பலேனோ ஆர்எஸ் மாடலின் விற்பனை நிறுத்தம்... அதிரடியான முடிவை எடுத்த மாருதி சுசுகி

மாருதி சுசுகி நிறுவனம் பலேனோ மாடலின் ஆர்எஸ் வேரியண்ட்டின் விற்பனையை முழுவதுமாக நிறுத்தியுள்ளது. இதனால் இந்த பலேனோவின் ஆர்எஸ் வேரியண்ட் கார் மாருதியின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

பலேனோ ஆர்எஸ் விற்பனை நிறுத்தம்... அதிரடியான முடிவை எடுத்த மாருதி சுசுகி

மாருதி சுசுகி நிறுவனம் பலேனோ ஹேட்ச்பேக் மாடலை கடந்த 2015ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியிருந்தது. அடுத்த இரண்டு வருடங்களில் இந்த மாடலுக்கு இந்திய சந்தையில் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்ததால் 2017ல் இந்த மாடலின் அதிக செயல்படுதிறன் கொண்ட வேரியண்ட்டாக ஆர்எஸ் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது.

பலேனோ ஆர்எஸ் விற்பனை நிறுத்தம்... அதிரடியான முடிவை எடுத்த மாருதி சுசுகி

பலேனோ மாடலுக்கு சந்தையில் அதிகளவில் தேவை ஏற்பட்டதால் மாருதி நிறுவனம் இப்படியொரு முடிவை எடுத்திருந்தது. விற்பனை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பலேனோ ஆர்எஸ் மாடல் தற்போதும் சில டீலர்ஷிப்களில் அதிகளவில் விற்பனையாகாமல் நிலுவையில் உள்ளது.

பலேனோ ஆர்எஸ் விற்பனை நிறுத்தம்... அதிரடியான முடிவை எடுத்த மாருதி சுசுகி

காரின் விலையை குறைத்தால் மீதியுள்ள ஆர்எஸ் மாடல்களும் விற்பனையாகிவிடும் என்பது டீலர்ஷிப்களின் கருத்து. அறிமுகத்தின்போது இந்த வேரியண்ட்டின் விலை ரூ.8.69 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டில் இந்த மாடல் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை பெற்றதால் விலை ரூ.8.76 லட்சம் வரையில் அதிகரிக்கப்பட்டது.

பலேனோ ஆர்எஸ் விற்பனை நிறுத்தம்... அதிரடியான முடிவை எடுத்த மாருதி சுசுகி

இதன் பிரிவில் உள்ள மற்ற அனைத்து மாடல்களையும் விட இந்த காரின் விலை அதிகமாக இருந்ததால், மாருதி நிறுவனம் ரூ.7.89 லட்சமாக இதன் விலையை குறைத்தது. இருந்தும் விற்பனை எண்ணிக்கைகளை பெரிய அளவில் பலேனோ ஆர்எஸ் மாடல் பதிவு செய்யாததால் விற்பனை நிறுத்த முடிவை தற்போது இந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

பலேனோ ஆர்எஸ் விற்பனை நிறுத்தம்... அதிரடியான முடிவை எடுத்த மாருதி சுசுகி

வழக்கமான பலேனோ காரில் இருந்து இந்த ஆர்எஸ் வேரியண்ட் முன்புற மற்றும் பின்புற டிசைன் அமைப்பில் தான் சிறிது வித்தியாசப்படும். வித்தியாசமான க்ரில் அமைப்பை பெற்றிருந்த இந்த ஆர்எஸ் வேரியண்ட், பலேனோவின் மற்ற வேரியண்ட்களில் இருந்து மாற்றியமைக்கப்பட்ட ஸ்போர்ட்டியான முன்புற பம்பரை கொண்டிருந்தது.

பலேனோ ஆர்எஸ் விற்பனை நிறுத்தம்... அதிரடியான முடிவை எடுத்த மாருதி சுசுகி

இவை மட்டுமில்லாமல், ப்ரேம்களுக்கு நடுவில் பொருத்தப்பட்ட ஃபாக் லேம்ப் க்ளஸ்ட்டர், காருக்கு அடிப்பகுதியில் பொருத்தப்பட்ட ஸ்பாய்லர் மற்றும் கருப்பு நிறத்தில் உட்புற தீம் உள்ளிட்டவற்றையும் இந்த கார் பெற்றிருந்தது. இந்த மாற்றங்கள் தவிர்த்து இந்த ஆர்எஸ் வேரியண்ட்டின் என்ஜின் திறன் பலேனோ ஹேட்ச்பேக்கின் மற்ற வேரியண்ட் கார்களை விட சிறிது தான் அதிகம்.

பலேனோ ஆர்எஸ் விற்பனை நிறுத்தம்... அதிரடியான முடிவை எடுத்த மாருதி சுசுகி

மூன்று சிலிண்டர் அமைப்புகளை கொண்ட 1.0 லிட்டர் பூஸ்டர் ஜெட் என்ஜின் பலேனோவின் ஆர்எஸ் மாடலில் வழங்கப்பட்டிருந்தது. இந்த என்ஜின் நேரடியாக ஜப்பானில் தயாரிக்கப்பட்டு இந்திய மாடல்களில் பொருத்தப்பட்டு வந்தன. அதிகப்பட்சமாக இந்த என்ஜின் 100 பிஎச்பி பவரையும் 150 என்எம் டார்க் திறனையும் காருக்கு வழங்கவல்லது.

பலேனோ ஆர்எஸ் விற்பனை நிறுத்தம்... அதிரடியான முடிவை எடுத்த மாருதி சுசுகி

ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு வந்தது. இந்த கார் 0-விலிருந்து 100 kmph என்கிற வேகத்தை 11.4 வினாடிகளில் எட்டிவிடும். இந்த ஆர்எஸ் மாடலின் அதிகப்பட்ச வேகம் 199 kmph ஆகும்.

பலேனோ ஆர்எஸ் விற்பனை நிறுத்தம்... அதிரடியான முடிவை எடுத்த மாருதி சுசுகி

செயல்படுத்திறனில் மட்டுமல்லாமல், ஆக்ஸலரேஷன் மற்றும் ஹேண்டிலிங்கில் பலேனோவின் இந்த ஆர்எஸ் மாடல் மிகவும் சிறப்பாக செயல்படக்கூடியது. இதனால் விரைவில் டீலர்ஷிப்களில் மீதம் இருக்கும் ஆர்எஸ் மாடல்களுக்கு சலுகைகளை மாருதி நிறுவனம் வழங்கும் என தெரிகிறது.

Most Read Articles
English summary
Maruti Suzuki Baleno RS Discontinued: Company Unlists Vehicle On Website
Story first published: Friday, January 24, 2020, 19:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X