ட் நிறுவனம் ஹோண்டா ஆக்டிவா மற்றும் செவ்ரோலெட் பீட் உள்ளிட்ட மாடல்களையும் எலக்ட்ரிக் வெர்சனுக்கு மாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Maruti 800 Converted Into EV With 120 KM Range – Detailed Video
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X