விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..?

மாருதி சுசுகி நிறுவனத்தின் பலேனோ கார் விற்பனையில் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..?

மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரபல கார்களில் ஒன்று இந்த பலேனோ கார். நாட்டில் அதிகம் விற்பனையாகும் ஹேட்ச் ரக கார்களில் இதுவும் ஒன்று. இது பல வருடங்கள் அதிகம் விற்பனையாகும் முதன்மை இடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவில் விற்பனையாகும் பிரிமியம் ரக ஹேட்ச் பேக் கார் என்ற பெருமையே இந்த காரின் அதீத வரவேற்பு முக்கிய காரணமாக இருக்கின்றது.

விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..?

இந்த பலேனோ கார்கள் சுசுகி நிறுவனத்தின் எக்ஸ்க்ளூசிவ் ஷோரூம்களான நெக்ஸா மூலம் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இந்த சிறப்பு வாய்ந்த ஷோரூம்கள் நாடு முழுவதும் 200 மேற்பட்ட எண்ணிக்கையில் இருக்கின்றது.

விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..?

இந்நிலையில், மாருதி சுசுகி நிறுவனத்தின் இந்த சிறப்பு வாய்ந்த பலேனோ காரின் விற்பனைப் பற்றிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அந்த கார் அறிமும் செய்யப்பட்ட முதல் நாளிலிருந்து தற்போது வரை 7,20,733 யூனிட்டுகளை விற்பனைச் செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..?

இந்த விற்பனையில் மிகப்பெரிய பங்கினை பலேனோ டீசல் வேரியண்டே பெற்றிருக்கின்றது. 6,16,867 யூனிட்டுகளை விற்பனைச் செய்யப்பட்டுள்ளன. அதேசமயம், பெட்ரோல் வேரியண்டைப் பார்த்தோமேயானால் மிக மிக குறைவாக இருக்கின்றது. அது, 1,03,866 யூனிட்டுகளாக உள்ளது.

விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..?

மாருதி சுசுகி நிறுவனம் இந்த பலேனோ காரை கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் மாதமே முதல் முறையாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

இது, நடப்பாண்டின் ஜனவரி மாத இறுதி வரை 7,20,733 யூனிட்டுகளை வரை விற்பனைச் செய்து சாதனைப்படைத்துள்ளது.

விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..?

குறிப்பாக வெறும் 51 மாதங்களில் இந்த இமாலய விற்பனை விகிதத்தை அது பெற்றிருக்கின்றது. இடையில், இந்திய வாகனச் சந்தை மிகப்பெரிய விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்தது. இக்கட்டான சூழ்நிலை ஏற்படாமல் இருந்திருக்குமானால், பலேனோ கார்கள் கூடுதல் இலக்கை தொட்டிருக்கும் என கூறப்படுகின்றது.

விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..?

இந்த காரை மாருதி சுசுகி நிறுவனம் ஹூண்டாய் நிறுவனத்தின் ஐ20 காருக்கு போட்டியாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதற்கு நல்ல பலன் அளிக்கும் விதமாக இந்த விற்பனைத் தகவல் இருக்கின்றது. தொடர்ந்து, இதன் வருகையால் ஹூண்டாய் ஐ20 காரின் விற்பனை லேசாக ஆட்டம் காண ஆரம்பித்தது.

விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..?

ஆனாலும், அதன் விற்பனைக் குறையவில்லை. மாறாக, ஐ20ன் விற்பனையும் அதிகரிக்கத் தொடங்கியது. இருப்பினும், நம்பர் 1 மாடலாக பலேனோ கார் களத்தில் நின்றது.

குறிப்பாக இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட முதல் ஆண்டிலேயே 1 யூனிட்டுகளை விற்பனைச் செய்து புதிய மைல் கல்லை எட்டியது.

விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..?

தொடர்ந்து, 21 மாதத்தில் 2 லட்சம் யூனிட்டுகளாக அது அதிகரித்தது. இவ்வாறே ஒவ்வொரு வருடமும், ஏன் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும் புதிய எண்ணிக்கை விற்பனையைப் பெற்று இந்தியர்களின் விருப்பம் நிறைந்த ஹேட்ச்பேக் காராக அது மாறியது.

விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..?

குறிப்பாக, பலேனோ கார் மாதம் ஒன்றிற்கு 14,132 யூனிட்டுகளை விற்பனைச் செய்வதாக தற்போது வெளியாகியுள்ள தகவல் தெரிவிக்கின்றது. இது, நிமிஷம் மூன்றிற்கு ஒரு காரை விற்பனைச் செய்வதற்கு சமம் ஆகும்.

விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..?

கடந்த ஆண்டில் நிகழ்ந்த விற்பனை வீழ்ச்சியின் காரணமாக இந்த காரின் விற்பனை சுமார் 14 சதவீதம் சரிந்தது. இருப்பினும், ஏப்ரல் 2019 முதல் ஜனவரி 2020 வரையிலான விற்பனையைப் பார்த்தோமேயானால் 1,52,422 யூனிட்டுகளாக இருக்கின்றது.

அதுவே, கடந்த ஆண்டுகளின் விற்பனையைப் பார்ப்போமேயானால் 1,77,122 யூனிட்டுகளாக இருக்கின்றன. ஆனால், நடப்பாண்டில் நீடிக்காது என எதிர்பார்க்கப்படுகின்றது.

விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..?

ஏனென்றால், முந்தையாண்டின் விற்பனையைக் காட்டிலும் தற்போது லேசான விற்பனை உயர்வை அடைந்திருப்பதாகக் கூறப்படுகின்றது. அந்தவகையில், 2020 ஜனவரி மாதத்தின் இறுதி வரை பலேனோ கார்களின் 20,485 யூனிட்டுகள் விற்பனையாகியிருந்தன. இது கடந்த 2019ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 22.5 சதவீதம் அதிகம் ஆகும். ஆக, 2019 ஜனவரியில் பலேனோவின் 16,717 யூனிட்டுகள் விற்பனையாகியிருப்பது உறுதியாகியிருக்கின்றது.

விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..?

மாருதி சுசுகி நிறுவனம் பலேனோ காரின் டீசல் வேரியண்டை விற்பனையில் இருந்து நீக்கிவிட்டது. புதிய பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரக்கட்டுப்பாட்டு காரணமாக இந்த நடவடிக்கையை எடுத்திருக்கின்றது.

விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..?

தொடர்ந்து, இந்த பிரிமியம் தரத்திலான பலேனோ கார் பிஎஸ்4 தரத்திலான 1.3 லிட்டரிலும் கிடைக்காது. இதற்கு பதிலாக ஹைபிரிட் வெர்ஷனான 1.2 லிட்டர் பெட்ரோல் பலேனோவே இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும். இந்த கார் மேனுவல் மற்றும் சிவிடி தேர்வில் கிடைக்கின்றது. இது பிஎஸ்-6 தரத்திலான எஞ்ஜின் கொண்ட காராகும்.

Most Read Articles
English summary
Maruti Suzuki Baleno Premium Hatchback Sales Crosses 7 Lakh. Read In Tamil.
Story first published: Thursday, February 27, 2020, 19:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X