கொரோனா தடுப்பு கவசங்கள் விற்பனையில் இறங்கிய மாருதி!

கொரோனா தடுப்புக்காக பயன்படுத்தப்படும் பொருட்களை தனது ஜெனியூன் ஆக்சஸெரீஸ் பட்டியலில் சேர்த்துள்ளது மாருதி கார் நிறுவனம். கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

கொரோனா தடுப்பு கவசங்கள் விற்பனையில் இறங்கிய மாருதி!

கொரோனாவால் கார் நிறுவனங்கள் கடும் இழப்பை சந்தித்து வருகின்றன. வாடிக்கையாளர்களை கவரும் விதமாக எளிய கடன் திட்டங்கள், சேமிப்புச் சலுகைகளையும் அறிவித்து வருகின்றன. இதற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்துள்ள நிலையிலும், இயல்பு நிலைக்கு திரும்புவுதற்கு இன்னும் கால அவகாசம் தேவைப்படும் என்று தெரிகிறது.

கொரோனா தடுப்பு கவசங்கள் விற்பனையில் இறங்கிய மாருதி!

இந்த நிலையில், நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி விற்பனையை அதிகரிக்கும் முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. ஆன்லைன் மூலமாக கார்களை புக்கிங் செய்து வீட்டிற்கே டோர் டெலிவிரி தரும் திட்டத்தை அறிவித்தது. அத்துடன், சில சிறப்பு கார் கடன் திட்டங்களையும் அறிவித்தது.

MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

கொரோனா தடுப்பு கவசங்கள் விற்பனையில் இறங்கிய மாருதி!

மேலும், கார் குத்தகைக்கு விடும் தொழிலிலும் இறங்குவது குறித்து பரிசீலித்து வருகிறது. இந்த சூழலில், கொரோனாவிற்கான பிறகான காலத்தில் அத்தியாவசியமாக மாறி இருக்கும் முக கவசங்கள், கார்களில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கொடுக்கப்படும் தடுப்பு பாலிதீன் கவர்கள், கையுறைகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து கண்களை பாதுகாக்கும் டிஸ்போஸிபிள் மூக்கு கண்ணாடிகள், காலணி கவர் உள்ளிட்ட அனைத்தையும் தனது ஜெனியூன் ஆக்சஸெரீஸ் பட்டியலில் சேர்த்துள்ளது. இதனால், இனி மாருதியின் ஆன்லைன் தளம் மூலமாகவும், டீலர்கள் மூலமாகவும் இந்த கொரோனா தடுப்பு சாதனங்களை வாங்க முடியும்.

MOST READ: மெதுவாக பழைய நிலைமைக்கு திரும்பும் இந்திய ஆட்டோமொபைல் துறை.. கடந்த மாதம் அதிகம் விற்பனையான கார் எது?

கொரோனா தடுப்பு கவசங்கள் விற்பனையில் இறங்கிய மாருதி!

மாருதியின் ஜெனியூன் ஆக்சஸெரீஸ் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள இந்த கொரோனா தடுப்பு சாதனங்களுக்கு ரூ.10 முதல் ரூ.649 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிசந்தையில் கிடைக்கும் பொருட்களை விட விலையிலும், தரத்திலும் மதிப்பு வாய்ந்ததாக இருக்கும்.

கொரோனா தடுப்பு கவசங்கள் விற்பனையில் இறங்கிய மாருதி!

காருக்குள் முன்வரிசை இருக்கைகள் மற்றும் பின் வரிசை இருக்கையை தனியாக தடுக்கும் விதத்தில் கொடுக்கப்படும் பார்ட்டிசன் பாலிதீன் கவர் தற்போது ஆல்ட்டோ, வேகன் ஆர், செலிரியோ, ரிட்ஸ், எஸ் க்ராஸ், டிசையர், எர்டிகா மற்றும் சியாஸ் கார்களுக்கு பொருத்தும் வகையில் கிடைக்கிறது. இந்த தடுப்பு கவரை எளிதாக பொருத்துவதற்கும், கழற்றுவதற்கும் ஏதுவானதாக இருக்கிறது.

MOST READ: ஹீரோ எலெக்ட்ரிக் மீது பகிரங்க குற்றச்சாட்டு... ஹோண்டாவின் புகாரால் வாயடைத்த இந்திய டூ-வீலர் சந்தை!

கொரோனா தடுப்பு கவசங்கள் விற்பனையில் இறங்கிய மாருதி!

காரின் தரையிலிருந்து கூரை வரை அழகாக பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இது முழுமையான கொரோனா தடுப்பு ஆக்சஸெரீயாக இருக்கும் என்று மாருதி சுஸுகி நம்பிக்கை தெரிவிக்கிறது. பின்னால் அமர்ந்திருக்கும் பயணிகள் முன்புறத்தை தெளிவாக பார்க்கும் விதத்திலும் இது இருப்பது கூடுதல் விசேஷமாக இருக்கும்.

கொரோனா தடுப்பு கவசங்கள் விற்பனையில் இறங்கிய மாருதி!

இதுதவிர்த்து, காரின் உட்புறத்தை சுத்தப்படுத்துவதற்கும், காற்று சுத்திகரிப்புக்கும் பல ஆக்சஸெரீகளை வழங்குகிறது. இன்டீரியர் க்ளீனர்ஸ், ஏர் ஃபில்டர்கள் மற்றும் ஏர் பியூரிஃபயர்கள் ஆகியவை ரூ.2,000 முதல் ரூ.4,000 விலையில் கிடைக்கும். மாருதி சுஸுகியின் இந்த கொரோனா தடுப்பு சாதனங்கள் வாடிக்கையாளர்களிடத்தில் அதிக வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MOST READ: தீவிர சோதனை ஓட்டங்களில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டொயொட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவை சமாளிக்குமா...?

கொரோனா தடுப்பு கவசங்கள் விற்பனையில் இறங்கிய மாருதி!

கொரோனா தொற்று குறைவான பகுதிகளில் உள்ள டீலர்கள், சர்வீஸ் மையங்கள் ஆகியவற்றை மாருதி சுஸுகி திறந்துவிட்டது. கடந்த ஆண்டு மத்தியிலிருந்து இந்த ஷோரூம்கள், சர்வீஸ் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த மாதம் 18,539 யூனிட்டுகளை மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Maruti Suzuki has introduced a range of new health and safety accessories in the Indian market. The new genuine accessories list from Maruti Suzuki now include partitions, face masks, shields, gloves, disposable eye gear and a number of others.
Story first published: Thursday, June 4, 2020, 11:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X