பிஎஸ்-6 சிஎன்ஜி தேர்வில் மாருதி சுசுகி எர்டிகா அறிமுகம்... விலை எவ்வளவு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..

மாருதி சுசுகி நிறுவனம் அதன் புகழ்வாய்ந்த மாடல்களில் ஒன்றான எர்டிகா எம்பிவி ரக காரை பிஎஸ்-6 சிஎன்ஜி தரத்தில் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

பிஎஸ்-6 சிஎன்ஜி தேர்வில் மாருதி சுசுகி எர்டிகா அறிமுகம்... விலை எவ்வளவு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

மாருதி சுசுகி நிறுவனம் அதன் பிரபல கார்களில் ஒன்றான எர்டிகா எம்பிவி மாடலில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணக்கமான எஸ்-சிஎன்ஜி வேரியண்டை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் காற்றின் தூய்மை கேள்விக்குறியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. கூடிய விரைவில் சாலையில் செல்லும் அனைவரும் முகமூடி அணிந்து செல்லுகின்ற சூழல் ஏற்படும் என கூறப்படுகின்றது. இதற்கு வாகனங்களில் இருந்து வெளிவரும் நச்சு கலந்த புகையும் ஓர் காரணமாகும்.

பிஎஸ்-6 சிஎன்ஜி தேர்வில் மாருதி சுசுகி எர்டிகா அறிமுகம்... விலை எவ்வளவு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

ஆகையால், வாகனங்களில் மாசு உமிழ்வு விதி பிஎஸ்-6 தரத்திற்கு இணையான எஞ்ஜின்களே பொருத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு 2020 ஏப்ரல் 1 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், நாட்டில் இயங்கும் அனைத்து வாகன உற்பத்தி நிறுவனங்களும் தங்களின் தயாரிப்புகளை பிஎஸ்-6 தரத்திற்கு அப்கிரேட் செய்து வருகின்றன.

பிஎஸ்-6 சிஎன்ஜி தேர்வில் மாருதி சுசுகி எர்டிகா அறிமுகம்... விலை எவ்வளவு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

அந்தவகையிலான, ஓர் நடவடிக்கையைதான் மாருதி சுசுகி நிறுவனமும் தற்போது மேற்கொண்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட அப்கிரேஷன் செய்யப்பட்ட பிரபல மாடலான எர்டிகாவை இந்தியாவில் அது அறிமுகம் செய்துள்ளது. இதில், பிஎஸ்-6 தரம் மட்டுமின்றி மிக குறைந்த அளவு மாசை எடுப்படுத்தும் சிஎன்ஜி ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிஎஸ்-6 சிஎன்ஜி தேர்வில் மாருதி சுசுகி எர்டிகா அறிமுகம்... விலை எவ்வளவு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

இதற்கு இந்திய மதிப்பில் ரூ. 8.95 லட்சம் என்ற விலையை மாருதி நிர்ணயித்துள்ளது. இது, முந்தைய மாடலைக் காட்டிலும் ரூ. 7 ஆயிரம் அதிகம் ஆகும்.

பிஎஸ்-6 சிஎன்ஜி தேர்வில் மாருதி சுசுகி எர்டிகா அறிமுகம்... விலை எவ்வளவு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

இந்த சிஎன்ஜி தேர்வு விஎக்ஸ்ஐ என்ற ஒரு வேரியண்டில் மட்டுமே கிடைக்கின்றது. இத்துடன், இந்த வேரியண்டில் சில நிற தேர்வும் வழங்கப்பட இருக்கின்றது.

இத்துடன், எர்டிகா பிஎஸ்-6 சிஎன்ஜி வேரியண்டில் தொழில்நுட்ப அம்சங்கள் பிரிமியம் வசதிகள் சிலவற்றையும் மாருதி சுசுகி நிறுவனம் வழங்கியுள்ளது.

பிஎஸ்-6 சிஎன்ஜி தேர்வில் மாருதி சுசுகி எர்டிகா அறிமுகம்... விலை எவ்வளவு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

அந்தவகையில், காரின் உடல் நிறத்திலான ஹேண்டில்கள் மற்றும் கண்ணாடிகள், மூடியுடன் கூடிய 15 இன்ச் ஸ்டீல் வீல், கண்ணாடியில் இன்டிகேட்டர்கள், எலக்ட்ரானிக் முறையில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய விங் மிர்ரர், இரண்டாம் இருக்கை வரிசைக்கான ஆர்ம் ரெஸ்ட், ரியர் ஏசி வெண்ட், கீலெஸ் ரிமோட் என்ட்ரீ, 12 வோல்ட் கொண்ட சார்ஜிங் பாயிண்ட், ஸ்டியரிங் வீல் மவுண்டட் ஆடியோ கன்ட்ரோல, யுஎஸ்பி, ஆக்ஸ், ப்ளூடூத் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் இந்த சிஎன்ஜி எர்டிகாவில் கிடைக்கின்றது.

பிஎஸ்-6 சிஎன்ஜி தேர்வில் மாருதி சுசுகி எர்டிகா அறிமுகம்... விலை எவ்வளவு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

இத்துடன், பகல் மற்றும் இரவு நேரத்திலும் துள்ளியமாக பின் வரும் வாகனங்களை காண்கின்ற வகையிலான கண்ணாடி காரின் கேபினுக்குள் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று, பொழுதுபோக்கிற்காக நான்கு ஸ்பீக்கர் கொண்ட மியூசிக் சிஸ்டம் இந்த காரில் நிறுவப்பட்டுள்ளது.

பிஎஸ்-6 சிஎன்ஜி தேர்வில் மாருதி சுசுகி எர்டிகா அறிமுகம்... விலை எவ்வளவு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

இதுபோதாதென பாதுகாப்பு அம்சத்திற்கான சிறப்பம்சங்களும் ஏராளமாக புதிய மாருதி சுசுகி சிஎன்ஜி எர்டிகாவில் வழங்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Maruti Suzuki Ertiga BS-6 S-CNG Launched At Rs 8.95 Lakh. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X