மாருதி டிசையர் ஃபேஸ்லிஃப்ட் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

புதிய பிஎஸ்6 எஞ்சின் மற்றும் புதிய பொலிவுடன் மாருதி டிசையர் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இந்த காரில் இடம்பெற்றிருக்கும் முக்கிய சிறப்பம்ங்களை வேரியண்ட் வாரியாக பார்த்துவிடலாம். இந்த காரை வாங்குவோருக்கு இது சிறப்பானதாக இருக்கும்.

 மாருதி டிசையர் ஃபேஸ்லிஃப்ட் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

வேரியண்ட்டுகள் விபரம்

மாருதி டிசையர் 2020 ஃபேஸ்லிஃப்ட் மாடலானது LXi, VXi, ZXi மற்றும் ZXi+ ஆகிய நான்கு வேரியண்ட்டுகளில் கிடைக்கும். இந்த கார் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி என்ற வகையிலான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். இதில், LXi வேரியண்ட்டில் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு மட்டுமே வழங்கப்படுகிறது. வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் பார்க்கலாம்.

 மாருதி டிசையர் ஃபேஸ்லிஃப்ட் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

டிசையர் எல்எக்ஸ்ஐ (மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும்)

விலை: ரூ.5.89 லட்சம்

மாருதி டிசையர் காரின் விலை குறைவான பேஸ் வேரியண்ட் இதுதான். இந்த வேரியண்ட்டில் ஹாலஜன் பல்புகளுடன் ஹெட்லைட், எல்இடி டெயில் லைட் ஆகியவை உள்ளன. உட்புறத்தில், இரட்டை வண்ண இன்டீரியர், மர அலங்கார வேலைப்பாடுகள், மேனுவல் ஏசி சிஸ்டம், டில்ட் அட்ஜெஸ்ட் ஸ்டீயரிங் வீல், மல்டி இன்ஃபர்மேஷன் திரை, 14 அங்குல ஸ்டீல் வீல்கள் வழங்கப்படுகின்றன. இரண்டு ஏர்பேக்குகள், இபிடி, பிரேக் அசிஸ்ட் தொழில்நுட்பங்களுடன் இணைந்து செயல்படும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள் உள்ளன.

 மாருதி டிசையர் ஃபேஸ்லிஃப்ட் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

டிசையர் விஎக்ஸ்ஐ வேரியண்ட்

மேனுவல் விலை: ரூ.6.79 லட்சம்

ஏஎம்டி விலை: ரூ.7.32 லட்சம்

பேஸ் வேரியண்ட்டில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்களுடன் கூடுதலாக பாடி கலர் ரியர் வியூ மிரர்கள், பவர் விண்டோஸ், டாக்கோமீட்டருடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், 4 ஸ்பீக்கர்களுடன் 2 டின் ஆடியோ சிஸ்டம், யுஎஸ்பி, சிடி, ஆக்ஸ் போர்ட் மற்றும் புளூடூத் இணைப்பு வசதி, ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகல், பின்புறத்திலும் சார்ஜர், ரியர் ஏசி வென்ட், ஓட்டுனர் இருக்கையின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, வீல் கவர்களுடன் ஸ்டீல் வீல், ஏஎம்டி மாடலில் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் மற்றும் ஹில் ஹோல்டு அசிஸ்ட் வசதிகள் உள்ளன.

 மாருதி டிசையர் ஃபேஸ்லிஃப்ட் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

டிசையர் இசட்எக்ஸ்ஐ வேரியண்ட்

மேனுவல் விலை: ரூ7.48 லட்சம்

ஏஎம்டி விலை: ரூ.8.01 லட்சம்

இந்த வேரியண்ட்டில் கூடுதலாக 15 அங்குல அலாய் வீல்கள், லெதர் உறையுடன் ஸ்டீயரிங் வீல், முன்புற பனி விளக்குகள் உள்ளன. ஓட்டுனர் பக்க ஜன்னல் கண்ணாடி மூடும்போது பாதுகாப்பை வழங்கும் ஆன்ட்டி பின்ச் ரோல் டவுன் வசதி, ஒருமுறை தொட்டால் மேலே, கீழே இறங்கும் தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. இந்த மாடலில் ட்வீட்டர்களுடன் கூடிய ஆடியோ சிஸ்டம் உள்ளது. புஷ் பட்டன் ஸ்டார்ட், கீ லெஸ் என்ட்ரி, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், 7 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை உள்ளன.

 மாருதி டிசையர் ஃபேஸ்லிஃப்ட் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

இசட்எக்ஸ்ஐ ப்ளஸ்

மேனுவல் விலை: ரூ.8.28 லட்சம்

ஏஎம்டி விலை: ரூ.8.80 லட்சம்

மிகவும் விலை உயர்ந்த வேரியண்ட்டில் அதிகபட்சமான அனைத்து வசதிகளும் இடம்பெற்றிருக்கின்றன. இதில், 15 அங்குல பிரிசிசன் கட் அலாய் வீல்கள், ஆட்டோமேட்டிக் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், ரியர் வியூ கேமரா, க்ரூஸ் கன்ட்ரோல் வசதி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

 மாருதி டிசையர் ஃபேஸ்லிஃப்ட் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

எஞ்சின்

புதிய மாருதி டிசையர் பிஎஸ்6 மாடலில் 1.2 லிட்டர் டியூவல்ஜெட் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 90 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. பலேனோ காரில் வழங்கப்படும் அதே எஞ்சின்தான் என்றாலும், மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் இதில் கொடுக்கப்படவில்லை. ஆனால், ஐட்லிங் ஸ்டார்ட் ஸ்டாப் வசதி உள்ளது.

 மாருதி டிசையர் ஃபேஸ்லிஃப்ட் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

மைலேஜ்

புதிய மாருதி டிசையர் கார் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். இதில், மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 23.26 கிமீ மைலேஜையும், ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு ரூ.24.12 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும் விஷயமாக இருக்கும்.

 மாருதி டிசையர் ஃபேஸ்லிஃப்ட் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

விலை வித்தியாசம்

அதிக தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் வந்திருக்கும் புதிய மாருதி டிசையர் கார் ரூ.5.89 லட்சம் முதல் ரூ.8.80 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் வந்துள்ளது. பழைய மாடலை ஒப்பிடும்போது, விலை ரூ.5,000 முதல் ரூ.22,000 வரை வேரியண்ட்டிற்கு தக்கவாறு அதிகரித்துள்ளது.

Most Read Articles
English summary
Maruti Suzuki has launched the 2020 Dzire in India with new BS6 petrol engine and prices starting at Rs.5.89 Lakh (Ex-Showroom). Here are the variant wise features details of the new Dzire facelift model.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X