பிஎஸ்6 டீசல் என்ஜினுடன் 2020 மாருதி எர்டிகா சோதனை ஓட்டம்...!

மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரபலமான எர்டிகா மாடலின் பிஎஸ்6 டீசல் வேரியண்ட் சமீபத்தில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டபோது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் வெளிவந்துள்ள தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.

பிஎஸ்6 டீசல் என்ஜினுடன் 2020 மாருதி எர்டிகா சோதனை ஓட்டம்...!

மாருதி சுசுகி நிறுவனம் 1.3 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின்களை பிஎஸ்6 தரத்தில் தயாரிப்பு கார்களில் தற்போதைக்கு பொருத்த போவதில்லை என சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தது. ஆனால் தற்போது பிஎஸ்6 இணக்கமான எர்டிகாவின் டீசல் மாடல் சோதனை ஓட்டத்தின்போது கண்டறியப்பட்டுள்ளது.

பிஎஸ்6 டீசல் என்ஜினுடன் 2020 மாருதி எர்டிகா சோதனை ஓட்டம்...!

இதனால் மாருதி நிறுவனம் தனது கொள்கையில் இருந்து பின்வாங்கியிருப்பது தெள்ள தெளிவாக தெரிகிறது. மேலும் மாருதியின் இத்தகைய பிஎஸ்6 டீசல் வேரியண்ட்கள் இந்த வருட இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிஎஸ்6 டீசல் என்ஜினுடன் 2020 மாருதி எர்டிகா சோதனை ஓட்டம்...!

சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள எர்டிகா மாடலில் பிஎஸ்6 இணக்கமான 1.5 லிட்டர் இ15ஏ டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் பிஎஸ்6 தரத்தில் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவுகள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

பிஎஸ்6 டீசல் என்ஜினுடன் 2020 மாருதி எர்டிகா சோதனை ஓட்டம்...!

இந்த 1.5 லிட்டர் டீசல் என்ஜினுடன் ஃபியாட்டின் 1.6 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூடுதல் என்ஜின் தேர்வை எர்டிகா மட்டுமின்றி பிஎஸ்6 எக்ஸ்எல்6 மாடலும் பெறவுள்ளதாக கூறப்படுகிறது.

பிஎஸ்6 டீசல் என்ஜினுடன் 2020 மாருதி எர்டிகா சோதனை ஓட்டம்...!

பிஎஸ்4 தரத்தில் இந்த 1.5 லிட்டர் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 94 பிஎச்பி பவரையும் 225 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தி வருகிறது. இந்த பிஎஸ்4 என்ஜினுடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு வருகிறது.

பிஎஸ்6 டீசல் என்ஜினுடன் 2020 மாருதி எர்டிகா சோதனை ஓட்டம்...!

சமீபத்தில் இந்நிறுவனத்தில் இருந்து பிஎஸ்6 தரத்தில் எர்டிகா மாடலின் சிஎன்ஜி வேரியண்ட் அறிமுகமாகியிருந்தது. விஎக்ஸ்ஐ என்ற ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே கூடுதல் தேர்வாக வழங்கப்பட்டுள்ள எர்டிகா மாடலின் இந்த சிஎன்ஜி வேரியண்ட்டின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.8.95 லட்சத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்6 டீசல் என்ஜினுடன் 2020 மாருதி எர்டிகா சோதனை ஓட்டம்...!

மாருதி நிறுவனம் தனது கொள்கையில் பின்வாங்கி மீண்டும் பிஎஸ்6 டீசல் வேரியண்ட்களை தயாரிக்க ஆரம்பித்திருப்பது, கூட்டணி நிறுவனங்களின் விற்பனை போட்டியை சமாளிக்க என்ற ஒற்றை காரணத்தினால் தான் இருக்கும்.

பிஎஸ்6 டீசல் என்ஜினுடன் 2020 மாருதி எர்டிகா சோதனை ஓட்டம்...!

இதனால் தான் எர்டிகா மாடலுடன் விட்டாரா பிரெஸ்ஸா, எஸ்-பிரெஸ்ஸோ மற்றும் சியாஸ் உள்ளிட்டவற்றின் பிஎஸ்6 வெர்சன்களிலும் டீசல் வேரியண்ட்டை மாருதி நிறுவனம் வழங்கியுள்ளது.

இருப்பினும் ஸ்விஃப்ட், பலேனோ மற்றும் டிசைர் உள்ளிட்ட சிறிய அளவிலான கார்களில் இந்த 1.5 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வு, விலை உயர்த்த வேண்டிய கட்டாயத்தால் கொண்டுவரப்படவில்லை.

Source: Gaadiwaadi

Most Read Articles
English summary
BS6 Maruti Suzuki Ertiga Tour M Diesel Spied On Test
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X