இந்தியாவில் எம்பிவி ரக கார் விற்பனையில் முதலிடத்தில் மாருதி எர்டிகா... மஹிந்திரா பொலிரோவை முந்தியது.

கடந்த 2019-20 பொருளாதார ஆண்டில் இந்திய சந்தையில் சிறப்பாக விற்பனையான எம்பிவி கார் என்ற பெயரை மாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா மாடல் பெற்றுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.

இந்தியாவில் எம்பிவி ரக கார் விற்பனையில் முதலிடத்தில் மாருதி எர்டிகா... மஹிந்திரா பொலிரோவை முந்தியது...!

மாருதி எர்டிகா எம்பிவி மாடல் கடந்த பொருளாதார ஆண்டில் 90,000 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டை விட சுமார் 39 சதவீதம் அதிகமாகும். மாருதி எர்டிகா கார் இந்த பட்டத்தை இதற்குமுன் இந்த இடத்தில் இருந்த மஹிந்திரா பொலிரோ எம்யூவி மாடலிடம் இருந்து பெற்றுள்ளது.

இந்தியாவில் எம்பிவி ரக கார் விற்பனையில் முதலிடத்தில் மாருதி எர்டிகா... மஹிந்திரா பொலிரோவை முந்தியது...!

தற்போது இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள மஹிந்திரா பொலிரோ 2019-20 பொருளாதார ஆண்டில் 59,045 யூனிட்கள் விற்பனையை சந்தையில் பதிவு செய்துள்ளது. இந்த எண்ணிக்கை 84,144 யூனிட்கள் விற்பனையுடன் இந்த எம்யூபி கார் இந்த வரிசையில் முதலிடத்தை பிடித்த 2018-19 பொருளாதார ஆண்டை விட 30 சதவீதம் குறைவாகும்.

இந்தியாவில் எம்பிவி ரக கார் விற்பனையில் முதலிடத்தில் மாருதி எர்டிகா... மஹிந்திரா பொலிரோவை முந்தியது...!

இவை இரண்டிற்கு அடுத்து கடந்த பொருளாதார ஆண்டில் சிறப்பாக விற்பனையான மூன்றாவது மாடலாக டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா கிரிஸ்ட்டா விளங்குகிறது. மிகவும் பிரபலமான எம்பிவி மாடலாக இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த கார் இந்த காலக்கட்டத்தில் 53,686 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது.

இந்தியாவில் எம்பிவி ரக கார் விற்பனையில் முதலிடத்தில் மாருதி எர்டிகா... மஹிந்திரா பொலிரோவை முந்தியது...!

இந்த எண்ணிக்கை இதற்கு முந்தைய பொருளாதார ஆண்டை காட்டிலும் 31 சதவீதம் குறைவாகும். 2018-19 காலக்கட்டத்தில் 77,924 யூனிட்கள் இந்த கார் விற்பனையாகி இருந்தது. இந்த வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ள எர்டிகா எம்பிவி மாடலை பற்றி கூறவேண்டுமென்றால், மாருதி சுசுகி நிறுவனம் இதன் தற்போதைய தலைமுறை காரை கடந்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

இந்தியாவில் எம்பிவி ரக கார் விற்பனையில் முதலிடத்தில் மாருதி எர்டிகா... மஹிந்திரா பொலிரோவை முந்தியது...!

இந்த புதிய தலைமுறை எர்டிகா மாடலில் வழங்கப்பட்ட புதிய புத்துணர்ச்சியான டிசைன் உடன் கூர்மையான லைன்கள் மற்றும் க்ரீஸ்களினால் அதன் முந்தைய தலைமுறை காரை விட மிகவும் ப்ரீமியம் வாகனமாக பார்க்கப்பட்டது. இதனால் அறிமுகமான சில மாதங்களிலேயே எம்பிவி பிரிவில் இந்த காருக்கு வரவேற்பு அளவுக்கு அதிகமாக கிடைத்தது.

MOST READ:உலகில் எங்குமே இந்நிலை இல்லை.. ஆச்சரியத்தையும், சந்தேகத்தையும் ஒரு சேர வரவழைத்த சீனா...

இந்தியாவில் எம்பிவி ரக கார் விற்பனையில் முதலிடத்தில் மாருதி எர்டிகா... மஹிந்திரா பொலிரோவை முந்தியது...!

மாருதி சுசுகி நிறுவனம் எர்டிகா எம்பிவி காரில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என்ஜின் தேர்வுகளை வழங்கி வருகிறது. இதில் ஸ்மார்ட் ஹைப்ரீட் தொழிற்நுட்பத்துடன் உள்ள 1.5 லிட்டர் கே15பி சீரிஸ் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 103 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் நிலையான 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வெளிப்படுத்தி வருகிறது.

MOST READ:நடிகர் விக்ரம்க்காக உருவாகிய மினி சொர்க்கம்.. அடேங்கப்பா இந்த வாகனத்துல இவ்ளோ வசதியா! நம்பவே முடியல!

இந்தியாவில் எம்பிவி ரக கார் விற்பனையில் முதலிடத்தில் மாருதி எர்டிகா... மஹிந்திரா பொலிரோவை முந்தியது...!

இதேபோல் மாருதி எர்டிகா மாடலில் அதிக எண்ணிக்கையில் வேரியண்ட்களும் ட்ரீம் லெவல்களும் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றில் அனைத்திலும் தரமான வசதிகளையும், தொழிற்நுட்பங்களையும் வழங்கியுள்ள மாருதி நிறுவனம், தற்போதைய எர்டிகா மாடலின் உட்புறத்தில் அப்டேட்டான லேட்டஸ்ட் ஸ்மார்ட்ப்ளே ஸ்டூடியோ இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தை பொருத்தியுள்ளது.

MOST READ:போர்ஷே நிறுவனத்திற்கு பெருமை தேடி தந்த டைகான்... எவ்வாறு தெரியுமா...?

இந்தியாவில் எம்பிவி ரக கார் விற்பனையில் முதலிடத்தில் மாருதி எர்டிகா... மஹிந்திரா பொலிரோவை முந்தியது...!

மேலும் இந்நிறுவனம் எர்டிகா மாடலின் 6-இருக்கை வெர்சனையும் எக்ஸ்எல்6 என்ற பெயரில் நெக்ஸா டீலர்ஷிப்கள் மூலமாக விற்பனை செய்துவருகிறது. எர்டிகாவை போல் சந்தையில் சிறப்பான விற்பனை எண்ணிக்கைகளை பதிவு செய்துவரும் இந்த ப்ரீமியம் எம்பிவி மாடல் கடந்த பொருளாதார ஆண்டில் 22,000 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #விற்பனை #sales
English summary
Maruti Ertiga Becomes India’s Best-Selling MPV In FY 2019-20: Registers Over 90,000 Units of Sales
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X