தரமான வசதி! இந்தியாவிலேயே இந்த வசதியை பெறும் முதல் எர்டிகா இதுதான்! வேறு எர்டிகாவில் இது இருக்காது!

யாரும் எதிர்பார்த்திரா ஓர் வசதி மாருதி சுசுகி எர்டிகா காரில் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

தரமான வசதி! இந்தியாவிலேயே இந்த வசதியை பெறும் முதல் எர்டிகா இதுதான்! வேறெந்த எர்டிகாவிலும் இத பாக்க முடியாது!

மாருதி சுசுகி நிறுவனத்தின் மிகவும் பிரபலமான கார்களில் எர்டிகா காரும் ஒன்று. இந்த கார் ஓர் எம்பிவி ரக வாகனமாகும். இக்காரில் பல்வேறு சிறப்பு வசதிகளை சுசுகி நிறுவனம் வழங்குகின்றது. ஆனால், தானியங்கி கதவுகள் வசதி வழங்கப்படவில்லை. அதாவது, மின்சாரத்தால் கதவுகளைக் கட்டுப்படுத்தும் வசதி கொடுக்கப்படவில்லை.

தரமான வசதி! இந்தியாவிலேயே இந்த வசதியை பெறும் முதல் எர்டிகா இதுதான்! வேறெந்த எர்டிகாவிலும் இத பாக்க முடியாது!

இந்நிலையில், மாருதி சுசுகி எர்டிகா காரில் எலெக்ட்ரிக் கன்ட்ரோல் வசதிக் கொண்ட கதவுகள் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பலருக்கு வியப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், மேலே கூறியதைப் போல் மாருதி சுசுகி நிறுவனம் தானியங்கி வசதியுடைய கதவுகளை எர்டிகா காரில் இதுவரை அறிமுகப்படுத்தவில்லை.

தரமான வசதி! இந்தியாவிலேயே இந்த வசதியை பெறும் முதல் எர்டிகா இதுதான்! வேறெந்த எர்டிகாவிலும் இத பாக்க முடியாது!

எனவேதான் பலர் தற்போது வெளியாகியிருக்கும் நம்புவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். ஆனால், இது மாடிஃபிகேஷன் செயலின் மூலம் சாத்தியம் ஆகும். ஆம், எர்டிகா காருக்கு எலெக்ட்ரிக் கன்ட்ரோல் வசதியானது மாடிஃபிகேஷன் செயலின் வாயிலாகவே வழங்கப்பட்டிருக்கின்றது.

தரமான வசதி! இந்தியாவிலேயே இந்த வசதியை பெறும் முதல் எர்டிகா இதுதான்! வேறெந்த எர்டிகாவிலும் இத பாக்க முடியாது!

இதை, சம்பவம்குறித்து வெளியாகியிருக்கும் வீடியோவும் உறுதி செய்கின்றது. இதனை விஐஜி ஆட்டோ எனும் யுட்யூப் சேனல் வெளியிட்டுள்ளது. எர்டிகா காரின் தோற்றம் மாடிஃபிகேஷனுக்கு ஏற்றது அல்ல என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், இந்த நிலை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

தரமான வசதி! இந்தியாவிலேயே இந்த வசதியை பெறும் முதல் எர்டிகா இதுதான்! வேறெந்த எர்டிகாவிலும் இத பாக்க முடியாது!

மேலும், மாடிஃபிகேஷன் வாயிலாக எலெக்ட்ரானிக் கன்ட்ரோல் வசதிக் கொண்ட கதவுகள் மட்டுமின்றி மேலும் பல வசதிகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. இதன்படி, வழக்கமான புரஜெக்டர் லேம்ப்களுக்கு பதிலாக எச்ஐடி புரஜெக்டர் லேம்ப் பொருத்தப்பட்டுள்ளது. இது எர்டிகா காருக்கு கூடுதல் பிரீமியம் தோற்றத்தை வழங்குகின்றது.

தரமான வசதி! இந்தியாவிலேயே இந்த வசதியை பெறும் முதல் எர்டிகா இதுதான்! வேறெந்த எர்டிகாவிலும் இத பாக்க முடியாது!

இத்துடன், டிஆர்எல் மின் விளக்கு மற்றும் பனி விளக்கு உள்ளிட்டவை எல்இடி தரத்திற்கு உயர்த்தப்பட்டிருக்கின்றன. இதைத்தொடர்ந்து, மாருதி எர்டிகா காரை கட்டுமஸ்தான காராக தோற்றுவிக்கும் வகையில் ரூ. 12 ஆயிரம் செலவில் கார்பன் ஃபைபர் பேனல்கள் வாகனத்தின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் ஒட்டப்பட்டிருக்கின்றன.

தரமான வசதி! இந்தியாவிலேயே இந்த வசதியை பெறும் முதல் எர்டிகா இதுதான்! வேறெந்த எர்டிகாவிலும் இத பாக்க முடியாது!

இதேபோன்று காரின் உட்பகுதியிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், ஆம்பிசியன்ட் மின் விளக்கு வசதி விற்பனையில் இருக்கும் மாருதி எர்டிகா காரில் வழங்கப்படுவதில்லை. ஆனால், இந்த வசதியை கஸ்டமைசேஷன் வாயிலாக எர்டிகாவின் உரிமையாளர் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளார்.

தரமான வசதி! இந்தியாவிலேயே இந்த வசதியை பெறும் முதல் எர்டிகா இதுதான்! வேறெந்த எர்டிகாவிலும் இத பாக்க முடியாது!

இதுதவிர, கூடுதல் லக்சூரி உணர்வை வழங்குவதற்காக அதிக சொகுசு வசதி நிறைந்த இருக்கைகள் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதைத்தொடர்ந்து, தொழில்நுட்ப வசதியை அப்கிரேட் செய்யும் விதமாக இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மாற்றப்பட்டுள்ளது.

தரமான வசதி! இந்தியாவிலேயே இந்த வசதியை பெறும் முதல் எர்டிகா இதுதான்! வேறெந்த எர்டிகாவிலும் இத பாக்க முடியாது!

இதையடுத்து, வீல் கவர், கார்பன் ஃபைபரால் உருவாக்கப்பட்ட ஸ்டியரிங் வீல், மேட்ரிக்ஸ் பிள்ளர் லேம்ப், மேட்ரிக்ஸ் டர்ன் மின் விளக்கு உள்ளிட்டவையும் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதுபோன்று வாகனத்தின் வெளிப்புற தோற்றத்தை மாற்றுவது இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி விதிமீறல் செயல் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தரமான வசதி! இந்தியாவிலேயே இந்த வசதியை பெறும் முதல் எர்டிகா இதுதான்! வேறெந்த எர்டிகாவிலும் இத பாக்க முடியாது!

இதுபோன்ற மாற்றம் செய்யப்பட்ட கார்கள் பலவற்றிற்கு போலீஸார் கடந்த காலங்களில் உச்சபட்ச அபராதத்தை வழங்கியிருக்கின்றனர். இந்த நிலையிலேயே மாருதி எர்டிகா மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த செயல் விதிமீறலாக இருந்தாலும், அந்த மாற்றங்களை நம்மால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை.

தரமான வசதி! இந்தியாவிலேயே இந்த வசதியை பெறும் முதல் எர்டிகா இதுதான்! வேறெந்த எர்டிகாவிலும் இத பாக்க முடியாது!

இந்த ஒட்டுமொத்த மாற்றத்திற்கு அதன் உரிமையாளர் ரூ. 1.65 லட்சம் வரை செலவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், வாகன மாடிஃபிகேஷன் நிறுவனத்திற்கான கட்டணமும் அடங்கும். ஆனால், எவ்வளவு லேபர் கூலி வசூலிக்கப்பட்டது என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

Most Read Articles
English summary
Maruti Ertiga With Electric Tailgate. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X