பிரம்மாண்டம்... ராட்சத டயர்களுடன் புதிய அவதாரம் எடுத்த மாருதி 800... வாயை பிளந்து பார்க்கும் மக்கள்

இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த மாருதி 800 கார், ராட்சத டயர்களுடன் புதிய அவதாரம் எடுத்துள்ளது.

பிரம்மாண்டம்... ராட்சத டயர்களுடன் புதிய அவதாரம் எடுத்த மாருதி 800... வாயை பிளந்து பார்க்கும் மக்கள்

இந்திய சட்ட திட்டங்களின்படி பார்த்தால், கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்வது தவறான ஒரு விஷயம். ஆனால் சட்டத்தை கண்டு அஞ்சாமல் வாகனங்களை பலர் மாடிஃபிகேஷன் செய்து கொண்டுதான் உள்ளனர். வித்தியாசமான முறையில் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்களை சாலைகளில் நீங்கள் பார்த்திருக்க கூடும்.

பிரம்மாண்டம்... ராட்சத டயர்களுடன் புதிய அவதாரம் எடுத்த மாருதி 800... வாயை பிளந்து பார்க்கும் மக்கள்

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளமும் அத்தகைய செய்திகளை பல முறை வெளியிட்டுள்ளது. ஆனால் வாழ்க்கையில் நீங்கள் இதுவரை பார்த்திராத வகையில், தற்போது ஒரு மாடிபிகேஷன் செய்யப்பட்டுள்ளது. மாருதி சுஸுகி 800 (Maruti Suzuki 800) காரில், டிராக்டர் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் அந்த கார் பார்ப்பதற்கு ஒரு அசூரனை போல் காட்சியளிக்கிறது.

பிரம்மாண்டம்... ராட்சத டயர்களுடன் புதிய அவதாரம் எடுத்த மாருதி 800... வாயை பிளந்து பார்க்கும் மக்கள்

இந்தியர்கள் மத்தியில் மாருதி சுஸுகி 800, மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றாக இன்றளவும் திகழ்கிறது. இந்தியாவில் ஆட்டோமொபைல் சந்தையின் முகத்தை மாற்றிய தனித்துவமான கார்களில் மாருதி சுஸுகி 800 மாடலும் ஒன்று. இன்னும் சொல்லப்போனால் இந்தியர்கள் பலரின் முதல் கார் மாருதி சுஸுகி 800-ஆகதான் இருக்க கூடும்.

பிரம்மாண்டம்... ராட்சத டயர்களுடன் புதிய அவதாரம் எடுத்த மாருதி 800... வாயை பிளந்து பார்க்கும் மக்கள்

மாருதி சுஸுகி 800 கார் சுமார் 31 ஆண்டுகள் உற்பத்தியில் இருந்தது. கடந்த 1983ம் ஆண்டில் தொடங்கப்பட்ட மாருதி சுஸுகி 800 காரின் உற்பத்தி, கடந்த 2014ம் ஆண்டுதான் நிறுத்தப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் மிக அதிக நாட்கள் உற்பத்தியில் இருந்த கார் மாடல்களில் ஒன்றாகவும் மாருதி சுஸுகி 800 பெருமை பெறுகிறது.

பிரம்மாண்டம்... ராட்சத டயர்களுடன் புதிய அவதாரம் எடுத்த மாருதி 800... வாயை பிளந்து பார்க்கும் மக்கள்

உற்பத்தி மற்றும் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டாலும், இன்றும் கூட பலர் மாருதி சுஸுகி 800 காரை தங்கள் வீட்டு பிள்ளை போல் பராமரித்து வருகின்றனர். ஒரு சிலர் நவீன வசதிகளுடன் மாருதி சுஸுகி 800 காரை மாடிஃபிகேஷன் செய்துள்ளனர். இந்த வரிசையில்தான் ஒரு மாருதி சுஸுகி 800 காரில், டிராக்டர் டயர்கள் பொருத்தப்பட்டு வித்தியாசமான முறையில் மாடிஃபிகேஷன் செய்யப்பட்டுள்ளது.

பிரம்மாண்டம்... ராட்சத டயர்களுடன் புதிய அவதாரம் எடுத்த மாருதி 800... வாயை பிளந்து பார்க்கும் மக்கள்

இப்படி ஒரு மாடிஃபிகேஷனை நீங்கள் இதற்கு முன் உங்கள் வாழ்க்கையில் பார்த்திருப்பதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு. HR Experiment என்ற யூ-டியூப் சேனலில், இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் என்னென்ன மாடிஃபிகேஷன்கள் செய்யப்பட்டுள்ளன? என்ற துல்லியமான தகவல்களை அந்த வீடியோ நமக்கு வழங்கவில்லை.

பிரம்மாண்டம்... ராட்சத டயர்களுடன் புதிய அவதாரம் எடுத்த மாருதி 800... வாயை பிளந்து பார்க்கும் மக்கள்

எனினும் டிராக்டர் டயர்கள் பொருத்தப்பட்டு, மாருதி சுஸுகி 800 ஓடுவதை நம்மால் பார்க்க முடிகிறது. அந்த காரின் 4 டயர்களும் மாற்றப்பட்டு, புதிதாக டிராக்டர் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்த டயரின் சைஸ் என்ன என்பது எங்களுக்கு உறுதியாக தெரியவில்லை. எனினும் 28 இன்ச் டயர்களாக இருப்பதை போன்று தெரிகிறது.

பிரம்மாண்டம்... ராட்சத டயர்களுடன் புதிய அவதாரம் எடுத்த மாருதி 800... வாயை பிளந்து பார்க்கும் மக்கள்

சாலையில் குறைவான வேகத்தில் இந்த கார் ஓடுவதை வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால் இந்த காரில், நெருக்கமான வளைவுகளில் டிரைவர் எப்படி திரும்புவார்? என்பது வியப்பாக உள்ளது. வாகனத்தை கம்பீரமாக காட்டுவதற்காக, ஒரு சிலர் பெரிய பெரிய டயர்களை பொருத்துவதை நம்மால் அடிக்கடி பார்க்க முடிகிறது.

பிரம்மாண்டம்... ராட்சத டயர்களுடன் புதிய அவதாரம் எடுத்த மாருதி 800... வாயை பிளந்து பார்க்கும் மக்கள்

ஆனால் பெரிய டயர்களை பொருத்தினால், அது உங்கள் காரில் எதிர்மறையான தாக்கங்களை உண்டாக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உண்மையில் காருடன் வரும் டயர்களை காட்டிலும் பெரிய டயரை பொருத்தினால், சஸ்பென்ஸன் அமைப்பில் பிரச்னைகள் ஏற்படலாம். மேலும் மைலேஜ் குறைவதற்கும் அது ஒரு காரணமாக இருக்கும்.

பிரம்மாண்டம்... ராட்சத டயர்களுடன் புதிய அவதாரம் எடுத்த மாருதி 800... வாயை பிளந்து பார்க்கும் மக்கள்

அத்துடன் அது பிரேக் மற்றும் வாகனத்தின் மற்ற முக்கிய பாகங்களுக்கு கூடுதல் அழுத்தத்தை கொடுப்பது போலாகி விடும். பெரிய டயர்களை பொருத்தினால், வாகனத்தின் ஹேண்ட்லிங் மற்றும் சௌகரியத்திலும் பாதிப்புகள் உண்டாவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ராட்சத டயர்கள் பொருத்தப்பட்டு மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட மாருதி 800 காரின் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

காருடன் வரும் டயரின் அளவை காட்டிலும் இதுபோன்ற பெரிதான டயர்களை பொருத்தினால், வாகனத்திற்கு பாதிப்புகள் ஏற்படும் என்பதுடன், காவல் துறையினர் உங்களுக்கு அபராதம் விதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. டயரின் அளவை மாற்றுவது என்பது வாகனத்தின் நீண்ட ஆயுளை பாதிக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

Most Read Articles
English summary
Maruti 800 Modified With Tractor Tyres - Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X