டீலர்ஷிப்பை சென்றடைந்த 2020 மாருதி டிசைர் ஃபேஸ்லிஃப்ட்... டெலிவிரி எப்போது...?

அப்டேட்டான முன்புறம் மற்றும் கூடுதல் தொழிற்நுட்பங்களுடன் விரைவில் சந்தையில் அறிமுகமாகவுள்ள 2020 மாருதி டிசைர் ஃபேஸ்லிஃப்ட் டீலர்ஷிப் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போது அடையாளம் காணப்பட்டுள்ளது. புதிய ட்யூல் ஜெட் பெட்ரோல் என்ஜின் உடன் விற்பனைக்கு வரும் இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் காரை பற்றி இந்த செய்தியில் காண்போம்.

டீலர்ஷிப்பை சென்றடைந்த 2020 மாருதி டிசைர் ஃபேஸ்லிஃப்ட்... டெலிவிரி எப்போது...?

மாருதி சுசுகி நிறுவனம் முதன்முதலாக கடந்த மார்ச் மாதத்தில் டிசைர் மாடலின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை உலக சந்தையில் அறிமுகப்படுத்தி இருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த கார் குறிப்பிடத்தகுந்த அப்கிரேட்களுடன் இந்திய டீலர்ஷிப்பில் காட்சியளித்துள்ளது. இதுகுறித்த படங்களினை காடிவாடி தளம் செய்தியாக பதிவிட்டுள்ளது.

டீலர்ஷிப்பை சென்றடைந்த 2020 மாருதி டிசைர் ஃபேஸ்லிஃப்ட்... டெலிவிரி எப்போது...?

இந்தியாவில் பிரபலமான செடான் மாடலாக விளங்குகின்ற மாருதி டிசைர் மாடலுக்கு ஹோண்டா அமேஸ், ஹூண்டாய் அவ்ரா, டாடா டிகோர், ஃபோர்டு அஸ்பியர் மற்றும் ஃபோக்ஸ்வேகன் அமியோ போன்ற மாடல்கள் போட்டியாகவுள்ளன.

டீலர்ஷிப்பை சென்றடைந்த 2020 மாருதி டிசைர் ஃபேஸ்லிஃப்ட்... டெலிவிரி எப்போது...?

கடந்த 2008ல் இருந்து விற்பனையில் உள்ள இந்த செடான் மாடலின் கடைசி தலைமுறை கார் கடந்த 2017ல் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய டாடா டிகோர் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் புதிய அவ்ரா மாடல்களின் அறிமுகங்களால் இந்த 5-இருக்கை செடான் காரும் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனுக்கு அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

MOST READ: 116 ஆண்டு காலத்தை கடந்த ரோல்ஸ் ராய்ஸ்... நிறுவனம் உருவானது எப்படி...?

டீலர்ஷிப்பை சென்றடைந்த 2020 மாருதி டிசைர் ஃபேஸ்லிஃப்ட்... டெலிவிரி எப்போது...?

டிசைரின் இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.5.89 லட்சத்தில் இருந்து (எல்எக்ஸ்ஐ ட்ரிம்) ரூ,8.80 லட்சம் வரையில் (டாப் இசட்எக்ஸ்ஐ+ ஏஜிஎஸ் ட்ரிம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக அப்டேட்களை இந்த கார் பெற்றுள்ள போதிலும் இதன் பெட்ரோல் வேரியண்ட்டின் விற்பனை புதிய மாசு உமிழ்வு விதியின் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.

2020 Maruti Dzire Prices (ex-showroom, Delhi)
LXi Rs 5.89 Lakh
VXi Rs 6.79 Lakh
VXi AGS Rs 7.31 Lakh
ZXi Rs 8.00 Lakh
ZXi AGS Rs 8.80 Lakh
ZXi+ Rs 8.28 Lakh
ZXi+ AGS Rs 8.80 Lakh
டீலர்ஷிப்பை சென்றடைந்த 2020 மாருதி டிசைர் ஃபேஸ்லிஃப்ட்... டெலிவிரி எப்போது...?

2020 மாருதி சுசுகி டிசைர் மாடல் எல்எக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ ஏஜிஎஸ், இசட்எக்ஸ்ஐ, இசட்எக்ஸ்ஐ+, இசட்எக்ஸ்ஐ ஏஜிஎஸ், இசட்எக்ஸ்ஐ+ ஏஜிஎஸ் உள்ளிட்ட ட்ரிம் தேர்வுகளுடன் ப்ரீமியம் சில்வர் மற்றும் பியோனிக்ஸ் ரெட் என்ற இரு நிறத்தேர்வுகளிலும் விற்பனை செய்யப்பட உள்ளது.

டீலர்ஷிப்பை சென்றடைந்த 2020 மாருதி டிசைர் ஃபேஸ்லிஃப்ட்... டெலிவிரி எப்போது...?

இந்த 2020 மாடலில் வெளிப்புறத்தை பொறுத்தவரையில், பெரிய க்ரில் அமைப்புடன் ரீடிசைனில் முன்புற பகுதி, அப்டேட்டான ஹெட்லேம்ப்கள் மற்றும் புதிய ஃபாக் விளக்கு ஹௌவுசிங் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது. இவை தவிர்த்து இதன் வெளிப்புறத்தில் வேறெந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது.

MOST READ: சீட் நுனியில் அமர்ந்து பென்ஸ் கார் ஓட்டி வந்த 5 வயசு பொடியன்! சொன்ன காரணத்தை கேட்டு ஆடிப்போன போலீஸ்

டீலர்ஷிப்பை சென்றடைந்த 2020 மாருதி டிசைர் ஃபேஸ்லிஃப்ட்... டெலிவிரி எப்போது...?

உட்புற கேபின் வுட்டன் ஃபினிஷிங்கில், க்ரூஸ் கண்ட்ரோல், ஃப்ளஷ் டைப் பார்க்கிங் சென்சார்ஸ் மற்றும் 3டி தோற்றத்தில் இருக்கைகளை கொண்டுள்ளது. இவை மட்டுமின்றி ஹில் ஹோல்ட் உடன் எலக்ட்ரானிக் ஸ்டேபிளிட்டி ப்ரோகிராம், பல தகவல்களை வழங்கக்கூடிய டிஎஃப்டி திரை, ஆட்டோ-ஃபோல்டிங் ஓஆர்விஎம்கள், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணக்கக்கூடிய ஸ்மார்ட்ப்ளே தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற தொழிற்நுட்ப வசதிகளையும் எதிர்பார்க்கலாம்.

டீலர்ஷிப்பை சென்றடைந்த 2020 மாருதி டிசைர் ஃபேஸ்லிஃப்ட்... டெலிவிரி எப்போது...?

இதில் இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தின் மூலமாக ஓட்டுனரின் வாய்ஸை அறிதல் மற்றும் டிராஃபிக் அப்டேட்கள் போன்ற க்ளவுட் சார்ந்த செயல்பாடுகளை பெற முடியும். டிசைரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.2 லிட்டர் ட்யூல் ஜெட் கே-சீரிஸ் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

MOST READ: "விரைவில் பொது போக்குவரத்து தொடங்கும்" - ஏழைகளின் வயிற்றில் பால்வார்த்த அமைச்சர் நிதின் கட்காரி...

டீலர்ஷிப்பை சென்றடைந்த 2020 மாருதி டிசைர் ஃபேஸ்லிஃப்ட்... டெலிவிரி எப்போது...?

இந்த என்ஜின் 90 பிஎச்பி பவர் மற்றும் 113 என்எம் டார்க் திறனை காருக்கு அதிகப்பட்சமாக வழங்கும். இந்த என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் தொழிற்நுட்பம், பிஸ்டன் கூலிங் ஜெட் மற்றும் உராய்வை குறைக்க கூல்டு இஜிஆர் போன்றவற்றால் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் இணைக்கப்படவுள்ளன.

Most Read Articles

English summary
2020 Maruti Dzire Facelift Spotted At Dealer Yard, First Pics Price Table Code
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X