சத்தியமா நம்ப முடியல... வின்டேஜ் காராக மாற்றப்பட்ட மாருதி ஜிப்ஸி... எவ்வளவு செலவு ஆச்சுனு தெரியுமா?

மாருதி சுஸுகி ஜிப்ஸி கார் ஒன்று, கிளாசிக் வின்டேஜ் காராக மாடிஃபிகேஷன் செய்யப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சத்தியமா நம்ப முடியல... வின்டேஜ் காராக மாற்றப்பட்ட மாருதி ஜிப்ஸி... எவ்வளவு செலவு ஆச்சுனு தெரியுமா?

இந்தியாவின் கார் மார்க்கெட் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு வெளிநாட்டு கார் நிறுவனங்கள், இந்தியாவை நோக்கி படையெடுத்து வருகின்றன. அத்துடன் அதிநவீன வசதிகளுடன் கூடிய பல்வேறு புதிய கார் மாடல்களையும் அவை அறிமுகம் செய்து கொண்டுள்ளன. எனவே இன்று சந்தையில் நமக்கு எக்கச்சக்கமான கார் மாடல்கள் கிடைக்கின்றன.

சத்தியமா நம்ப முடியல... வின்டேஜ் காராக மாற்றப்பட்ட மாருதி ஜிப்ஸி... எவ்வளவு செலவு ஆச்சுனு தெரியுமா?

ஆனால் என்னதான் புதுப்புது கார்கள் சந்தைக்கு வந்தாலும், கிளாசிக் வின்டேஜ் கார்கள் மீது பைத்தியமாய் இருப்பவர்களும் இங்கு இருக்கவே செய்கின்றனர். கிளாசிக் வின்டேஜ் கார்களை சேகரித்து பாதுகாப்பதற்கு என இங்கு பெரிய கூட்டமே உள்ளது. கிளாசிக் வின்டேஜ் கார்களை இன்னும் புதிது போல பராமரித்து வரும் பலரை நாம் பார்த்துள்ளோம்.

MOST READ: பருவமழை வரப்போகுது... உங்க வண்டிக்கு எக்ஸ்ட்ரா கவனிப்பு ரொம்ப முக்கியம்... என்ன பண்ணணும்னு தெரியுமா?

சத்தியமா நம்ப முடியல... வின்டேஜ் காராக மாற்றப்பட்ட மாருதி ஜிப்ஸி... எவ்வளவு செலவு ஆச்சுனு தெரியுமா?

கிளாசிக் வின்டேஜ் கார்களை சேகரிப்பவர்கள் ஒரு பக்கம் என்றால், கார்களை மாடிஃபிகேஷன் செய்வதிலும் சிலர் அதீத ஆர்வம் கொண்டவர்களாக உள்ளனர். இந்த இரு ரசனைகளும் ஒன்றோடு ஒன்று கலந்தால் என்ன நடக்கும்? என்பதற்கு உதாரணமாக பிரம்மிப்பூட்டும் நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. ஆம், மாருதி சுஸுகி ஜிப்ஸி கார் ஒன்று, கிளாசிக் வின்டேஜ் கார் போன்ற தோற்றத்தில் மாடிஃபிகேஷன் செய்யப்பட்டுள்ளது.

சத்தியமா நம்ப முடியல... வின்டேஜ் காராக மாற்றப்பட்ட மாருதி ஜிப்ஸி... எவ்வளவு செலவு ஆச்சுனு தெரியுமா?

கிளாசிக் வின்டேஜ் கார் போல மாடிஃபிகேஷன் செய்ததன் மூலம், வழக்கத்திற்கு மாறான ஒரு அவதாரத்தை மாருதி சுஸுகி ஜிப்ஸி காருக்கு அவர்கள் வழங்கியுள்ளனர். மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட இந்த காரின் போட்டோக்களை பார்ப்பவர்கள், உண்மையில் இது ஒரு மாருதி சுஸுகி ஜிப்ஸி என்று சொன்னால் கண்டிப்பாக நம்ப மாட்டார்கள்.

சத்தியமா நம்ப முடியல... வின்டேஜ் காராக மாற்றப்பட்ட மாருதி ஜிப்ஸி... எவ்வளவு செலவு ஆச்சுனு தெரியுமா?

அந்த அளவிற்கு கலை நயத்துடன் இந்த மாடிஃபிகேஷனை செய்துள்ளனர். கடின உழைப்பின் மூலமாக இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த காரை உருவாக்க அதிக நேரமும் தேவைப்பட்டுள்ளது. ஆனால் இறுதியில் ரிசல்ட் பிரமாதமாக உள்ளது. இந்த படங்களை பார்த்து, இது மாருதி சுஸுகி ஜிப்ஸி என்பதை உங்களால் நம்ப முடியவில்லை என்றால், அதுதான் இந்த மாடிஃபிகேஷனுக்கு கிடைத்த வெற்றி.

சத்தியமா நம்ப முடியல... வின்டேஜ் காராக மாற்றப்பட்ட மாருதி ஜிப்ஸி... எவ்வளவு செலவு ஆச்சுனு தெரியுமா?

மாருதி சுஸுகி ஜிப்ஸி கார் பற்றிய அறிமுகமே யாருக்கும் தேவையில்லை. இந்தியாவின் மிகவும் பிரபலமான கார்களில் ஜிப்ஸியும் ஒன்று. குறிப்பாக இந்திய ராணுவம்தான் ஜிப்ஸியை அதிக அளவில் பயன்படுத்தியது. இதன் அட்டகாசமான ஆஃப் ரோடு திறன்கள் காரணமாக, சாகச பயணங்களை மேற்கொள்பவர்கள் மத்தியிலும் ஜிப்ஸிக்கு தனி மதிப்பு உள்ளது.

சத்தியமா நம்ப முடியல... வின்டேஜ் காராக மாற்றப்பட்ட மாருதி ஜிப்ஸி... எவ்வளவு செலவு ஆச்சுனு தெரியுமா?

இந்திய ராணுவம் தற்போது ஜிப்ஸிக்கு பதிலாக, டாடா சபாரி ஸ்ட்ரோம் கார்களை பயன்படுத்த தொடங்கி விட்டாலும் கூட, ஜிப்ஸியை நேசிக்க கூடிய பலர் இன்றும் இருக்கவே செய்கின்றனர். ஜிப்ஸியை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பலர் மாடிஃபிகேஷன் செய்து வைத்துள்ளனர். ஆனால் இப்படி கிளாசிக் வின்டேஜ் தோற்றத்தில், ஜிப்ஸியை இதற்கு முன் நாம் பார்த்திருப்போமா? என்பது சந்தேகமே.

சத்தியமா நம்ப முடியல... வின்டேஜ் காராக மாற்றப்பட்ட மாருதி ஜிப்ஸி... எவ்வளவு செலவு ஆச்சுனு தெரியுமா?

பொதுவாக மஹிந்திரா தார், மாருதி சுஸுகி ஜிப்ஸி மற்றும் இன்னும் பிற எஸ்யூவி கார்கள்தான் அதிகளவில் மாடிபிகேஷன்கள் செய்யப்படுகின்றன. குறிப்பாக கேரளா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில், கார்களை மாடிபிகேஷன் செய்வதில் பலர் ஆர்வம் காட்டுகின்றனர். இதன்படி இந்த ஜிப்ஸி காரும் கூட, பஞ்சாப் மாநிலத்தில்தான் கிளாசிக் வின்டேஜ் காராக மாடிஃபிகேஷன் செய்யப்பட்டுள்ளது.

சத்தியமா நம்ப முடியல... வின்டேஜ் காராக மாற்றப்பட்ட மாருதி ஜிப்ஸி... எவ்வளவு செலவு ஆச்சுனு தெரியுமா?

பஞ்சாப்பின் ஜலந்தரில் உள்ள கோரயா சிட்டி பகுதியில் இந்த காரை மாடிஃபிகேஷன் செய்துள்ளனர். இந்த காரின் முன் பகுதி பெரிய க்ரோம் க்ரில் அமைப்பை பெற்றுள்ளது. சில பழைய கார்களில் இருப்பதை போன்ற தோற்றத்தில், இந்த க்ரில் அமைப்பு உள்ளது. இதற்கு அடுத்தபடியாக பம்பரும் ரீ-டிசைன் செய்யப்பட்டுள்ளது. அங்கும் க்ரோம் வேலைப்பாடுகளை பார்க்க முடிகிறது.

சத்தியமா நம்ப முடியல... வின்டேஜ் காராக மாற்றப்பட்ட மாருதி ஜிப்ஸி... எவ்வளவு செலவு ஆச்சுனு தெரியுமா?

அதேபோல் ஜிப்ஸி காரின் ஸ்டாக் ஹெட்லைட்கள் மாற்றப்பட்டு, அதற்கு பதிலாக வட்ட வடிவில் 2 லைட்கள் பொருத்தப்பட்டுள்ளன. கிளாசிக் வின்டேஜ் கார் தோற்றம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, பாடி ஒர்க்கை பார்த்து பார்த்து செய்துள்ளனர். அதிகம் மெனக்கெட்டு இந்த வேலையை செய்திருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

சத்தியமா நம்ப முடியல... வின்டேஜ் காராக மாற்றப்பட்ட மாருதி ஜிப்ஸி... எவ்வளவு செலவு ஆச்சுனு தெரியுமா?

இந்த காரின் வீல் ஆர்ச்கள் மிகவும் பெரியதாக உள்ளன. மேலும் பானெட் மிகவும் நீளமாக காணப்படுகிறது. 4 பேர் சௌகரியமாக அமர்ந்து பயணம் செய்யும் வகையில் இந்த கார் டிசைன் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மேற்கூரை இல்லை என்பதும் கவனிக்கத்தக்க விஷயமாக உள்ளது. இதுதவிர இன்டீரியர்கள் மற்றும் டேஷ்போர்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்னும் கிளாசிக் லுக் கிடைக்கிறது.

சத்தியமா நம்ப முடியல... வின்டேஜ் காராக மாற்றப்பட்ட மாருதி ஜிப்ஸி... எவ்வளவு செலவு ஆச்சுனு தெரியுமா?

ஆனால் ரெகுலர் டயர் மற்றும் அலாய் வீல்கள்தான் கொடுக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் கூட ஜிப்ஸி என்பதே தெரியாத அளவிற்கு பிரமாதமாக மாடிஃபிகேஷன் செய்துள்ளனர். இப்படி ஜிப்ஸிக்கு கிளாசிக் வின்டேஜ் கார் லுக்கை கொடுப்பதற்காக சுமார் 10 லட்ச ரூபாய் செலவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் பணிகளை முடிப்பதற்கு சுமார் 6 மாத காலம் ஆனதாக கூறப்படுகிறது.

Source: Cartoq

Image Courtesy: Adv Anuroop Singh Kundi

Most Read Articles
English summary
Maruti Suzuki Gypsy Modified Into Classic Vintage Car. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X