மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம்...

இந்தியாவின் மிக பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசுகி, தனது பிரபல ஆல்டோ மாடலின் பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட்டை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இதன் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.4.33 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 எஸ்-சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம்...

ஆல்டோ மாடலின் இந்த புதிய வேரியண்ட் காரின் அறிமுகம் குறித்து இந்நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை பிரிவின் நிர்வாக இயக்குனர் ஷஷாங்க் ஸ்ரீவஸ்தாவா கருத்து தெரிவித்துள்ளார்.

மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 எஸ்-சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம்...

அவர் கூறுகையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த, அதேநேரத்தில் அப்டேட்டான தொழிற்நுட்பங்களில் உருவாக்கப்பட்ட வாகனங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க மாருதி நிறுவனம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பசுமையான போக்குவரத்தை ஊக்கப்படுத்தும் விதமாக தற்போடு ஆல்டோ மாடலின் பிஎஸ்6 எஸ்-சிஎன்ஜி வேரியண்ட் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 எஸ்-சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம்...

இந்த ஆல்டோ பிஎஸ்6 எஸ்-சிஎன்ஜி வேரியண்ட், செயல்படுத்திறன், பாதுகாப்பு, என்ஜின் ஆயுள், சவுகரியமான பயணம் மற்றும் அதிக மைலேஜ் என அனைத்திற்கும் ஏற்ற விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது என கூறினார். இரட்டை சார்புடைய எலக்ட்ரானிக் கண்ட்ரோல் யூனிட்கள் (ECU) மற்றும் இன்ஜெக்‌ஷன் சிஸ்டத்துடன் இந்த பிஎஸ்6 வேரியண்ட் விற்பனை செய்யப்படவுள்ளது.

மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 எஸ்-சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம்...

அதிகப்படியான செயல்படுத்திறனை பெறும் வகையில் ட்யூன் செய்யப்பட்டுள்ள இந்த புதிய ஹேட்ச்பேக் மாடல், அனைத்து விதமான சாலைகளுக்கும் ஏற்ற ட்ரைவிங் ஸ்டைலை கொண்டுள்ளது. வெளிப்புற காரின் நிறத்தில் கதவுகளின் ஹேண்டில்கள், பம்பர்கள் மற்றும் சக்கரங்கள் வரை காரை முழுவதும் மறைக்கக்கூடிய கவர்கள் உள்ளிட்டவை இந்த பிஎஸ்6 மாடலில் வழங்கப்பட்டுள்ளன.

மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 எஸ்-சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம்...

உட்புறத்தில் இந்த பிஎஸ்6 கார் இரு நிறங்களில் தீம் அமைப்பை பெற்றுள்ளது. ஃபாப்ரிக் & வின்யெல் துணிகளால் அலங்கரிக்கப்பட்ட இருக்கை அமைப்பு மற்றும் சில்வர் நிறம் பூசப்பட்ட ஸ்டேரிங் சக்கரம் மற்றும் உட்புற கதவு ஹேண்டில்களால் இந்த 2020 மாடலின் கேபின் புதுமையான தோற்றத்தில் காட்சியளிக்கிறது.

மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 எஸ்-சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம்...

ஓட்டுனர்களின் விருப்பத்திற்கேற்ப பவர் ஸ்டேரிங், முன்புற பவர் விண்டோஸ், இன்-ஸ்பீடோமீட்டர் நேர திரை, ரிமோட் மூலமாக கண்ட்ரோல் செய்யக்கூடிய பின்புற கதவுகள் மற்றும் எரிபொருள் மூடி உள்ளிட்டவையும் இந்த ஆல்டோ பிஎஸ்6 எஸ்-சிஎன்ஜி வேரியண்ட்டில் கொடுக்கப்பட்டுள்ளன.

மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 எஸ்-சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம்...

பாதுகாப்பு அம்சங்களாக இந்த பிஎஸ்6 மாடலில் ஹெட்லைட்டின் ஒளியை கட்டுப்படுத்தும் வசதி, என்ஜின் இம்மொபிளிசர், பல கண்ட்ரோல் வசதிகளுடன் ஸ்டேரிங் சக்கரம், குழந்தைகளால் திறக்க முடியாத வகையில் பின்புற கதவுகளுக்கு லாக், முன்புறத்தில் இரு காற்றுப்பைகள், இபிடியுடன் உள்ள ஏபிஎஸ் ப்ரேக்கிங் அமைப்பு, பின்புற பார்க்கிங் சென்சார் மற்றும் சீட் பெல்ட் அணிவதை & அதிவேகத்தை எச்சரிக்கும் அலாரம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 எஸ்-சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம்...

மூன்று-சிலிண்டர் அமைப்பை கொண்ட 796சிசி என்ஜினை பிஎஸ்6 தரத்தில் பெற்றுள்ள ஆல்டோவின் இந்த புதிய எஸ்-சிஎன்ஜி மாடல், அதிகப்பட்சமாக 40 பிஎச்பி பவர் மற்றும் 60 என்எம் டார்க் திறனில் இயங்கவுள்ளது. இதன் என்ஜினுடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக இணைக்கப்பட்டுள்ளது.

மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 எஸ்-சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம்...

எல்எக்ஸ்ஐ சிஎன்ஜி & எல்எக்ஸ்ஐ (ஒ) சிஎன்ஜி என இரு ட்ரிம்களில் டீலர்ஷிப்களில் கிடைக்கவுள்ள இந்த பிஎஸ்6 மாடலின் ட்ரிம்களின் விலை இந்திய எக்ஸ்ஷோரூமில் முறையே ரூ.4,32,700 மற்றும் ரூ.4,36,300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 எஸ்-சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம்...

சந்தையில் அதிகளவில் பிஎஸ்6 கார்களை அறிமுகப்படுத்தியுள்ள நிறுவனமாக மாருதி சுசுகி விளங்குகிறது. புதிய மாசு உமிழ்வு விதி இந்தியாவில் அமலாக இன்னும் கிட்டத்தட்ட 2 மாதங்கள் உள்ளதால், இந்நிறுவனத்தில் இருந்து மேலும் சில பிஎஸ்6 கார்களின் அறிமுகங்களையும் எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Maruti Suzuki Alto BS6 CNG Model Launched In India Starting At Rs 4.33 Lakh Ex-Showroom
Story first published: Monday, January 27, 2020, 18:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X