8.5 ஆண்டுகளில் 5.50 லட்சம் கார்கள் விற்பனை... புதிய மைல்கல்லை எட்டியது மாருதி சுஸுகி எர்டிகா எம்பிவி

மாருதி சுஸுகி எர்டிகா எம்பிவி கார், இந்திய சந்தையில் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

8.5 ஆண்டுகளில் 5.50 லட்சம் கார்கள் விற்பனை... புதிய மைல்கல்லை எட்டியது மாருதி சுஸுகி எர்டிகா எம்பிவி

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எம்பிவி கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி எர்டிகா இருந்து வருகிறது. சரியான விலையில் கிடைப்பதும், மாருதி சுஸுகி நிறுவனத்தின் விரிவான சர்வீஸ் நெட்வொர்க்கும் எர்டிகா எம்பிவி காரின் விற்பனைக்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. இந்த சூழலில், மாருதி சுஸுகி எர்டிகா கார் விற்பனையில் புதிய மைல்கல் ஒன்றை தற்போது எட்டியுள்ளது.

8.5 ஆண்டுகளில் 5.50 லட்சம் கார்கள் விற்பனை... புதிய மைல்கல்லை எட்டியது மாருதி சுஸுகி எர்டிகா எம்பிவி

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட சுமார் 8.5 ஆண்டுகளில் 5.50 லட்சம் எர்டிகா எம்பிவி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி இந்த தகவலை இன்று (நவம்பர் 17ம் தேதி) அறிவித்தது. எர்டிகா கார் சர்வதேச சந்தைகளில் கடந்த 2012ம் ஆண்டில் இருந்து கிடைத்து வருகிறது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

8.5 ஆண்டுகளில் 5.50 லட்சம் கார்கள் விற்பனை... புதிய மைல்கல்லை எட்டியது மாருதி சுஸுகி எர்டிகா எம்பிவி

அந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில், இந்திய சந்தையில் மாருதி சுஸுகி எர்டிகா விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது இந்திய சந்தையில் மாருதி சுஸுகி எர்டிகா கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு, சுமார் 8.5 ஆண்டுகள் ஆகியுள்ளன. இடைப்பட்ட ஆண்டுகளில் 5.50 லட்சத்திற்கும் மேற்பட்ட எர்டிகா கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளது.

8.5 ஆண்டுகளில் 5.50 லட்சம் கார்கள் விற்பனை... புதிய மைல்கல்லை எட்டியது மாருதி சுஸுகி எர்டிகா எம்பிவி

மாருதி சுஸுகி எர்டிகா எம்பிவியின் முதல் தலைமுறை மாடலுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து எர்டிகா எம்பிவியின் இரண்டாவது தலைமுறை மாடலை மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்தது.

8.5 ஆண்டுகளில் 5.50 லட்சம் கார்கள் விற்பனை... புதிய மைல்கல்லை எட்டியது மாருதி சுஸுகி எர்டிகா எம்பிவி

மாருதி சுஸுகி எர்டிகா எம்பிவியின் ஒட்டுமொத்த விற்பனை 5.50 லட்சம் யூனிட்களை கடப்பதற்கு, இந்த இரண்டாவது தலைமுறை கார் கடந்த இரண்டு ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது. மாருதி சுஸுகி எர்டிகா காரில் முதலில் டீசல் இன்ஜின் தேர்வு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் பிஎஸ்-6 விதிமுறைகள் காரணமாக டீசல் இன்ஜின் மாடல்களின் விற்பனையை மாருதி சுஸுகி நிறுத்தி விட்டது.

8.5 ஆண்டுகளில் 5.50 லட்சம் கார்கள் விற்பனை... புதிய மைல்கல்லை எட்டியது மாருதி சுஸுகி எர்டிகா எம்பிவி

தற்போதைய நிலையில் 1.5 லிட்டர், நான்கு-சிலிண்டர், மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் தேர்வுடன் மாருதி சுஸுகி எர்டிகா எம்பிவி கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த 1.5 லிட்டர் SHVS யூனிட் அதிகபட்சமாக 104.7 பிஎஸ் பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வு ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது.

8.5 ஆண்டுகளில் 5.50 லட்சம் கார்கள் விற்பனை... புதிய மைல்கல்லை எட்டியது மாருதி சுஸுகி எர்டிகா எம்பிவி

இதுதவிர 4 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் யூனிட் ஆப்ஷனலாக வழங்கப்படுகிறது. இலகு ரக ஐந்தாம் தலைமுறை ஹார்ட்டெக் பிளாட்பார்ம் அடிப்படையில் மாருதி சுஸுகி எர்டிகா கார் உருவாக்கப்பட்டுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் பல்வேறு கார்கள் இதே பிளாட்பார்ம் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

8.5 ஆண்டுகளில் 5.50 லட்சம் கார்கள் விற்பனை... புதிய மைல்கல்லை எட்டியது மாருதி சுஸுகி எர்டிகா எம்பிவி

மாருதி சுஸுகி எர்டிகா எம்பிவி காரில், ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், 3D டெயில்லேம்ப்கள், ஆட்டோமெட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், முன் பகுதியில் இரண்டு ஏர் பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன. அதே சமயம் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மாடலில், ஹில் ஹோல்டு ஃபங்ஷன் மற்றும் இஎஸ்பி ஆகிய வசதிகள் உள்ளன.

Most Read Articles
English summary
Maruti Suzuki Ertiga Sales Cross 5.50 Lakh Units - Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X