மாருதி பலேனோ காரை நிச்சயமா இந்த தோற்றத்தில் பார்த்திருக்க மாட்டீங்க...

மாருதி சுசுகி நிறுவனத்தில் இருந்து ஹேட்ச்பேக் பிரிவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற பலேனோ மாடல், இதுவரை பார்த்திராத தோற்றத்திற்கு கஸ்டமைஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள வீடியோவை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

மாருதி பலேனோ காரை நிச்சயமா இந்த தோற்றத்தில் பார்த்திருக்க மாட்டீங்க...

மாருதி பலேனோ, இந்திய சந்தையில் பிரபலமான கார் மாடல்களுள் ஒன்றாக உள்ளது. குறிப்பாக ஹேட்ச்பேக் பிரிவில் சிறந்த விற்பனை காராக கடந்த சில வருடங்களாக இந்த கார் விளங்கி வருகிறது. இருப்பினும் வாடிக்கையாளர்களின் மத்தியில் இதன் தோற்றத்திற்கு கிடைக்கும் வரவேற்பு மெல்ல குறைந்து வருவதால், தற்போதைய தலைமுறை பலேனோ மாடலின் விற்பனை எப்போது வேண்டுமானாலும் நிறுத்தப்படலாம்.

மாருதி பலேனோ காரை நிச்சயமா இந்த தோற்றத்தில் பார்த்திருக்க மாட்டீங்க...

மாடர்ன் தோற்றம், ஏற்புடைய ரைட் தரம் மற்றும் அதிக அம்சங்கள் கொண்ட காற்றோட்டமான கேபின் உள்ளிட்டவைகளால் அதிக அளவில் வாடிக்கையாளர்களை இந்த கார் கொண்டுள்ளது. ஆனால் பலேனோ மாடலில் பெட்ரோல் என்ஜினை மட்டும் தான் மாருதி நிறுவனம் வழங்கி வருகிறது.

மாருதி பலேனோ காரை நிச்சயமா இந்த தோற்றத்தில் பார்த்திருக்க மாட்டீங்க...

அதேபோல் மாருதி ஸ்விஃப்ட் மாடலின் ஸ்போர்ட்டியான தோற்றம் பலேனோ காரில் இல்லை. இதனால் பெரும்பான்மையான பலேனோ கார் உரிமையாளர்கள் தங்களது கார்களை கவர்ச்சிக்கரமான தோற்றத்திற்கு கஸ்டமைஸ்ட் செய்து வருகின்றன. இதற்கு ஒரு உதாரணம் தான் இந்த படங்களில் காட்டப்பட்டுள்ள பலேனோ கார்.

மாருதி பலேனோ காரை நிச்சயமா இந்த தோற்றத்தில் பார்த்திருக்க மாட்டீங்க...

இந்த மாடிஃபைட் மாருதி பலேனோ கார் கேரளாவை சேர்ந்தது. கேரளா, கார் மற்றும் பைக் கஸ்டமைஸ்ட் பணிகளுக்கு பிரபலமானது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த கஸ்டமைஸ்ட் பலேனோ கார் அதிகளவில் ஸ்டைலிங் பாகங்களை சில செயல்திறன் மாற்றங்களுடன் ஏற்றுள்ளது.

மாருதி பலேனோ காரை நிச்சயமா இந்த தோற்றத்தில் பார்த்திருக்க மாட்டீங்க...

காரின் முன்புறத்தில் ஸ்டைலான வடிவத்தில் பம்பர் டிஃப்யூசர், புதிய ரேடியட்டர் க்ரில் உடன் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் க்ரில் வழக்கமான கருப்பு நிறத்தில் சுசுகி பேட்ஜ் உடன் காட்சியளிக்கிறது. பக்கவாட்டில் கார் குறிப்பிடத்தக்க வகையில் அப்டேட்களை பெற்றுள்ளது.

மாருதி பலேனோ காரை நிச்சயமா இந்த தோற்றத்தில் பார்த்திருக்க மாட்டீங்க...

இதில் பார்த்தவுடன் கவனிக்கத்தக்க வகையில் தெரிவது, 215/45 அளவு டயர்களுடன் உள்ள இதன் 17 இன்ச் 9ஜே அலாய் ரிம்கள் தான். பெயிண்ட் அமைப்பு கருப்பு & க்ரே என ட்யூல்-டோனில் 09 என்கிற ரேஸ் எண் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ட்யூல்-டோன் அமைப்பினால் இரு பக்கங்களிலும் உள்ள பின்பக்கம் பார்க்கும் கண்ணாடி மற்றும் ஜன்னல் கண்ணாடிகளும் கருப்பு நிற சாயத்தை பெற்றுள்ளன.

மாருதி பலேனோ காரை நிச்சயமா இந்த தோற்றத்தில் பார்த்திருக்க மாட்டீங்க...

பின்புறத்தில் ஸ்மோக்டு டெயில்லேம்ப்கள், மாருதியின் தொழிற்சாலையில் பொருத்தப்பட்ட ரூஃப் ஸ்பாய்லர் உள்ளிட்டவை உள்ளன. இதில் காரின் மேற்கூரை சுசுகி பேட்ஜ் உடன் கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. மாருதி பலேனோ மாடலில் 75 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடிய 1.3 லிட்டர் டிடிஐஎஸ் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு வருகிறது.

மாருதி பலேனோ காரை நிச்சயமா இந்த தோற்றத்தில் பார்த்திருக்க மாட்டீங்க...

இருப்பினும் இந்த என்ஜின் கஸ்டமைஸ்ட் பணிக்களுக்கு பிரபலமான பீட் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தால் டீ-ட்யூன் செய்யப்பட்டுள்ளதால் இந்த கஸ்டமைஸ்ட் பலேனோ மாடலில் அதிகப்பட்சமாக 95 பிஎச்பி மற்றும் 220 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.

இந்த காரின் உட்புறம் கூடுதல் ப்ரீமியம் தோற்றத்திற்காக கிக்கர் சப்வூஃபர் ஸ்பீக்கர்கள், ஹெர்டா எச்சிபி-4 4 சேனல் ஆம்ப், பியோனீர் ஹெட்யூனிட், இன்ஃபினிட்டி நிறுவனத்தின் முன் கதவு ஸ்பீக்கர்கள் மற்றும் ஜேபிஎல் நிறுவனத்தின் பின் கதவு ஸ்பீக்கர்கள் உள்ளிட்டவற்றை அடக்கிய ஆடியோ சிஸ்டத்தை பெற்றுள்ளது.

Image Courtesy: NEW GENERATION/YouTube

Most Read Articles
English summary
Here Is The Hottest Customised Maruti Baleno We’ve Ever Seen – Video
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X