சியாஸ் செடான் கார் பயணத்திற்கு எவ்வளவு சவுகரியமானது தெரியுமா...? மாருதியின் இந்த வீடியோவை பாருங்க...

இந்திய சந்தையில் சி-பிரிவில் பிரபலமான செடான் மாடலாக விளங்கும் மாருதி சியாஸின் லேட்டஸ்ட் டெலிவிஷன் கமெர்ஷியல் (டிவிசி) வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாருதி கூறவந்துள்ள தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மாருதி சுசுகி நிறுவனம் சியாஸ் மிட்-சைஸ் செடான் மாடலை அதன் நெக்ஸா டீலர்ஷிப்கள் மூலமாக இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்த புதிய டிவிசி வீடியோவை நெக்ஸா தான் தனது அதிகாரப்பூர்வ யூடியுப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

சியாஸ் செடான் கார் பயணத்திற்கு எவ்வளவு சவுகரியமானது தெரியுமா...? மாருதியின் இந்த வீடியோவை பாருங்க...

இந்த வீடியோ முழுக்க முழுக்க சியாஸ் மாடலை விளம்பரப்படுத்தும் வகையில் இந்த செடான் கார் பயணத்திற்கு எவ்வளவு சவுகரியமானது என்பதை வெளிப்படுத்துகிறது. இதன் காரணமாக இந்த வீடியோ பெருமளவு காரின் உட்புறத்தை தான் கவர் செய்துள்ளது.

சியாஸ் செடான் கார் பயணத்திற்கு எவ்வளவு சவுகரியமானது தெரியுமா...? மாருதியின் இந்த வீடியோவை பாருங்க...

தற்போது விற்பனையில் உள்ள சியாஸ் மாடல் 2018ல் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் உடன் அப்டேட் வெர்சனாக வெளியானது. இந்த ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை பெற்றதற்கு பின்பு சியாஸ் செடான் கார் முன்பை விட ப்ரீமியமாக காட்சியளிக்கிறது. இதன் க்ரில் மேல் மற்றும் அடிப்பகுதியில் க்ரோம் ஸ்ட்ரிப் உடன் பளபளப்பாக வடிவமைக்கப்பட்டு வருகிறது.

சியாஸ் செடான் கார் பயணத்திற்கு எவ்வளவு சவுகரியமானது தெரியுமா...? மாருதியின் இந்த வீடியோவை பாருங்க...

ஹெட்லைட்ஸ், ப்ரோஜெக்டர் விதத்திலான லேம்ப்களையும், ஃபாக் லேம்ப்களையும் கொண்டுள்ளது. காரின் பின்புறமும் பூமராங் வடிவிலான க்ரோம் உடன் அழகுப்படுத்தப்பட்டுள்ளது. உட்புறத்தில் ஸ்டேரிங் சக்கரம் உள்பட காரின் மொத்த கேபினும் லெதரால் வடிவமைக்கப்படுகிறது.

சியாஸ் செடான் கார் பயணத்திற்கு எவ்வளவு சவுகரியமானது தெரியுமா...? மாருதியின் இந்த வீடியோவை பாருங்க...

இதன் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் திரை, ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்டவற்றை இணைக்கும் வசதியை கொண்டுள்ளது. முதலில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளுடன் விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த செடான் கார் பிறகு புதிய மாசு உமிழ்வு விதியின் காரணமாக டீசல் என்ஜினை இழந்தது.

சியாஸ் செடான் கார் பயணத்திற்கு எவ்வளவு சவுகரியமானது தெரியுமா...? மாருதியின் இந்த வீடியோவை பாருங்க...

இதனால் தற்சமயம் சியாஸ் மாடலுக்கு பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 1.5 லிட்டர், 4-சிலிண்டர், பெட்ரோல் என்ஜின் தேர்வு மட்டும் தான் வழங்கப்பட்டு வருகிறது. அதிகப்பட்சமாக 105 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் தான் மாருதி எர்டிகா, எக்ஸ்எல்6 மற்றும் 2020 பிரெஸ்ஸா மாடல்களிலும் வழங்கப்பட்டு வருகிறது.

சியாஸ் செடான் கார் பயணத்திற்கு எவ்வளவு சவுகரியமானது தெரியுமா...? மாருதியின் இந்த வீடியோவை பாருங்க...

ஸ்மார்ட் ஹைப்ரீட் சிஸ்டத்துடன் உள்ள இந்த என்ஜின் டார்க் திறனை குறைவான ஆர்பிஎம்-லும், காரின் செயல்திறனை அதிகரிக்கும் விதத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 4-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் என்ற கியர்பாக்ஸ் தேர்வுகள் இணைக்கப்படுகின்றன.

சியாஸ் செடான் கார் பயணத்திற்கு எவ்வளவு சவுகரியமானது தெரியுமா...? மாருதியின் இந்த வீடியோவை பாருங்க...

முதன்முதலாக 2014ல் இந்திய சந்தையில் அறிமுகமாகி தற்சமயம் ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டி மற்றும் ஸ்கோடா ரேபிட் மாடல்களுக்கு போட்டியாக உள்ள மாருதி சியாஸ் மாடலின் தற்போதைய பிஎஸ்6 வெர்சன் எக்ஸ்ஷோரூமில் ரூ.8.31 - ரூ.11.09 லட்சத்தை விலையாக கொண்டுள்ளது.

Most Read Articles
English summary
2020 Maruti Ciaz TVC
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X