10 ஆண்டுகளில் 7 லட்ச மாதிரிகள் விற்பனை... ஈக்கோ விற்பனையில் புதிய உச்சத்தை தொட்ட மாருதி சுஸுகி...

புதிய சாதனையாக கடந்த 10 ஆண்டுகளில் மொத்தம் 7 லட்ச ஈக்கோ மாடல்களை விற்பனை செய்துள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

10 ஆண்டுகளில் 7 லட்ச மாதிரிகள் விற்பனை... ஈக்கோ விற்பனையில் புதிய உச்சத்தை தொட்ட மாருதி சுஸுகி...

எம்பிவி ரக காரான ஈக்கோ கடந்த 10 வருடங்களாக மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்பு பணியில் உள்ளது. 2010ல் முதன்முதலாக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஈக்கோ தனி மற்றும் கமர்ஷியல் என இரு விதமான பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

10 ஆண்டுகளில் 7 லட்ச மாதிரிகள் விற்பனை... ஈக்கோ விற்பனையில் புதிய உச்சத்தை தொட்ட மாருதி சுஸுகி...

இதனால் 1 லட்ச விற்பனை என்ற மைல்கல்லை இந்த எம்பிவி மிக விரைவாக இரண்டு வருடங்களுக்கு உள்ளாகவே அடைந்துவிட்டது. அடுத்த 1 லட்ச விற்பனையை 2014ஆம் ஆண்டின் இறுதிக்குள் எட்டிவிட்டது.

10 ஆண்டுகளில் 7 லட்ச மாதிரிகள் விற்பனை... ஈக்கோ விற்பனையில் புதிய உச்சத்தை தொட்ட மாருதி சுஸுகி...

கமர்ஷியல் பயன்பாடுகளுக்கு சிறந்த வாகனமாக முதலில் அங்கீகரிக்கப்படும் ஈக்கோவின் கார்கோ வேரியண்ட் கமர்ஷியல் பிரிவிற்காக 2015ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வாறான புதிய வேரியண்ட்களின் வருகையினால் 2018ஆம் வருடம் முடிவதற்குள்ளாக விற்பனையில் அரை மில்லியன், அதாவது 5 லட்சத்தை ஈக்கோ கடந்தது.

10 ஆண்டுகளில் 7 லட்ச மாதிரிகள் விற்பனை... ஈக்கோ விற்பனையில் புதிய உச்சத்தை தொட்ட மாருதி சுஸுகி...

இவற்றை தொடர்ந்து இந்த 2020ஆம் வருடத்தில் 1 லட்ச யூனிட்கள் விற்பனையாகி விற்பனையில் 7 லட்சம் என்ற மைல்கல்லை புதியதாக இந்த மாருதி தயாரிப்பு தொட்டுள்ளது. தயாரிப்பு நிறுவனம் இதன் பிஎஸ்6 வெர்சனை ரூ.4.64 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்துவருகிறது.

10 ஆண்டுகளில் 7 லட்ச மாதிரிகள் விற்பனை... ஈக்கோ விற்பனையில் புதிய உச்சத்தை தொட்ட மாருதி சுஸுகி...

5 மற்றும் 7 இருக்கை தேர்வுகளுடன் 12 வேரியண்ட்களாக விற்பனை செய்யப்பட்டு வரும் மாருதி ஈக்கோவின் கார்க்கோ வேரியண்ட் ஆம்புலன்ஸ் போன்ற கமர்ஷியல் வேலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. அதேநேரம் சமீபத்திய செயலிழப்பு வழிமுறைகளுக்கு இணக்கமானதாக இந்த எம்பிவி கார் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளில் 7 லட்ச மாதிரிகள் விற்பனை... ஈக்கோ விற்பனையில் புதிய உச்சத்தை தொட்ட மாருதி சுஸுகி...

இதனால் பயணிகளின் பாதுகாப்பிற்கு இரட்டை காற்றுப்பைகள், இபிடியுடன் ஏபிஎஸ், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், சீட் பெல்ட்டை நினைவூட்டும் வசதி, அதிவேகத்தை எச்சரிக்கும் அமைப்பு உள்ளிட்டவை இந்த வாகனத்தில் வழங்கப்படுகின்றன.

10 ஆண்டுகளில் 7 லட்ச மாதிரிகள் விற்பனை... ஈக்கோ விற்பனையில் புதிய உச்சத்தை தொட்ட மாருதி சுஸுகி...

ஈக்கோவில் 1.2 லிட்டர், 4-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 72 பிஎச்பி மற்றும் 98 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

10 ஆண்டுகளில் 7 லட்ச மாதிரிகள் விற்பனை... ஈக்கோ விற்பனையில் புதிய உச்சத்தை தொட்ட மாருதி சுஸுகி...

இவற்றுடன் தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட சிஎன்ஜி தொகுப்பையும் ஈக்கோவில் மாருதி நிறுவனம் வழங்குகிறது. என்ஜின், சிஎன்ஜி மோடில் 61 பிஎச்பி மற்றும் 85 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. ஈக்கோ சிஎன்ஜி காரின் மைலேஜ் 20.88km/kg ஆகும்.

Most Read Articles
English summary
Maruti Suzuki Eeco Reaches 7 Lakh Sales Milestone In 10 Years
Story first published: Friday, September 4, 2020, 12:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X