முரண்பாடான ஒன்றுதான் இருந்தாலும் ரசிக்காம இருக்க முடியல... ஏன்ன இந்த கார் அவ்ளோ கவர்ச்சியா இருக்கு!

நம்ப முடியாத உருவத்திற்கு மாருதி ஆல்டோ கார் மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ மற்றும் தகவலை இப்பதிவில் காணலாம்.

முரண்பாடான ஒன்றுதான் இருந்தாலும் ரசிக்காம இருக்க முடியல... ஏன்ன இந்த கார் அவ்ளோ கவர்ச்சியா இருக்கு! வீடியோ!

நாட்டிலேயே அதிகம் விற்பனையாகும் கார் என்ற பெருமைக்குரிய வாகனங்களில் மாருதி ஆல்டோ மாடலும் ஒன்றாக இருக்கின்றது. மிகச்சிறிய உருவம், அனைவரும் எளிதில் நுகரக்கூடிய விலை, நல்ல மைலேஜ் உள்ளிட்ட காரணங்களால் இந்த காருக்கு எப்போதும் இந்தியர்கள் மத்தியில் தனித்துவமான வரவேற்பு நிலவி வருகின்றது.

முரண்பாடான ஒன்றுதான் இருந்தாலும் ரசிக்காம இருக்க முடியல... ஏன்ன இந்த கார் அவ்ளோ கவர்ச்சியா இருக்கு! வீடியோ!

இத்தகைய சிறப்பான காருக்கே மேலும் சிறப்பு கூட்டு விதமாக தனியார் வாகன மாடிஃபிகேஷன் நிறுவனம் ஸ்பெஷல் அலங்காரங்களைச் செய்திருக்கின்றது. ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தை மையமாகக்கொண்டு இயங்கும் இன்ஷா அல்லாஹ் மோட்டார்ஸ் எனும் நிறுவனமே இந்த தரமான சம்பவத்தை செய்திருக்கின்றது.

முரண்பாடான ஒன்றுதான் இருந்தாலும் ரசிக்காம இருக்க முடியல... ஏன்ன இந்த கார் அவ்ளோ கவர்ச்சியா இருக்கு! வீடியோ!

பொதுவாக மாருதி ஆல்டோ கார் என்றாலே மிகவும் சாதுவான மற்றும் எளிமைக்கு பெயர் போன தோற்றத்தைக் கொண்டிருக்கும் வாகனமாக இருந்து வருகின்றது. மக்கள் மத்தியில் இருக்கும் இந்த எண்ணத்தை உடைக்கும் வகையிலேயே தற்போதைய மாடிஃபிகேஷன் சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. தனியார் நிறுவனம் மேற்கொண்ட நடவடிக்கையால் இந்த பெருமையை இழந்திருக்கின்றது என்றே கூறலாம். இருப்பினும், இந்த இழப்பு அதற்கு கூடுதல் பெருமையைச் சேர்க்கும் விதமாக அமைந்திருப்பது நமக்கு ஆச்சரியமளிக்கும் வகையில் இருக்கின்றது.

முரண்பாடான ஒன்றுதான் இருந்தாலும் ரசிக்காம இருக்க முடியல... ஏன்ன இந்த கார் அவ்ளோ கவர்ச்சியா இருக்கு! வீடியோ!

குறிப்பாக, மாருதி ஆல்டோவிற்கு வழங்கப்பட்டிருக்கும் புதிய கிராணைட் கிரே நிறம் சொல்லிலடங்கா கவர்ச்சியை மிக நேர்த்தியாக வழங்கியிருக்கின்றது. இதுமட்டுமின்றி காரின் முகப்பு பகுதிக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாக கிரில், பம்பர், மின் விளக்கு மற்றும் பனி விளக்குகள் உள்ளிட்டவை மாற்றப்பட்டு, சந்தைக்குப் பிறகான அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

முரண்பாடான ஒன்றுதான் இருந்தாலும் ரசிக்காம இருக்க முடியல... ஏன்ன இந்த கார் அவ்ளோ கவர்ச்சியா இருக்கு! வீடியோ!

இதில், பனி விளக்கிற்கு கீழே சீரியல் மின் விளக்குகள் இடம் பெற்றிருப்பது மிகவும் அட்டகாசமான ஒன்றாக காட்சியளிக்கின்றது. இவையனைத்தும் சேர்ந்தே ஆல்டோவிற்கு ஸ்போர்ட்டி தோற்றத்தை வழங்குகின்றன. இதுமட்டுமின்றி முகப்பு மின் விளக்கிற்கு புருவம் முளைத்ததைப் போல் நிறுவப்பட்டிருக்கும் சிவப்பு நிற எல்இடி மின் விளக்குகள், ஆல்டோவை கவர்ச்சியின் உச்சத்திற்கே எடுத்துச் சென்றிருக்கின்றன.

முரண்பாடான ஒன்றுதான் இருந்தாலும் ரசிக்காம இருக்க முடியல... ஏன்ன இந்த கார் அவ்ளோ கவர்ச்சியா இருக்கு! வீடியோ!

ஆல்டோவின் முன்பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்களைப் போலவே பக்கவாட்டு பகுதியிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அதாவது, புதிய அலாய் வீல் மற்றும் அந்த வீலின் மையப்பகுதியில் சிவப்பு-கருப்பு நிற பேட்ஜ் ஆகியவை சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதைத்தொடர்ந்து, பின்பக்கத்திலும் சில மாற்றங்கள் மற்றும் புதிய அணிகலன்கள் சேர்ப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளது.

முரண்பாடான ஒன்றுதான் இருந்தாலும் ரசிக்காம இருக்க முடியல... ஏன்ன இந்த கார் அவ்ளோ கவர்ச்சியா இருக்கு! வீடியோ!

இதன்படி, சுசுகி லோகோ நீக்கப்பட்டு, அந்த இடத்தில் டிரான்ஸ்பார்மர் பேட்ஜ் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஒற்றைக் குழாய் புகைப்போக்கும் கருவி நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக இரட்டைக் குழாய் அமைப்புடைய புகைப்போக்கும் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இதனை காரின் முனைகளிலும் மாடிஃபிகேஷன் நிறுவனம் பொருத்தியிருக்கின்றது.

முரண்பாடான ஒன்றுதான் இருந்தாலும் ரசிக்காம இருக்க முடியல... ஏன்ன இந்த கார் அவ்ளோ கவர்ச்சியா இருக்கு! வீடியோ!

தொடர்ந்து, நிறுத்தத்தைக் குறிக்கும் பின்பக்க சிவப்பு நிற விளக்குகளிலும் டிரான்ஸ்பார்மர் சின்னத்தைக் குறிக்கக் கூடிய மின் அமைப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவையனைத்தும் சேர்ந்துதான் ஆல்டோவை டிரான்ஸ்பார்மர்ஸ் காராக மாற்றியிருக்கின்றன. இதுபோன்ற மாற்றங்களால்தான் இக்கார் தற்போது பலரின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியுள்ளது.

முரண்பாடான ஒன்றுதான் இருந்தாலும் ரசிக்காம இருக்க முடியல... ஏன்ன இந்த கார் அவ்ளோ கவர்ச்சியா இருக்கு! வீடியோ!

என்னதான் இக்கார் கவர்ச்சியானதாக காட்சியளித்தாலும் இதுபோன்று வாகனத்தின் உண்மைத் தோற்றத்தை மாற்றியமைப்பது இந்திய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி குற்றமாகும். இதற்காக பலர் அபராதத்தைப் பெற்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இருப்பினும், இக்காரின் கவர்ச்சியை நம்மால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை.

முரண்பாடான ஒன்றுதான் இருந்தாலும் ரசிக்காம இருக்க முடியல... ஏன்ன இந்த கார் அவ்ளோ கவர்ச்சியா இருக்கு! வீடியோ!

காரின் வெளிப்புறத்தைப் போலவே உட்புறத்திலும் பல்வேறு சிறப்பு அணிகலன்களை இன்ஷா அல்லாஹ் மோட்டார்ஸ் நிறுவனம் சேர்த்திருக்கின்றது. குறிப்பாக, புதிய வடிவம் மற்றும் சொகுசான உணர்வை வழங்கக்கூடிய இருக்கைகள் மாற்றப்பட்டிருப்பது கவனிக்கதக்கதாக இருக்கின்றது. சிவப்பு மற்றும் கருப்பு நிற உறை இந்த இருக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

முரண்பாடான ஒன்றுதான் இருந்தாலும் ரசிக்காம இருக்க முடியல... ஏன்ன இந்த கார் அவ்ளோ கவர்ச்சியா இருக்கு! வீடியோ!

இதேபோன்று, காரின் டேஷ்போர்டு, ஸ்டியரிங் வீல், கதவு மற்றும் ஏசி வெண்டுகள் ஆகியவற்றிலும் நிறமாற்றம் செய்யப்பட்ட பேனல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, கதவுகள் மற்றும் ஏசி வெண்டுகளுக்கு புதிய சிவப்பு நிற பேனலும், டேஷ்போர்டிற்கு சிமெண்ட் நிற பேனலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி, புதிய பெரிய உருவத்திலான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கின்றது. இது பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள உதவும்.

முரண்பாடான ஒன்றுதான் இருந்தாலும் ரசிக்காம இருக்க முடியல... ஏன்ன இந்த கார் அவ்ளோ கவர்ச்சியா இருக்கு! வீடியோ!

மேலும், பிரீமியம் வசதியாக ஆம்பிலிஃபையருடன் கூடிய ஜேபிஎல் மியூசிக் சிஸ்டம் இக்காரில் சேர்க்கப்பட்டிருக்கின்றது. இதுபோன்ற பல்வேறு மாற்றங்களை ஆல்டோ கார் பெற்றிருக்கின்றது. இதனால், சந்தைக்கு புதிதாக விற்பனைக்கு வந்திருக்கும் ஆல்டோவாக இது மாறியிருக்கின்றது. ஆனால் இம்மாதிரியான அம்சங்களுடன் மாருதி நிறுவனம் ஆல்டோவை விற்பனைச் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஒட்டுமொத்த மாற்றத்திற்குமான செலவு பற்றிய முழு விபரம் தெரியவில்லை. மேலும், எஞ்ஜினில் ஏதேனும் மாற்றப்பட்டிருக்கின்றதா என்பது பற்றிய தகவலும் இல்லை. தற்போது விற்பனையில் இருக்கும் மாருதி ஆல்டோ கார்களில் 0.8 லிட்டர் 3 சிலிண்டர் நேட்சுரல்லி அஸ்பயர்ட் பெட்ரோல் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்கும் இந்த மோட்டார், அதிகபட்சமாக 47 பிஎஸ் மற்றும் 62 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டது.

Most Read Articles
English summary
Maruti Alto Modified Into Transformers Car Video. Read In Tamil.
Story first published: Thursday, October 1, 2020, 11:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X