பிரபலமான மாருதி சுசுகி ஆல்டோ கே10-ன் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டது..!

மாருதி சுசுகி நிறுவனம் பிரபலமான ஆல்டோ கே10 மாடலின் விற்பனையை இந்திய சந்தையில் இருந்து நிறுத்தியுள்ளது. இதனால் இந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் இருந்து இந்த காரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

பிரபலமான மாருதி சுசுகி ஆல்டோ கே10-ன் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டது..!

பிஎஸ்6-க்கு அப்டேட் செய்யப்படாததால் சந்தையில் இருந்து தற்காலிகமாக விடைபெறும் இந்த மாடலின் பிஎஸ்4 வெர்சன்கள் அனைத்தும் கடந்த ஆண்டு இறுதியிலேயே விற்று தீர்க்கப்பட்டன. ஆல்டோ கே10 மாடல் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்படவுள்ளதா அல்லது இல்லையா என்பது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

பிரபலமான மாருதி சுசுகி ஆல்டோ கே10-ன் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டது..!

மாருதி ஆல்டோ கே10 மாடல் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மூலமாக இயக்க ஆற்றலை பெற்று வருகிறது. இந்த என்ஜின் தான் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்படவில்லை. ஆனால் இந்த பெட்ரோல் என்ஜின் கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு வந்த எஸ்-பிரெஸ்ஸோ மாடலில் பிஎஸ்6 தரத்தில் கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரபலமான மாருதி சுசுகி ஆல்டோ கே10-ன் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டது..!

இந்த பெட்ரோல் என்ஜின் பிஎஸ்4 தரத்தில் அதிகப்பட்சமாக 67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இந்த 988சிசி என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகின்றன. மேலும் மாருதி நிறுவனம் இந்த காரில் சிஎன்ஜி தொழிற்நுட்பத்தையும் வழங்கி வந்தது.

பிரபலமான மாருதி சுசுகி ஆல்டோ கே10-ன் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டது..!

ஆல்டோ கே10 மாடலின் தற்போதை பிஎஸ்4 வெர்சனிற்கு எல்எக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ (ஒ), விஎக்ஸ்ஐ ஏஎம்டி மற்றும் எல்எக்ஸ்ஐ சிஎன்ஜி உள்ளிட்ட ட்ரிம்கள் வழங்கப்பட்டு வந்தன. இவற்றின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.3.60 லட்சத்தில் இருந்து ரூ.4.39 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

பிரபலமான மாருதி சுசுகி ஆல்டோ கே10-ன் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டது..!

கே10 மாடலின் விற்பனை நிறுத்தத்தால் இந்த ஹேட்ச்பேக் கார் தற்போதைக்கு சிங்கிள் 0.8 லிட்டர் என்ஜின் தேர்வில் மட்டும் தான் கிடைக்கும். பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்ட இந்த 796சிசி பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 6000 ஆர்பிஎம்-ல் 47 பிஎச்பி பவரையும், 3000 ஆர்பிஎம்-ல் 69 என்ம் டார்க் திறனையும் காருக்கு வழங்கும்.

பிரபலமான மாருதி சுசுகி ஆல்டோ கே10-ன் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டது..!

இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக வழங்கப்படுகிறது. 0.8 லிட்டர் என்ஜினில் மாருதி ஆல்டோ எஸ்டிடி, எஸ்டிடி (ஒ), எல்எக்ஸ்ஐ, எல்எக்ஸ்ஐ (ஒ), விஎக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ+, எல்எக்ஸ்ஐ சிஎன்ஜி மற்றும் எல்எக்ஸ்ஐ (ஒ) சிஎன்ஜி போன்ற வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும்.

பிரபலமான மாருதி சுசுகி ஆல்டோ கே10-ன் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டது..!

இவற்றின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.2.94- ரூ.4.36 லட்சமாக உள்ளது. மாருதி சுசுகி ஆல்டோ மாடலை பற்றி நான் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. ஏனெனில் ஒவ்வொரு மாதத்திலும் கணிசமாக விற்பனை எண்ணிக்கைகளால் சந்தையில் பிரபலமான ஹேட்ச்பேக் மாடல்களுள் ஒன்றாக உள்ளது.

Most Read Articles
English summary
Maruti Suzuki Alto K10 Discontinued: Officially Unlisted From Website
Story first published: Friday, April 24, 2020, 22:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X