Just In
- 1 hr ago
இந்தியாவின் மலிவான க்ரூஸர் மோட்டார்சைக்கிள், பஜாஜ் அவென்ஜெர்ஸின் விலை அதிகரிப்பு!!
- 8 hrs ago
எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?
- 9 hrs ago
2021 சஃபாரியின் வருகையில் எந்த தாமதமும் இல்லை!! மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் டாடா மோட்டார்ஸ்
- 10 hrs ago
2021 ஸ்கோடா சூப்பர்ப் செடான் கார் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.31.99 லட்சம்
Don't Miss!
- News
கோவின் செயலியில் பதிவு செய்வது எப்படி?.. என்னென்ன ஆவணங்கள் தேவை?.. முழு விவரம் இதோ!
- Movies
சத்தியமங்கலத்தில் ஷுட்டிங்.. வெற்றிமாறன் இயக்கும் படம்.. சூரி ஜோடியாக இவர்தான் நடிக்கிறாராமே?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வேகன்ஆர்-ஐ பாதுகாப்பில் மட்டம் தட்டிய டாடா மோட்டார்ஸ்- ஒரே வார்த்தையில் ஆஃப் செய்த மாருதி சுஸுகி
வேகன்ஆரை பற்றிய டாடா நிறுவனத்தின் கிண்டலுக்கு மாருதி சுஸுகி நிறுவனம் தனது பதிலை சூசமாக தெரிவித்துள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

டிவிட்டரில் டாடா மோட்டார்ஸ் மாருதி சுஸுகி நிறுவனங்களுக்கு இடையே கருத்து மோதல் தீவிரமாக ஏற்பட்டு வருகிறது. இது இன்னும் முடிந்த பாடில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்பு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மாருதியின் வேகன்ஆர் ஹேட்ச்பேக் காரை தனது டியாகோ ஹேட்ச்பேக் காருடன் ஒப்பிடும் பாதுகாப்பு விஷயத்தில் கிண்டல் செய்திருந்தது. ஏனெனில் உலகளாவிய என்சிஏபி சோதனையில் டியாகோவின் மதிப்பெண் 4 என இருக்க, வேகன்ஆர் வெறும் 2 நட்சத்திரங்களை மட்டுமே மதிப்பீடுகளாக பெற்றுள்ளது.

இதனை கலாய்க்கும் விதத்தில் காலி மரவண்டி ஒன்று முன்சக்கரம் உடைப்பட்ட நிலையில் இருக்கும் படத்தை டாடா மோட்டார்ஸ் அதன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. அந்த பதிவில் வேகன்ஆரின் பெயர் நேரடியாக குறிப்பிடப்படவில்லை. மாறாக சில குறியீடுகள் மூலம் மறைமுகமாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதற்கு தற்போது மாருதி சுஸுகி நிறுவனம் சரியான பதிவுடன் பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்த மாருதியின் டிவிட்டர் பதிவில், "இதுதான் நாங்கள் யார் என்பதை எங்களுக்கு உணர்த்துகிறது: முழு வேகன்ஆர் குடும்பத்துடனும் உண்மையிலேயே இதயத்திலிருந்து வலுவான தொடர்பு கொண்டுள்ளோம்!" என்ற வாக்கியங்கள் வேகன்ஆர் காரின் படத்துடன் உள்ளன.

மேலும் இந்த படத்தில் "24 லட்ச குடும்பங்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்" என்ற மாருதியின் கருத்தும் பதிவிடப்பட்டுள்ளது. வேகன்ஆர் இந்திய சந்தையில் மிக அதிகளவில் விற்பனையாகும் காராக விளங்குகிறது. இன்னும் சொல்லப்போனால் இந்த மாருதி மாதந்தோறும் அதிகளவில் விற்பனையாகும் கார்களில் வரிசையில் பெரும்பான்மையான நேரம் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கும்.

அதேநேரம் டாடா கார்கள் முதல் 10 இடங்களுக்குள் வருவதே எப்போதவது ஒருமுறைதான் நிகழும். வேகன்ஆருக்கு முன்னதாக மாருதி எஸ்-பிரெஸ்ஸோ, ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் மற்றும் கியா செல்டோஸ் கார்களையும் பயணிகள் பாதுகாப்பு விஷயத்தில் டாடா நிறுவனம் மட்டம் தட்டி இருந்தது.

எஸ் பிரேஸ்ஸோவை டாடா கிண்டல் செய்திருந்தபோதும் உடனடியாக பதில் அளித்திருந்த மாருதி சுஸுகி, இந்தியாவின் விருப்பமான ஆட்டோமொபைல் பிராண்ட் என்ற வரிகளை பதிவிட்டிருந்தது. இதற்கு கீழே "This claim is undisputed" என பதிவிடப்பட்டிருந்தது. இதற்கு அர்த்தம், இந்த கூற்று மறுக்க முடியாதது என்பது ஆகும்.

மாருதியின் இந்த பதிவு இந்தியாவில் வாடிக்கையாளர்களுக்கு பிடித்தமான ஆட்டோமொபைல் பிராண்ட் தாங்கள் தான் என்பதை டாடாவிற்கு தெரிவிக்கும்படி இருந்தது. டாடா நிறுவனம் தொடர்ந்து அதன் தயாரிப்புகளின் உலகளாவிய என்சிஏபி பாதுகாப்பு மதிப்பீடுகளை மற்ற பிராண்ட்களின் தயாரிப்புகளுடன் ஒப்பிட்டு பதிவுகளை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.