5 வருடத்தில் 8 லட்ச பலேனோ கார்களை விற்பனை செய்து மாருதி சுஸுகி புதிய சாதனை!

அறிமுகமானதில் இருந்து கடந்த 5 வருடங்களில் 8 லட்ச பலேனோ கார்களை விற்பனை செய்துள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

5 வருடத்தில் 8 லட்ச பலேனோ கார்களை விற்பனை செய்து மாருதி சுஸுகி புதிய சாதனை!

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக உள்ள மாருதி சுஸுகி முதன்முதலாக 2015 அக்டோபரில் பலோனோவை ப்ரீமியம் ஹேட்ச்பேக் காராக சந்தையில் அறிமுகப்படுத்தியது. தற்போது 8 லட்சம் என்ற விற்பனையை இந்த கார் 5 வருடத்திற்கும் ஒரு மாதம் குறைவாக 59 மாதங்களிலேயே எட்டியுள்ளது.

5 வருடத்தில் 8 லட்ச பலேனோ கார்களை விற்பனை செய்து மாருதி சுஸுகி புதிய சாதனை!

மாருதி நிறுவனத்தின் நெக்ஸா சில்லறை விற்பனை மையத்தின் மூலமாக தொடர்ந்து அதிகளவில் விற்கப்படும் மாடலாக விளங்கும் பலேனோவின் இந்த குறுகிய கால சாதனையின் மூலம் இந்த ஹேட்ச்பேக் சந்தையில் எந்தளவில் பிரபலமாக உள்ளதை என்பதை அறியலாம். ஏனென்றால் சராசரியாக மாதத்திற்கு 15,000 பலேனோ கார்கள் விற்பனையாகுகின்றன.

5 வருடத்தில் 8 லட்ச பலேனோ கார்களை விற்பனை செய்து மாருதி சுஸுகி புதிய சாதனை!

அதிலும் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 19,433 யூனிட் பலேனோ கார்களை மாருதி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதனால் இந்தியாவில் விற்பனை செய்யப்படுவது மட்டுமில்லாமல் ஆஸ்திரேலியா, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா, ஆப்ரிக்கா, மத்திய மற்றும் கிழக்கத்திய ஆசிய நாடுகளிலும் இந்த கார் சந்தைப்படுத்தப்படுகிறது.

5 வருடத்தில் 8 லட்ச பலேனோ கார்களை விற்பனை செய்து மாருதி சுஸுகி புதிய சாதனை!

இதுகுறித்து மாருதி சுஸுகி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஷஷாங்க் ஸ்ரீவஸ்தா கூறுகையில், "இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பிரீமியம் ஹேட்ச்பேக், மாருதி சுஸுகி பலேனோ எங்கள் போர்ட்ஃபோலியோவில் மிகவும் சிறப்பு வாய்ந்த இடத்தைப் பெற்றுள்ளது. அதன் தைரியமான மற்றும் பிரீமியம் வடிவமைப்பு, அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நிறைந்த அம்சங்கள் ஆகியவற்றைக் கொண்டு, பிரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் எங்கள் நிலையை உறுதிப்படுத்த பலேனோ எங்களுக்கு உதவுகிறது.

5 வருடத்தில் 8 லட்ச பலேனோ கார்களை விற்பனை செய்து மாருதி சுஸுகி புதிய சாதனை!

பலேனோ எங்கள் நெக்ஸா சேனலுக்கு அங்கீகாரம் வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது" என்றவர் மேலும் கூறுகையில், "பலேனோவில் சரியான நேரத்தில் கொண்டுவரப்பட்ட புதுமைகள் இந்தியாவில் வளர்ந்துவரும் மாற்றங்களுடன் சரியாக ஒத்துப்போகின்றன. 5 வருட என்ற குறுகிய காலத்திற்குள் 8 லட்சம் மகிழ்ச்சியடைந்த வாடிக்கையாளர்களை பெற்றிருப்பது பலேனோவிற்கு கிடைத்துவரும் வரவேற்பிற்கு ஒரு சான்றாகும்" என கூறினார்.

5 வருடத்தில் 8 லட்ச பலேனோ கார்களை விற்பனை செய்து மாருதி சுஸுகி புதிய சாதனை!

புதிய மாசு உமிழ்வு விதியினால் பலேனோவில் டீசல் என்ஜின் வழங்கப்படுவது ஏற்கனவே நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் சில ஸ்மார்ட் ஹைப்ரீட் வேரியண்ட்களுடன் இந்த ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார் பெட்ரோல் காராகவே விற்பனை செய்யப்படுகிறது. இதில் பெட்ரோல் வெர்சனில் 1.2 லிட்டர் விவிடி என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் என்ற கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் வழங்கப்படுகிறது.

5 வருடத்தில் 8 லட்ச பலேனோ கார்களை விற்பனை செய்து மாருதி சுஸுகி புதிய சாதனை!

இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 82 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அதேநேரம் சுஸுகியின் ஸ்மார்ட் ஹைப்ரீட் வாகன தொழிற்நுடபத்துடன் வழங்கப்படும் பலேனோவின் ஸ்மார்ட் ஹைப்ரீட் வெர்சன் சற்று கூடுதலாக 89 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க் திறனில் இயங்கும்.

5 வருடத்தில் 8 லட்ச பலேனோ கார்களை விற்பனை செய்து மாருதி சுஸுகி புதிய சாதனை!

இந்த வெர்சனில் 5-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. தற்சமயம் மாருதி சுஸுகி பலேனோவிற்கு டாடா அல்ட்ராஸ் மற்றும் ஹோண்டா ஜாஸ் போன்ற ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார்கள் முக்கிய போட்டியாக விளங்குகின்றன. விரைவில் இந்த வரிசையில் ஹூண்டாயின் புதிய தலைமுறை ஐ20 காரும் இணையவுள்ளது.

Most Read Articles
English summary
Maruti Suzuki Baleno Breaches 8 lakh Sales Milestone In Under 5 Years
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X