சும்மா கெத்து காட்றாங்க... மீண்டும் பட்டைய கௌப்ப தொடங்கிய மாருதி சுஸுகி... மேட்டர் என்னனு தெரியுமா?

மாருதி சுஸுகி நிறுவனம் மீண்டும் கெத்து காட்ட தொடங்கியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சும்மா கெத்து காட்றாங்க... மீண்டும் பட்டைய கௌப்ப தொடங்கிய மாருதி சுஸுகி... மேட்டர் என்னனு தெரியுமா?

சீனாவில் இருந்து பரவ தொடங்கியதாக கூறப்படும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) இன்று உலகை ஆட்டி படைக்க தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மறுபக்கம் உலக நாடுகளின் பொருளாதாரமும் வீழ்ச்சி பாதையில் செல்கிறது.

சும்மா கெத்து காட்றாங்க... மீண்டும் பட்டைய கௌப்ப தொடங்கிய மாருதி சுஸுகி... மேட்டர் என்னனு தெரியுமா?

இதனால் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையிலும், ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தியாவை பொறுத்தவரை கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. வரும் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஊரடங்கில் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

MOST READ: வெறும் 1,500 ரூபாய்தான் செலவு... கொரோனாவை தடுக்க சூப்பர் ஐடியா... கெத்து காட்டும் கோவை கார் ஓனர்

சும்மா கெத்து காட்றாங்க... மீண்டும் பட்டைய கௌப்ப தொடங்கிய மாருதி சுஸுகி... மேட்டர் என்னனு தெரியுமா?

இதன் காரணமாக நீண்ட நாட்களாக முடங்கி கிடந்த ஆட்டோமொபைல் துறை தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து தொழிற்சாலைகளில் வாகன உற்பத்தி நிறுத்தப்பட்டது. அத்துடன் அன்றைய தினம் முதல் இந்தியா முழுவதும் உள்ள வாகன டீலர்ஷிப்களும் மூடப்பட்டன.

சும்மா கெத்து காட்றாங்க... மீண்டும் பட்டைய கௌப்ப தொடங்கிய மாருதி சுஸுகி... மேட்டர் என்னனு தெரியுமா?

ஆனால் தற்போது ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு வருவதால், தொழிற்சாலைகளில் மீண்டும் வாகன உற்பத்தி தொடங்கியுள்ளது. மேலும் டீலர்ஷிப்களும் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் அச்சம் ஒரு பக்கம் இருந்தாலும், மத்திய, மாநில அரசுகள் வகுத்துள்ள பாதுகாப்பு நெறிமுறைகள் தீவிரமாக பின்பற்றப்படுகின்றன.

MOST READ: புல்லட் ரயில் போல் சாலையில் சீறிப்பாய்ந்த கார்-பைக்... வீடியோ பாக்கறப்பவே தலை சுத்துது... அவ்ளோ ஸ்பீடு

சும்மா கெத்து காட்றாங்க... மீண்டும் பட்டைய கௌப்ப தொடங்கிய மாருதி சுஸுகி... மேட்டர் என்னனு தெரியுமா?

இந்த சூழலில் கடந்த சில நாட்களில் 5,000க்கும் அதிகமான கார்களை டெலிவரி செய்துள்ளதாக இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி தற்போது தெரிவித்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் தனது அன்றாட செயல்பாடுகளை மீண்டும் தொடங்கிய பிறகு டெலிவரி செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை இதுவாகும்.

சும்மா கெத்து காட்றாங்க... மீண்டும் பட்டைய கௌப்ப தொடங்கிய மாருதி சுஸுகி... மேட்டர் என்னனு தெரியுமா?

தற்போது நாடு முழுவதும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் 1,350க்கும் அதிகமான ஷோரூம்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன. ஆனால் அனைத்து ஷோரூம்களிலும், கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

MOST READ: வழியில பிரச்னையே இருக்காது... தமிழக மக்கள் ஈஸியா இ-பாஸ் வாங்க இதுதான் வழி... எப்படினு தெரியுமா?

சும்மா கெத்து காட்றாங்க... மீண்டும் பட்டைய கௌப்ப தொடங்கிய மாருதி சுஸுகி... மேட்டர் என்னனு தெரியுமா?

இந்தியா முழுவதும் 1,350க்கும் அதிகமான ஷோரூம்களும், 300க்கும் அதிகமான ட்ரூ வேல்யூ அவுட்லெட்களும் தற்போது செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதுகுறித்து நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான கெனிச்சி அயுகவா கூறுகையில், ''வாடிக்கையாளர்களின் கார் வாங்கும் அனுபவம் முற்றிலும் பாதுகாப்பானதாக இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சும்மா கெத்து காட்றாங்க... மீண்டும் பட்டைய கௌப்ப தொடங்கிய மாருதி சுஸுகி... மேட்டர் என்னனு தெரியுமா?

இந்த பாதுகாப்பு விதிகள், மத்திய, மாநில அரசுகள் வகுத்துள்ள பாதுகாப்பு நெறிமுறைகளை அடிப்படையாக கொண்டுள்ளன. வாடிக்கையாளர்கள் தங்கள் கார்களை டிஜிட்டல் முறையில் தேர்வு செய்வதையும், புக்கிங் செய்வதையும் ஊக்குவிக்க விரும்புகிறோம். மேலும் தங்கள் புதிய கார்களை ஹோம் டெலிவரி பெறுவதில் இருக்கும் சாதகங்களை அவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் விரும்புகிறோம்.

MOST READ: பாக்கவே பாவமா இருக்கு... வாகன ஓட்டிகளை கண்மூடித்தனமாக தாக்கிய போலீசார்... வேற ஒன்னும் பண்ணிருக்காங்க

சும்மா கெத்து காட்றாங்க... மீண்டும் பட்டைய கௌப்ப தொடங்கிய மாருதி சுஸுகி... மேட்டர் என்னனு தெரியுமா?

எஞ்சிய ஷோரூம்களை திறப்பதற்கும் முயன்று வருகிறோம். கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் இல்லை என்றாலோ அல்லது ஏதாவது உள்ளூர் பாதுகாப்பு நெறிமுறைகளின்படி தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் இல்லை என்றாலோ எஞ்சிய ஷோரூம்களும் திறக்கப்படும்'' என்றார். இந்தியாவில் மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு 3,086 ஷோரூம்கள் உள்ளன.

சும்மா கெத்து காட்றாங்க... மீண்டும் பட்டைய கௌப்ப தொடங்கிய மாருதி சுஸுகி... மேட்டர் என்னனு தெரியுமா?

1,964 நகரங்களில் அவை இயங்கி வருகின்றன. இதில், குறிப்பிட்ட ஷோரூம்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய ஷோரூம்களையும் பாதுகாப்பு விதிமுறைகளின்படி திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கார் விற்பனை அடியோடு முடங்கியிருந்தது.

சும்மா கெத்து காட்றாங்க... மீண்டும் பட்டைய கௌப்ப தொடங்கிய மாருதி சுஸுகி... மேட்டர் என்னனு தெரியுமா?

ஆனால் வரும் நாட்களில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றி விடுமோ? என்ற அச்சமும் மக்களை கார் வாங்க தூண்டலாம் என கூறப்படுகிறது. பஸ், ஆட்டோ, டாக்ஸி போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் பயணித்தால், கொரோனா தொற்று ஏற்படலாம் என மக்கள் அஞ்சுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சும்மா கெத்து காட்றாங்க... மீண்டும் பட்டைய கௌப்ப தொடங்கிய மாருதி சுஸுகி... மேட்டர் என்னனு தெரியுமா?

அதற்கு பதில் கார் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் பயணிப்பதை மக்கள் பாதுகாப்பானதாக கருதலாம் எனவும் அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் கார் விற்பனை அதிகரிக்கப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் இழந்த விற்பனையை மீட்டு விட முடியும் என்ற நம்பிக்கையுடன் கார் நிறுவனங்கள் சுறுசுறுப்பாக செயல்பட தொடங்கியுள்ளன.

Most Read Articles

English summary
Maruti Suzuki Delivers 5,000 Cars After Covid-19 Lockdown Relaxation. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X