3 வீலராக மாறிய மாருதி சுஸுகி 800... இதுதான் உலகின் மிக குறுகிய மாருதி 800... இதோ வீடியோ!

இந்தியர்களின் மனம் கவர்ந்த கார்களில் ஒன்றான மாருதி 800 மாடலை இளைஞர் ஒருவர் த்ரீ வீலர் வாகனமாக மாடிஃபை செய்துள்ளார். இதுகுறித்த கூடுதல் சுவாரஷ்ய தகவலை இந்த பதிவில் காணலாம்.

3 வீலராக மாறிய மாருதி சுஸுகி 800... இதுதான் உலகின் மிக குறுகிய மாருதி 800... இதோ வீடியோ!

இந்தியர்களின் மனம் கவர்ந்த கார்களில் ஒன்றாக மாருதி சுசுகி 800 இருக்கின்றது. இது பல தசாப்தங்களாக இந்தியாவில் விற்பனையில் இருந்த கார் ஆகும். ஆனால், குறிப்பிட்ட காரணங்களுக்காக மாருதி சுசுகி நிறுவனம் அதனை விற்பனையில் இருந்து விளக்கிக் கொண்டது.

3 வீலராக மாறிய மாருதி சுஸுகி 800... இதுதான் உலகின் மிக குறுகிய மாருதி 800... இதோ வீடியோ!

இருப்பினும், நாடு முழுவதும் ஒரு சிலர் இக்காரை தற்போது வரை பயன்படுத்திய வண்ணம் இருக்கின்றனர்.

அதிலும், குறிப்பாக தென் மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் மாருதி சுசுகியின் பழைய தலைமுறை காரை இன்றும் பலர் பயன்படுத்தி வருகின்றனர்.

MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

3 வீலராக மாறிய மாருதி சுஸுகி 800... இதுதான் உலகின் மிக குறுகிய மாருதி 800... இதோ வீடியோ!

அந்தவகையிலான ஓர் காரைதான் இளைஞர்கள் சிலர் தற்போது 3 வீலர் வாகனமாக மாற்றியிருக்கின்றனர். இளைஞர்களின் இந்த முயற்சியால் நாட்டின் முதல் நீளம் குறைந்த மற்றும் வித்தியாசமான காராக அது மாறியிருக்கின்றது.

இந்த மாடிஃபிகேஷனை அந்த இளைஞர்கள் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கிற்காக செய்திருப்பதாக கூறப்படுகின்றது.

3 வீலராக மாறிய மாருதி சுஸுகி 800... இதுதான் உலகின் மிக குறுகிய மாருதி 800... இதோ வீடியோ!

ஆனால், இந்த விளையாட்டால் அந்த கார் எக்ட்ரீம் லெவலில் உரு மாறியிருக்கின்றது. இந்த உருமாற்றம் குறித்த வீடியோவை மேக்னடோ 11 என்ற யுடியூப் தளம் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளது. அதில், வாகனத்தை உருமாற்றம் செய்ய தொடங்கியது முதல் இறுதி வரையிலான அனைத்து காட்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன.

3 வீலராக மாறிய மாருதி சுஸுகி 800... இதுதான் உலகின் மிக குறுகிய மாருதி 800... இதோ வீடியோ!

எனவே, அந்த வீடியோவில் உருமாற்றத்திற்கான ஒவ்வொரு அசைவும் எப்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. சரி வாருங்கள் மெயின் ஸ்டோரிக்குள் செல்லலாம்.

இளைஞர்கள் மாருதி 800 காருக்கு மாறுபட்ட தோற்றத்தை வழங்க வேண்டும் என்பதற்காக, அரை பாதியாக துண்டாக்கியுள்ளனர்.

3 வீலராக மாறிய மாருதி சுஸுகி 800... இதுதான் உலகின் மிக குறுகிய மாருதி 800... இதோ வீடியோ!

அதாவது, பின்னிருக்கை இல்லாமல் முன்னிருக்கை மட்டுமே இருக்கின்ற வகையில் அது நறுக்கப்பட்டிருக்கின்றது.

இதைத்தொடர்ந்து, மூன்று சக்கர ஆட்டோ தோற்றத்தை அக்காருக்கு வழங்கும் வகையில் மூன்றாவது வீல், காரின் பின்பக்க மையப் பகுதியில் இணைக்கப்பட்டது. இதற்காக இருசக்கர வாகனத்தின் வீல் மற்றும் டயர் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

3 வீலராக மாறிய மாருதி சுஸுகி 800... இதுதான் உலகின் மிக குறுகிய மாருதி 800... இதோ வீடியோ!

இதுமாதிரியான தோற்றத்தை இதற்கு முன்பாக எந்தவொரு மாருதி 800 காரும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

அதேசமயம், மாருதி 800 முன் வீல் இயக்கம் கொண்ட கார் என்பதால் பின் பக்க வீல் பொருத்தப்பட்டதோடு வேலை 90 சதவீதம் முடிவடைந்துவிட்டது. மேலும், காரை பாதியாக வெட்டியதனால் அதன் இயக்கம் எந்தவொரு பாதிப்பையும் பெறவில்லை.

3 வீலராக மாறிய மாருதி சுஸுகி 800... இதுதான் உலகின் மிக குறுகிய மாருதி 800... இதோ வீடியோ!

ஆனால், இத்தகைய மாடிஃபிகேஷன்களை இந்திய மோட்டார் வாகன சட்டம் அனுமதிப்பதில்லை. இருப்பினும், இதுமாதிரியான விநோத மாடிஃபிகேஷன்களை நம்மால் வெறுக்க முடிவதில்லை.

நான்கு சக்கர வாகனமாக இருந்து மூன்று சக்கர வாகனமாக மாறியிருக்கும் இந்த மாருதி 800 காரை, மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரவிருப்பதாகவும் அந்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

3 வீலராக மாறிய மாருதி சுஸுகி 800... இதுதான் உலகின் மிக குறுகிய மாருதி 800... இதோ வீடியோ!

ஆனால், அது எப்போது மாற்றம் செய்யப்படும் என்ற தகவல்கள் அவர்கள் தெரிவிக்கவில்லை. ஆனால், நிச்சயம் மீண்டும் புதிய மாற்றத்துடன் அதனை இணைப்போம் என கூறியிருக்கின்றனர்.

பாதுகாப்பு சிக்கல் காரணமாகவே இத்தகைய மாடிஃபிகேஷன்களுக்கு இந்திய மோட்டார் வாகன சட்டம் அனுமதி வழங்குவதில்லை.

3 வீலராக மாறிய மாருதி சுஸுகி 800... இதுதான் உலகின் மிக குறுகிய மாருதி 800... இதோ வீடியோ!

உண்மைத் தோற்றத்தை இழந்து வேறு உருவத்திற்கு மாறும் வாகனங்களை இனம் கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகின்றது. இதன் காரணத்தினாலயே மாடிஃபிகேஷன் மற்றும் கலப்பினங்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

3 வீலராக மாறிய மாருதி சுஸுகி 800... இதுதான் உலகின் மிக குறுகிய மாருதி 800... இதோ வீடியோ!

அதேசமயம், அராய் மற்றும் ஐகேட் ஆகிய அமைப்புகளின் குறிப்பிட்ட பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் இதுமாதிரியான வாகனங்களை சாலையில் அதிகாரப்பூர்வமானதாக மாற்ற முடியும். அதாவது, இந்த அமைப்புகள் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வாகனத்தை இந்திய சாலைக்கு உகந்ததா என பரிசோதனைக்கு மேற்கொள்ளும். இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அது ஆர்டிஓ பதிவிற்கு அங்கீகாரம் பெற முடியும்.

இதில், அனுமதி பெறாமல் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்களை இந்திய சாலைகளில் வைத்து இயக்க முடியாது. மேலும், அனுமதி பெறாமல் அந்த வாகனத்தை இயக்கினால் காவல்துறையினர் பறிமுதல் மற்றும் அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வழிவகுக்கும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Maruti Suzuki 800 Converted As Three Wheel Vehicle. Read In Tamil.
Story first published: Wednesday, May 27, 2020, 13:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X