மாருதி சுசுகி ஈக்கோ பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகமானது... இவ்வளவு தான் விலையா...!

மாருதி சுசுகி நிறுவனம் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான ஈக்கோ மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை அனைவரும் ஆச்சிரியப்படும் விதமாக எக்ஸ்ஷோரூமில் ரூ.3.81 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாருதி சுசுகி ஈக்கோ பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகமானது... இவ்வளவு தான் விலையா...!

இந்த பிஎஸ்6 மாடல் அதன் முந்தைய மாடலை விட மிகவும் சிறிய அளவில் தான் மாற்றங்களை ஏற்றுள்ளது. என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. அதே 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தான் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது.

மாருதி சுசுகி ஈக்கோ பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகமானது... இவ்வளவு தான் விலையா...!

இந்த 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தான் மாருதியின் பெரும்பாலான கார்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 73 பிஎச்பி பவரையும், 98 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதனுடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

மாருதி சுசுகி ஈக்கோ பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகமானது... இவ்வளவு தான் விலையா...!

மாருதி சுசுகி ஈக்கோ சிஎன்ஜி வேரியண்ட்டிலும் விற்பனையாகி வருகிறது. ஈக்கோவின் இந்த சிஎன்ஜி வேரியண்ட் ஒரு லிட்டரில் 21.8 கிமீ தூரம் பயணிக்கும் திறன் கொண்டது. அதேபோல் கார்கோ ட்ரிம் உள்பட பல ட்ரீம் வேரியண்ட்டிலும் சந்தையில் ஈக்கோ மாடல் கிடைக்கிறது. கடந்த 2010ஆம் ஆண்டு இறுதியில் இந்தியாவில் அறிமுகமான இந்த ஈக்கோ மாடல், இதுவரை 6.5 லட்சம் விற்பனை எண்ணிக்கையை இந்திய சந்தையில் பதிவு செய்துள்ளது.

மாருதி சுசுகி ஈக்கோ பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகமானது... இவ்வளவு தான் விலையா...!

மாருதியின் ஈக்கோ மாடல் முழுக்க முழுக்க மிடில்-கிளாஸ் குடும்பங்களை குறிக்கோளாக வைத்து தயாரிக்கப்பட்ட வாகனமாகும். இதிலும் முக்கியமாக இதன் கார்கோ வேரியண்ட், நகரப்புற பயன்பாட்டிற்கும், நகர போக்குவரத்திற்கும், சிறிய அளவிலான தொழில் புரிவோர்க்கும் மிகவும் ஏற்ற வாகனமாகும்.

மாருதி சுசுகி ஈக்கோ பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகமானது... இவ்வளவு தான் விலையா...!

ஈக்கோ பிஎஸ்6 மாடலின் அறிமுகம் குறித்து மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் சந்தை & விற்பனைப்படுத்துதல் பிரிவின் நிர்வாக இயக்குனர் ஷஷான்க் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான வாகனங்களை தொடர்ந்து வழங்குவதில் மாருதி நிறுவனம் உறுதியுடன் உள்ளது.

மாருதி சுசுகி ஈக்கோ பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகமானது... இவ்வளவு தான் விலையா...!

மாசற்ற போக்குவரத்தை வழங்க வேண்டும் என்ற எங்களது இந்த நோக்கமே, பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்ட ஈக்கோ மாடலை அறிமுகப்படுத்த உந்துக்கோலாக அமைந்தது. அறிமுகமாகி கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் கழிந்தப்போதிலும் ஈக்கோ மாடலை முன்பே தீர்மானித்து 84 சதவீதத்தினர் இப்போதும் வாங்குகின்றனர்.

மாருதி சுசுகி ஈக்கோ பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகமானது... இவ்வளவு தான் விலையா...!

இதற்கு காரணம், இந்த காரின் டிசைன் மற்றும் குறைந்த அளவிலான பராமரிப்பு செலவு தான். இந்த காரை 50 சதவீதத்தினர் சிறு வணிகத்திற்காக வாங்கினாலும், இந்த கார் பாதுகாப்பு அம்சங்களை அதிகமாக கொண்டிருப்பதால் வணிகத்திற்கு மட்டுமின்றி, குடும்ப போக்குவரத்து வாகனமும் பயன்படுத்த முடியும்.

மாருதி சுசுகி ஈக்கோ பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகமானது... இவ்வளவு தான் விலையா...!

ஈக்கோ மாடல் மூலமாக அதன் பிரிவில் வலுவாக கால்பதித்துள்ளோம். இது தொடரும் என நம்புகிறோம். எங்களது தயாரிப்புகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம் என கூறினார்.

மாருதி சுசுகி ஈக்கோ பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகமானது... இவ்வளவு தான் விலையா...!

ஆம்னி வேனின் தயாரிப்பு நிறுத்தத்திற்கு பிறகு மாருதி சுசுகி நிறுவனத்தில் இருந்து விற்பனையாகி வரும் ஒரே ஒரு வேன் மாடலாக மாருதி சுசுகி ஈக்கோ உள்ளது. இதனால் இதன் விற்பனைக்கு போட்டி மாடலாக எதுவும் இல்லை. இந்திய சந்தையில் மிக சிறப்பாக விற்பனையான 10 கார்களில் ஒன்றாக எப்போதும் இடம்பிடித்துவிடும் ஈக்கோவின் இந்த பிஎஸ்6 மாடல் அறிமுகத்தால் ஈக்கோவின் தயாரிப்பு நிறுத்தம் குறித்து மாருதி சுசுகி நிறுவனம் எந்த திட்டமும் வகுக்கவில்லை என்பது தெரிய வருகிறது.

Most Read Articles
English summary
Maruti Suzuki Eeco BS-VI Launched In India: Prices Start At Rs 3.81 Lakh
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X