மாருதி எஸ் க்ராஸ் சிக்மா ப்ளஸ் வேரியண்ட் விபரம் வெளியானது

மாருதி எஸ் க்ராஸ் எஸ்யூவியின் பேஸ் வேரியண்ட்டில் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட புதிய வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த புதிய வேரியண்ட் விபரங்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த வேரியண்ட்டில் உள்ள சிறப்பம்சங்கள் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

மாருதி எஸ் க்ராஸ் சிக்மா ப்ளஸ் வேரியண்ட் விபரம் வெளியானது

மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் மாருதி பிரியர்களுக்கான சிறந்த தேர்வாக எஸ் க்ராஸ் எஸ்யூவி இருந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் மாருதி எஸ் க்ராஸ் எஸ்யூவியின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. டீசல் எஞ்சின் நீக்கப்பட்டு புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வில் வந்தது. மேலும், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும் வழங்கப்படுகிறது.

மாருதி எஸ் க்ராஸ் சிக்மா ப்ளஸ் வேரியண்ட் விபரம் வெளியானது

மாருதி எஸ் க்ராஸ் எஸ்யூவியின் பிஎஸ்6 மாடலானது சிக்மா என்ற பேஸ் வேரியண்ட்டிலும், டெல்ட்டா, ஸீட்டா ஆகிய நடுத்தர விலை வேரியண்ட்டுகளிலும், ஆல்ஃபா என்ற அதிகபட்ச வசதிகள் கொண்ட விலை உயர்ந்த வேரியண்ட்டிலும் கிடைத்து வருகிறது. இதில், சிக்மா வேரியண்ட்டிற்கு ரூ.8.39 லட்சமும், விலை உயர்ந்த ஆல்ஃபா வேரியண்ட்டிற்கு ரூ.12.39 லட்சம் வரையிலான விலையிலும் கிடைக்கிறது.

மாருதி எஸ் க்ராஸ் சிக்மா ப்ளஸ் வேரியண்ட் விபரம் வெளியானது

இந்த நிலையில், பண்டிகை காலத்தையொட்டி, மாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்6 மாடலில் சிக்மா ப்ளஸ் என்ற புதிய வேரியண்ட் வர இருக்கிறது. சிக்மா பேஸ் வேரியண்ட்டில் கூடுதல் சிறப்பம்சங்களை சேர்த்து இந்த புதிய சிக்மா ப்ளஸ் களமிறக்கப்படுகிறது. இந்த வேரியண்ட்டிற்கு ரூ.8.56 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாருதி எஸ் க்ராஸ் சிக்மா ப்ளஸ் வேரியண்ட் விபரம் வெளியானது

இந்த வேரியண்ட்டில் கூடுதலாக 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய சோனி இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி உள்ளது. 4 ஸ்பீக்கர்கள் கொண்ட மியூசிக் சிஸ்டம், டிசைனர் மேட், பனி விளக்குகள், ஸ்டீயரிங் வீலுக்கான கவர் ஆகியவை உள்ளன.

மாருதி எஸ் க்ராஸ் சிக்மா ப்ளஸ் வேரியண்ட் விபரம் வெளியானது

இந்த வேரியண்ட்டில் நைட்விஷன் மற்றும் ஃபிக்ஸ்டு கெயிட்லைன் வசதிகளை வழங்கும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகிய பல பாதுகாப்பு வசதிகளும் உள்ளன.

மாருதி எஸ் க்ராஸ் சிக்மா ப்ளஸ் வேரியண்ட் விபரம் வெளியானது

மாருதி எஸ் க்ராஸ் எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கிடைக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 103 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த வேரியண்ட்டில் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு மட்டுமே வழங்கப்படும் வாய்ப்புள்ளது. இந்த மாடல் லிட்டருக்கு18.55 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

மாருதி எஸ் க்ராஸ் சிக்மா ப்ளஸ் வேரியண்ட் விபரம் வெளியானது

இவை தவிர்த்து சிக்மா வேரியண்ட்டில் வழங்கப்படும் ஹாலஜன் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், 16 அங்குல ஸ்டீல் சக்கரங்கள், ஃபேப்ரிக் சீட் அப்ஹோல்ஸ்ட்ரி, சென்ட்ரல் லாக்கிங் ரிமோட், டிஎஃப்டி மல்டி இன்ஃபர்மேஷன் திரை, பவர் விண்டோஸ், மேனுவல் ஏசி, ஸ்பிளிட் இருக்கைகள் ஆகியவையும் வழங்கப்படும்.

Most Read Articles
English summary
Maruti has introduced S Cross sigma plus variant in India ahead of festive season.
Story first published: Friday, October 9, 2020, 14:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X