கொரோனா காலத்தில் இந்த கார் மட்டும் எப்படி விற்பனையாகுதுனு தெரியலயே... புதிய சாதனை படைத்த மாருதிஆல்டோ

மாருதி சுஸுகி ஆல்டோ மாடல் இந்திய சந்தையில் விற்பனையில் 40 லட்சம் என்ற புதிய மைல்கல்லை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

கொரோனா காலத்தில் இந்த கார் மட்டும் எப்படி விற்பனையாகுதுனு தெரியலயே... புதிய சாதனை படைத்த மாருதிஆல்டோ

இந்தியாவில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக உள்ள மாருதி சுஸுகியின் ஆல்டோ காரின் பிரபலத்தை பற்றி நான் கூறி தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்றில்லை. ஏனெனில் இதுவரை ஆல்டோ வாங்கியுள்ளவர்களில் 76 சதவீதத்தினர் தங்களது முதல் காராக அதனை வாங்கியுள்ளனர்.

கொரோனா காலத்தில் இந்த கார் மட்டும் எப்படி விற்பனையாகுதுனு தெரியலயே... புதிய சாதனை படைத்த மாருதிஆல்டோ

இதில் இருந்து வாடிக்கையாளர்களின் தேர்வுகளில் மாருதி ஆல்டோ மாடல் எத்தகைய நிலையில் உள்ளது என்பதை அறியலாம். ஆல்டோ மாடல் இவ்வாறான சாதனையை வாடிக்கையாளர்களின் ஆதரவு இல்லாமல் நிச்சயம் அடைந்திருக்க முடியாது என மாருதி சுஸுகி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் இந்த கார் மட்டும் எப்படி விற்பனையாகுதுனு தெரியலயே... புதிய சாதனை படைத்த மாருதிஆல்டோ

முதன்முதலாக இந்தியாவில் 2000ல் அறிமுகமான மாருதியின் ஆல்டோ இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாட்டு சந்தைகளில் சிறந்த விற்பனை மாடலாக விளங்கியுள்ளது. ஏனெனில் தயாரிப்பு நிறுவனம் இந்த ஹேட்ச்பேக் மாடலுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் அப்கிரேட்களையும் புதிய தொழிற்நுட்பங்களையும் வழங்குவதை எப்போதும் மறந்தது இல்லை.

கொரோனா காலத்தில் இந்த கார் மட்டும் எப்படி விற்பனையாகுதுனு தெரியலயே... புதிய சாதனை படைத்த மாருதிஆல்டோ

ஆல்டோ மாடலினால் தான் கடந்த 16 வருடங்களாக இந்திய சந்தையில் கார் தயாரிப்பில் தலைமை பொறுப்பை வகித்து வருவதாகவும் மாருதி சுஸுகி நிறுவனம் கூறியுள்ளது. இதுகுறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஷஷாங்க் ஸ்ரீவஸ்தாவா கூறுகையில், கடந்த 16 வருடங்களாக ஆல்டோ மாடல் விற்பனையில் நம்பர்.1 காராக விளங்கி வருகிறது.

கொரோனா காலத்தில் இந்த கார் மட்டும் எப்படி விற்பனையாகுதுனு தெரியலயே... புதிய சாதனை படைத்த மாருதிஆல்டோ

இந்த நிலையில் இந்த ஹேட்ச்பேக் கார் விற்பனையில் மற்றுமொரு மைல்கல்லாக 40 லட்சத்தை கடந்திருப்பதை தற்போது அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். இது வேறெந்த இந்திய காரும் அடைய முடியாத விற்பனை சாதனையாக மாறியுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக, ப்ராண்ட் ஆல்டோ வாடிக்கையாளர்களுடன் வலுவான பிணைப்பை ஏற்படுத்தி கொண்டுள்ளது.

கொரோனா காலத்தில் இந்த கார் மட்டும் எப்படி விற்பனையாகுதுனு தெரியலயே... புதிய சாதனை படைத்த மாருதிஆல்டோ

அதுவே தற்போது எங்களது பெருமையின் வலுவான அடையாளமாக மாறிவிட்டது. இந்த சாதனையை இந்தியாவின் விருப்பமான காரான ஆல்டோவின் மீது நம்பிக்கை வைத்து வாடிக்கையாளர்களாக மாறியுள்ள ஆல்டோ குடும்பத்தார்களுக்கு சமர்பிக்கிறோம் என தெரிவித்தார்.

கொரோனா காலத்தில் இந்த கார் மட்டும் எப்படி விற்பனையாகுதுனு தெரியலயே... புதிய சாதனை படைத்த மாருதிஆல்டோ

மாருதி ப்ராண்டின் அப்கிரேட்கள் மற்றும் புதிய தலைமுறைகளின் ஈர்ப்பு எந்த அளவிற்கு வாடிக்கையாளர்களிடம் சென்றடைந்துள்ளது என்பதற்கு ஆல்டோவின் வலுவான வாடிக்கையாளர்கள் தளமே சான்று. லேட்டஸ்ட் க்ராஷ் மற்றும் பாதசாரிகள் பாதுகாப்பு ஒழுங்குமுறைகளுடன் பிஎஸ்6 அப்டேட்டை பெற்ற முதல் இந்திய எண்ட்ரீ-லெவல் காராக மாருதி ஆல்டோ விளங்குகிறது.

கொரோனா காலத்தில் இந்த கார் மட்டும் எப்படி விற்பனையாகுதுனு தெரியலயே... புதிய சாதனை படைத்த மாருதிஆல்டோ

ஹேட்ச்பேக் ரக காரான ஆல்டோவின் ஆரம்ப விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.2.95 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக ரூ.4.36 லட்சத்திலும் விற்பனை செய்யப்படும் இந்த காரின் மைலேஜ் 22.05 kmpl ஆகும். அதுவே இதன் சிஎன்ஜி வேரியண்ட் 31.56 kmpl என்ற மைலேஜ்ஜை வழங்குகிறது.

Most Read Articles

English summary
Maruti Sold 40 Lakh Alto Cars
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X